
அவனுடைய தாய் படுக்கையறையில் நடக்கும் சத்தம் கேட்கிறது. அவள் தனக்குத் தானே கூறிக் கொள்கிறாள்:
"ஆயுள் முழுக்க நாடு கடத்துறதுன்னு கேள்விதான் பட்டிருக்கேன். இப்போ நானே அதை அனுபவிக்கிறேன்!"
அலமாரியை வேகமாக அடைக்கும் சத்தம்.
அவனின் தாயின் உரத்த குரல்:
"இந்த அறையைப் பெருக்க இதுவரை யாருக்கும் நேரம் கிடைக்கலியா, நாணியம்மா?"
உண்ணி வேகமாக நர்சரி பாடல் ஒன்றை படிக்கிறான்- சற்று உரத்த குரலில்,
Humpty Dumpty sat on a wall
Humpty Dumpty had a great hall
All the kings horses and all the kings men
Could not put Humpty together again!
ஆற்றங்கரை.
என்னவோ யோசனையில் ஆழ்ந்தவாறு நின்றிருக்கிறான் வர்மா. மாலை நேர நடை என்று வந்த மனிதன், அது முடிந்து திரும்புவதற்கு முன்னால் என்னவோ சிந்தனை மனதில் தோன்ற, அங்கேயே நின்றுவிடுகிறான்.
அவன் திரும்பிப் போக நினைக்கும்போது, சுற்றிலும் பார்க்கிறான். பிறகு அழைக்கிறான்:
“உண்ணி!”
ஆலமரத்தைச் சுற்றி ஓடி விளையாடிக் கொண்டிருக்கும் உண்ணியையும் பாருவையும் அவன் பார்க்கிறான்.
வர்மா: உண்ணி, போகலாம்!
உண்ணி விளையாட்டை நிறுத்திவிட்டு வர்மாவின் அருகில் வருகிறான். உண்ணியும் வர்மாவும் நடக்க ஆரம்பிக்கும்போது நேர் எதிரில் வந்து கொண்டிருக்கும் கிழவன் சாத்தன்:
“வயலுக்குப் போகலாம்னு நினைச்சேன். அப்போ பாருதான் சொன்னா நீங்க இங்க இருக்குறதா!”
வர்மா: என்ன சாத்தா?
சாத்தன்: நீலியைப் பத்தித்தான். ஆதரவு இல்லாத தனிக்கட்டை. வீடு இல்லாம ஆக்கிட்டா, பாவம் அவ எங்கே போவா தம்புரான்?
வர்மா: (தயங்கியவாறு) நான்... நான் ஒண்ணும் சொல்லலியே!
சாத்தன்: அந்த கோபாலன் தம்புரான் என்கிட்ட சொன்னாரு. நான் அவக்கிட்ட இந்த விஷயத்தைச் சொன்னப்போ...
உண்ணி இந்தப் பேச்சை உன்னிப்பாக காது கொடுத்து கேட்பதை வர்மா கவனிக்கிறான். ஒரு நிமிடம் என்னவோ சிந்திக்கிறான்.
வர்மா: உண்ணி, முன்னாடி நடந்துபோ. நான் பின்னாடி வர்றேன்.
சாத்தன்: (தூரத்தில் தயங்கி நின்றிருக்கும் பாருவைப் பார்த்து) அடியே, நீ சின்ன தம்புரான் கூடப்போ. ஆடு, மாடு எதிர்ல வந்தா கொஞ்சம் விலகி நிக்கணும். தெரியுதா? பத்திரமா கூட்டிட்டுப் போகணும். (பிறகு வர்மாவிடம்) அவ காலம் முடிஞ்சிருச்சுன்னா அதுக்குப் பிறகு அந்த வீட்டை ஒரேயடியா இல்லாமப் பண்றதோ இல்லாட்டி அந்த இடத்துல ஏதாவது நட்டு வளர்க்கவோ எது வேணும்னாலும் செய்யட்டும். கவலையே இல்ல.
உண்ணி நடக்கும்போது சாத்தனின் வார்த்தைகள் காதில் கேட்கின்றன.
உண்ணிக்கு கொஞ்சம் கூட புரியாத விஷயங்கள் இவை. அவன் முன்னால் நடக்கிறான். பாரு ஓடி அவனுடன் சேர்ந்து கொள்கிறாள்.
பாருவும் உண்ணியும் நடக்கிறார்கள். வெள்ளரிக் கொடியை நெருங்கும்போது பாரு:
“வெள்ளரிக்காய் வேணுமா?”
உண்ணி பதில் சொல்ல முயற்சிக்கும்போது, வாழை மரங்களுக்கு மத்தியில் நீலியைப் பார்க்கிறான்.
நீலி: (பாருவிடம்) தாத்தாவை எங்கேடி?
பாரு: வர்றாப்ல. பெரிய தம்புரான் கூட அவரு பேசிக்கிட்டு இருக்காரு. இவனை... (தன்னைத் திருத்திக் கொண்டு) சின்ன தம்புரானை என்னை கூட்டிட்டுப் போகச் சொன்னாரு.
வேலிக்கு அருகில் வருகிறாள் நீலி.
உண்ணி: (தனக்குத் தானே) கோபாலன் நாயருக்கு நிச்சயம் கருங்கண்ணு இருக்கு!
நீலி: (வியப்புடன்) அப்படியா?
உண்ணி: கருங்கண்ணு வச்சிருக்காரு நீலி, உன் குடிசை மேல...
நீலி சிரிக்கிறாள். சிரித்து முடிக்கும்போது கம்பீரமான குரலில்-
நீலி: கருங்கண்ணு வச்சிருக்கவங்களை எப்படி அடிச்சு விரட்டுறதுன்னு எனக்குத் தெரியும். உண்ணி தம்புரான், நீங்க நடங்க.
உண்ணியும் பாருவும் வீட்டை நோக்கி நடக்கிறார்கள்.
வீட்டின் முன்பக்கம்.
இந்திராவுக்கு கிண்டல் கலந்த கோபம். அருகில் கோபாலன் நாயர் நின்றிருக்கிறார்.
இந்திரா: அவ என்ன பெரிய பத்ரகாளியா பயந்து நடுங்குறதுக்கு? இந்த ஊர்ல இருக்குற முக்கியமான ஆட்கள்ல ஒரு ஆளு நீங்கன்னு இங்க இருக்குறவங்க சொன்னாங்களே!
கோபாலன் நாயர்: (சிரிக்க முயற்சி செய்து) பயம்னா நீங்க நினைக்கிற மாதிரி பயமில்ல. பஞ்சாயத்து தேர்தல் சீக்கிரமே வர இருக்கு. நம்ம வார்டுல நான் நிக்கணும்னு பலரும் சொல்றாங்க.
உண்ணி அருகில் வருகிறான்.
இந்திரா: அப்பாவை எங்கே?
உண்ணி: வந்துக்கிட்டு இருக்கார்.
கோபாலன் நாயர்: நான்...
அவர் நின்று கொண்டிருப்பதைப் பற்றி கவலையே படாமல் இந்திரா உண்ணியைச் சற்று தள்ளி நிறுத்தி வேண்டுமென்றே ஒரு சிரிப்பை வரவழைத்துக் கொண்டு:
“அப்பா ஆன்ட்டி வீட்டுக்குப் போன உடனே, உன்னை முன்னாடி நடந்து போகச் சொன்னாருல்ல?”
உண்ணி: இல்ல...
இந்திரா: பொய் சொல்லக் கூடாது. அப்பம் தந்த ஆன்ட்டியா? இல்லாட்டி கண்ணாடி போட்ட ஒரு ஆன்ட்டியா?
உண்ணி: மீன் பிடிக்கிற சாத்தன்கிட்ட என்னமோ அப்பா சொல்லிக்கிட்டு இருந்தாரு.
பிறகு உண்ணி கோபாலன் நாயரைப் பார்க்கிறான். கூர்மையாகப் பார்த்துக் கொண்டிருந்த கோபாலன் நாயர் உண்ணியைப் பார்த்து சிரிக்க முயற்சிக்கிறார்.
இந்திரா (தொனியை மாற்றி) கோ டூ யுவர் ரூம். ஏ.பி.சி.டி. ஃபோர் டைம்ஸ், ஒன் டூ ஹன்ட்ரட் ஃபோர் டைம்ஸ் எழுதணும். புத்தகத்தை கையிலயே எடுக்காம அப்பாகூட சும்மா சுத்தித் திரிஞ்சா போதுமா?
உண்ணி என்ன செய்வதென்று தெரியாமல் பேந்தப் பேந்த விழிக்கிறான். தன் தாயிடம் அடுத்தடுத்து உண்டாகும் உணர்ச்சி மாற்றங்களைப் புரிந்து கொள்ள முடியாமல் அவன் தவிக்கிறான்.
கோபாலன் நாயரின் குரல்:
“பார்க்குறேன்னு சொல்லாம வேற நான் என்ன சொல்றது?”
பகல் நேரம்.
நீலியின் குடிசை. பின்புலத்தில் வயல். நீலியும் உண்ணியும்.
Half Way
நீலி: வேற உங்களுக்கு என்ன பாட்டு தெரியும்?
உண்ணி: அதுக்குப் பிறகு நான் ஒண்ணும் படிக்கலியே!
நீலி: பள்ளிக்கூடத்துல படிக்கிற இங்கிலீஷ் பாட்டு மட்டும்தான் தெரியுமா? அம்மா வர்றப்போ பெட்டி பாட்டொண்ணும் கொண்டு வரலியா?
அவள் என்ன சொல்கிறாள் என்பது உண்ணிக்குப் புரியவில்லை.
உண்ணி (சிறிது நேர யோசனைக்குப் பிறகு)
ஓ... ஸ்டீரியோவைச் சொல்றியா? கேசட் வைக்கிற ஸ்டீரியோ.
நீலி: எனக்கு அதோட பேரெல்லாம் தெரியாது. நான் ஒரு முட்டாள்தானே!
உண்ணி அதைக் கேட்டு சிரிக்கிறான்.
உண்ணி: ஸ்டீரியோவை அப்பா யாருக்கோ கொடுத்துட்டார். சங்கராபரணம் பாட்டுன்னா அப்பாவுக்கு ரொம்பவும் பிடிக்கும். நாஸியா ஹஸன் பாட்டை வைக்க அவர் சம்மதிக்கவே மாட்டார்.
நீலி: எங்கேயுள்ள அஸ்ஸன்?
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook