ஆரூடம் - Page 24
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 6954
63
தனியாக இருக்கும் நீலியின் வீட்டின் முன்னால் உண்ணி நின்றிருக்கிறான். எந்தவிதமான சத்தமும் அங்கு இல்லை.
பிறகு மெதுவாக நடந்து சென்று சற்று தள்ளியிருந்த புறம்போக்கு நிலத்தில் புதிதாக பிணத்தைப் புதைத்த இடத்தில் நிற்கிறான்.
உடைந்த மண் சட்டிகள், பிணத்தைப் புதைத்த பிறகு வைத்த வாழைக்கன்று.
சிந்தனை வயப்பட்டு உண்ணி நின்றிருக்க, பின்னால் ஒரு தேம்பல் சத்தம். உண்ணி திரும்பிப் பார்த்தால், சற்று தூரத்தில் வர்மா நின்றிருக்கிறான். அவன் பயந்து போய் வர்மாவின் அருகில் வருகிறான். உண்ணிக்கு புரிகிறது. தன் தந்தையின் பார்வை தன் மீது அல்ல- எங்கோ தொலை தூரத்தில் என்பதை அவன் புரிந்து கொள்கிறான். அவனுடைய தந்தையின் கண்கள் கலங்கி இருக்கின்றன.
அருகில் வந்த உண்ணியைச் சேர்த்து பிடித்துக் கொண்ட வர்மா திரும்பி நடக்கும்போது-
சற்று தூரத்தில் இந்திரா.
இந்திரா தலையைக் குனிந்து கொள்கிறாள்.
தந்தையும், மகனும் நடந்து செல்கிறார்கள். அவர்களுக்குப் பின்னால் இந்திரா.
குடும்பம். நடுவில் உண்ணியும் அவனின் இரு பக்கங்களிலும் தந்தையும் தாயும் நடக்க அந்த மூன்று பேரும் நம்மிடமிருந்து விலகி விலகி போய்க் கொண்டிருக்கிறார்கள்.