விலைமகளிரே, உங்களுக்கு ஒரு ஆலயம்
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7196
ஹரித்வாருக்கு செல்லும்போது தன்னுடன் ஒரு விலைமாதுவையும் அழைத்துச் செல்லவேண்டு மென்று அவன் முடிவுசெய்தான்.
அவனுடைய வீட்டிற்கு எப்போதும் விலைமகளிர் வருவதுண்டு. அலுவலகத்திலோ எப்போது பார்த்தாலும் விலைமகளிர் தொலை பேசியில் தொடர்புகொண்ட வண்ணம் இருப்பார்கள். ரெஸ்ட்டாரென்டில் விலை மகளிருடன் ஒன்றாக அமர்ந்துதான் அவன் காபி குடிப்பதே. காலரிகளில் ஓவியக் கண்காட்சிகளைப் பார்ப்பதற்குப் போகும்போது கூட அவனுடன் விலை மகளிர் இருப்பார்கள். எல்லா செவ்வாய்க்கிழமைகளிலும் அனுமன் கோவிலுக்கு வழிபடச் செல்வதும் விலைமகளிர் புடைசூழத் தான்.
சிதைக்குச் செல்வதுகூட விலைமகளிருடன்தான் இருக்கும்.
அவன் வாழ்க்கையே விலைமாதர்களின் தெருக்கோவிலாகிவிட்டது.
ஒரு விலைமகளின் வயிற்றில் பிறக்காமல் போய்விட்டோமே என்பதுதான் அவன் வாழ்க்கையிலேயே இருக்கும் மிகப்பெரிய கவலை. ஒரு நல்ல குடும்பத்தைச் சேர்ந்த- பொன் போன்ற குணத்தைக்கொண்ட தாயின் கர்ப்பப்பையில்தான் அவன் உருவானான். தந்தைக்கு சொந்தமானதைத் தவிர, வேறு யாருடைய உயிரணுக்களும் உள்ளே நுழைந்திராத அந்த கர்ப்பப்பையில்தான் அவன் ரத்தத்திலும், சதையிலும் எலும்பிலும் உருவானான். அதுதான் துயரமே.
நெப்போலியன், சே குவேரா, பாப் டைலன் ஆகியோரின் துயரங்களும் அதேதான். எர்வின் ஸ்ட்ரீட் மேட்டரும், விற்றோல்ட் காம்போவிக்கும் அதே துயரம் நிறைந்த சிலுவைகளில் கிடக்கிறார் கள். புத்தன், ஏசு ஆகியோரின் துயரமும் அவனுடைய துயரம்தான்.
நெப்போலியனும் சே குவேராவும் பாப் டைலனும் ஏன் ஒரு விலைமகளின் கர்ப்பப்பையில் பிறக்க வில்லை?
ஸ்ட்ரீட் மேட்டரும், காம்போவிக்கும் ஏன் விலைமாதுக்களின் பிள்ளைகளாக இருக்கவில்லை?
புத்தனும் இயேசுவும் ஏன் விலைமாதுக்களின் வயிற்றில் பிறவி எடுக்கவில்லை?
அவன் விலைமாதின் கர்ப்பப்பையில் பிறக்க வில்லை; உண்மைதான். ஆனால் அவன் விலைமகள்களுடன் வாழ்வான். அவர்களை இறுக அணைத்துக் கொண்டுதான் இறப்பான். ஒரு விலைமகளுடன் சேர்ந்து மட்டுமே அவன் இறப்பான்.
ஹரித்வாருக்கு செல்வதுகூட ஒரு விலைமகளுடன் சேர்ந்துதான் என்பதும் உண்மைதான்.
"கரால்பாக்'கில் இருக்கும் சாந்தா என்ற விலைமாது சொன்னாள்:
“ஹரித்வாருக்கு நானும் வருகிறேன்.''
சாந்தா திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்தவள்.
அவள் கருத்து, மெலிந்துபோய் காணப்படுவாள்.
அவளுக்கு காலில் ஊனம்.
"தரியாகஞ்ச்'சை சேர்ந்த காந்தா என்ற விலைமாது கேட்டாள்:
“நானும் வரட்டுமா?''
காந்தா திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்தவள் அல்ல. கருத்து மெலிந்திருப்பவள் அல்ல. கால் ஊனம் உள்ளவளும் அல்ல.
காந்தா சாந்தா அல்ல.
காந்தா பஞ்சாபைச் சேர்ந்தவள். அவளுக்கு கோதுமையின் நிறம். தலைமுடியில் கடுகெண் ணெய்யைத் தேய்த்து, எப்போதும் சீவி விட்டிருப்பாள்.
காந்தா காந்தாதான்.
சாந்தா சாந்தாதான்.
காந்தா காந்தாவாகவும், சாந்தா சாந்தாவாகவும் இருக்கிறார்கள்.
"டிஃபன்ஸ் காலனி'யில் இருக்கும் லதாவிற்கு பதினெட்டு வயது. "யாங்கி' பாணியில் ஆங்கிலம் பேசுவாள். பீட்டில்ஸை வழிபடக் கூடியவள். பெல்பாட்டம் பேன்ட்டையும், கோகோ குர்தாவையும் அணிந்திருப்பாள். மூக்கின்மீது மூக்குத்தி இருக்கிறது.
லதா என்ற விலைமாது சொன்னாள்.
“நானும் வருகிறேன்.''
அவள் வெறுமனே வரமாட்டாள். பணம் தரவேண்டும். ஒவ்வொரு நிமிடமும் அவளுக்கு விலைமதிப்பு கொண்டது. ஒரு மணி நேரத்திற்கு எழுபத்தைந்து ரூபாய் அவளுடைய விலை. ஹரித்வாரில் மூன்று நாட்களை செலவழிக்க திட்டமிட்டிருக்கிறான்.
“உனக்கு எவ்வளவு ரூபாய் வேண்டும்?''
“ஐந்நூறு ரூபாய் தர முடியுமா?''
“தருகிறேன்.''
லதா போதும். அவளுடைய மூக்குத்தி போதும். அவளுடைய பெரிய பின்பாகம் போதும். ஐந்நூறு ரூபாய் புல்லுக்கு இணை. பத்து நாட்களுக்கான சம்பளம். பத்து நாட்களுக்கான சம்பளத்தை மட்டுமல்ல... ஒரு மாதத்திற்கான சம்பளம் முழுவதையும்கூட கொடுக்கலாம். ஒரு வருடம் வாங்கக் கூடிய சம்பளத்தைத் தரலாம். வாழ்நாள் முழுவதும் பெறக்கூடிய சம்பளத்தையும் கொடுக்கலாம்.
நீ போதும்... உன்னுடைய மூக்குத்தி போதும்...
“ஐந்நூறு அதிகமா?''
“இல்லை. குறைவு...''
“அப்படின்னா ஆயிரம் ரூபாய் தர முடியுமா?''
“பத்தாயிரம் தரலாம்.''
பத்தாயிரம் என்பது யானையின் விலை. யானையைவிட மதிப்பு உள்ளவளாயிற்றே விலைமாது!
“கையில் இருந்தால் தருவீர்கள் என்பது எனக்குத் தெரியும்.''
தொலைபேசியில் மணி ஒலிப்பதைப்போல அவள் சிரித்தாள். அவளுக்கு அவன்மீது காதல்.
அவனுடைய சதைப் பிடிப்பான கைகள், கால்கள், நீளமான கழுத்து, விரிந்த நெஞ்சு, பைப்பின் கறைபடிந்த சிரிப்பு.. அனைத்துமே அவளுக்கு பிடித்த விஷயங்கள்தாம்.
அவளுக்கு மட்டுமல்ல அவன் மீது காதல்.
"கரால்பாக்'கின் சாந்தாவிற்கும் காதல்...
சாந்தாவிற்கு மட்டுமல்ல காதல்-
"தரியாகஞ்ச்'சின் காந்தாவிற்கும் அவன்மீது காதல்...
லதாவிற்கும் சாந்தாவிற்கும் காந்தாவிற்கும் மட்டுமல்ல; நகரத்தின் எல்லா விலைமாதர்களும் அவனைக் காதலிக்கிறார்கள்.
அவன் விலைமகன்களின் ஆலயம்.
இராவணன் என்ற அரக்கனுக்காக மனிதன் ஆலயங்களை உருவாக்கினான். அனுமன் என்ற குரங்கிற்காகவும் நாடு முழுவதும் அவன் ஆலயங்கள் கட்டினான். சிவனுடைய சிறுநீர் கழிக்கும் உறுப்பை அவன் பிரதிஷ்டை செய்து வழிபட்டான்.
விலைமகள்களுக்காக யாரும் ஆலயங்கள் உருவாக்கவில்லை.
அவன் உருவாக்குவான். நாடு முழுவதும், வாழ்க்கை முழுவதும் அவர்களுக்காக அவன் ஆலயங்களைக் கட்டுவான்.
திரிவேணி கட்டத்தில் இருக்கும் துறவிகளே, விலைமகள்களுக்காக காயத்ரி மந்திரங்களைக் கூறுங்கள்.
அர்ச்சகர்களே, விலைமகள்களுக்காக பூஜை செய்யுங்கள்.
மணிகளே, விலைமகள்களுக்காக ஒலியுங்கள்.
தீபங்களே, விலைமகள்களுக்காக பிரகாசமாக எரியுங்கள்.
மனிதனுக்கு சுகத்தைக் கொடுத்துக் கொடுத்து, சமுதாயம் என்ற நாறிக் கொண்டிருக்கும் ஓடையில் பால்வினை நோய் வந்து இறந்து அழிந்துபோகும் விலைமாதுக்களுக்காக உலகமே, நீ கண்ணீரைச் சிந்து... விலைமகள்கள் கடவுளின் தூதுவர்கள்... தவம் செய்யும் துறவிகள்... தேவதைகள்.. விலைமகள்களே, உங்களுக்காக நான் கண்ணீர் சிந்துகிறேன்.
“நான் எங்கு வரணும்?''
லதாவின் குரல் மீண்டும் தொலைபேசியில் கேட்டது.
“வீட்டில் தயாராக இரு. காலையில் ஆறு மணிக்கு...''
சூட்கேஸில் சட்டைûயும் பேன்ட்டையும் எடுத்து வைத்தான். தேவைப்படக்கூடிய வேறுசில சிறுசிறு பொருட்களையும்... அந்தப் பட்டியலில் ஆஃப்டர் ஷேவ் லோஷனும் ஒடிகொலானும் இருந்தன. ஒரு பெரிய டின் புகையிலையும், மூன்று பைப்புகளும்...