
சுராவின் முன்னுரை
ஆஸ்ட்ரிய எழுத்தாளர் ஜோசப் ரோத் (Joseph Roth) ஆங்கிலத்தில் எழுதிய ‘The Legend of the Holy Drinker’ என்ற புதினத்தைப் படித்தேன். படித்த கணத்திலேயே தமிழில் அதை மொழிபெயர்க்க வேண்டும் என்று மனதிற்குள் தீர்மானித்துவிட்டேன். காரணம் - அதில் கையாளப்பட்டிருந்த விஷயம். வாழ்க்கையில் அதிர்ஷ்டம் என்ற ஒன்று ஒவ்வொரு மனிதனையும் தானே தேடிவந்து வாசல் கதவைத் தட்டுகிறது.
சிலர் அதைப் பயன்படுத்திக்கொண்டு முன்னுக்கு வந்து விடுகிறார்கள். வேறு சிலரோ அதைக் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு, நாளும் கஷ்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அன்றாட வாழ்க்கையில் நாம் நித்தமும் காணும் ஒரு விஷயம் இது. நம்மைத் தேடிவரும் அதிர்ஷ்டத்தை எப்படி கையைவிட்டு போய்விடாமல் மிகவும் கவனமாக நம் கைக்குள்ளேயே நாம் பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை ஒரு கதை வடிவத்தில் ஜோசப் ரோத் இந்தப் புதினத்தில் கூறியிருக்கிறார். வாழ்க்கையில் ஒவ்வொருவரும் தவறாமல் படிக்க வேண்டிய அற்புதமான படைப்பு இது என்பதே என் எண்ணம். வாழ்க்கையை, கதையாக அவர் எழுதியிருக்கிறார் என்றே நான் உணர்கிறேன். இந்த நூலை ஒருமுறை படித்துவிட்டால், அதற்குப் பிறகு வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் இதைப் படித்தவர்கள் யாராக இருந்தாலும் கண்களை அகலத் திறந்து வைத்துக் கொண்டு எச்சரிக்கையுடன் இருப்பார்கள் என்பது மட்டும் நிச்சயம்.
இந்த நல்ல நூலை இணையதளத்தில் வெளியிடும் லேகாபுக்ஸ்.காம் (www.lekhabooks.com) நிறுவனத்திற்கு நன்றி.
அன்புடன்,
சுரா (Sura)
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook