மரக்குதிரையின் வெற்றி வீரன்
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6392
சுராவின் முன்னுரை
மத்திய இங்கிலாந்தில் ஈஸ்ட்வுட் என்ற சுரங்கங்கள் நிறைந்த ஒரு நகரத்தில் பிறந்த டி.எச்.லாரன்ஸ் (D.H.Lawrence), ‘Sons and lovers’, ‘The white peacock’, ‘Rainbow’. ‘The Lost Girl’ ஆகிய நாவல்களை எழுதியவர். அவர் எழுதிய ‘Lady chatterly’s Lover’ என்ற நாவல் 1928-ஆம் ஆண்டில் மிகவும் ரகசியமாகப் பிரசுரிக்கப்பட்டது.
போரில் காயமடைந்து ஆண்மை சக்தியை இழந்த ஒரு மிகப் பெரிய பணக்கார போர்வீரரின் மனைவி, தன் கணவரின் தோட்டத்தில் வேலை செய்யும் ஒரு இளைஞனிடம் மனதைப் பறி கொடுக்கிறாள். உண்மை தெரிந்தும், அவளுக்கு அவர் விவாகரத்து அளிக்க தயாராக இல்லை. இந்த நாவல் அமெரிக்காவில் அப்போது தடை செய்யப்பட்டது.
டி.எச்.லாரன்ஸ் எழுதிய ‘The Rocking – Horse Winner’ என்ற புதினத்தை ‘மரக் குதிரையின் வெற்றி வீரன்’ (Marakkuthiraiyin vetri veeran) என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன். கதையின் நாயகனான சிறுவன் பால் அருமையான பாத்திரப் படைப்பு. மிகவும் வித்தியாசமான கருவைக் கொண்ட இந்தக் கதை எல்லாருக்கும் பிடிக்கும்.
நாவலாசிரியரான டி.எச். லாரன்ஸ் ஒரு மிகச் சிறந்த ஓவியரும்கூட. பல துணிச்சலான இலக்கியப் படைப்புகளை உலகிற்கு அளித்த அவர் 1930-ஆம் ஆண்டு ஃப்ரான்ஸில் மரணத்தைத் தழுவினார்.
இந்த நல்ல நூலை இணைய தளத்தில் வெளியிடும் லேகாபுக்ஸ்.காம் (lekhabooks.com) நிறுவனத்திற்கு என் இதயத்தின் அடித்தளத்திலிருந்து நன்றி.
அன்புடன்,
சுரா (Sura)