சப்தங்கள் - Page 10
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6377
இதுல ஏதாவதொரு சங்கத்துல நாங்க சேர்றதுக்கு முன்னாடி எங்களை குத்துவிளக்குபோல கூர்மையான ஒண்ணு பக்கத்து உட்கார வைப்பாங்க. வேதனையான சிகிச்சை தான். ரத்தம் நிறைய கொட்டும்... பிறகு எல்லாச் சடங்குகளும் நடக்கும். அன்னைக்கு சங்கத்தைச் சேர்ந்த எல்லாரும் வருவாங்க. ஒரே பாட்டும் அமர்க்களமுமா இருக்கும். பிறகு சவரக் கத்தியால முகத்துல இருக்குற ரோமங்களை நீக்குவாங்க. பெண்ணோட பேரை வைப்பாங்க. புடவையும் பாவாடையும் அணிவிப்பாங்க. பஞ்சு மார்பகங்களை அணிவிப்பாங்க. முடியை நீளமா தொங்க விடுவாங்க."
"உங்களைத் தேடி யாரெல்லாம் வருவாங்க?"
"பெண்களும் ஆண்களும்..."
"உனக்கு ஆண்களைப்போல...?"
"முடியாத விஷயம்!"
"பிறகு ஏன் பெண்கள் உன்னைத் தேடி வர்றாங்க?"
"தெரியலியா? அவங்களையும் நாங்கள் மகிழ்ச்சிப்படுத்துவோம்!"
"சரி... உன்னோட கதையை என்கிட்ட சொல்லு!"
"எனக்குக் கதை எதுவும் கிடையாது!"
"உன்னோடு சிறு பிராயக் காலத்தைப்பற்றி... உனக்கு அப்பா, அம்மா எல்லாம் இருக்காங்களா?"
"ம்... ஆனா... ரொம்ப தூரத்துல. நான் இப்போ இப்படி இருக்கேன்னு அவங்களுக்குத் தெரியாது. நான் நீங்க இப்போ தங்கி இருக்கீங்களே... அந்த வீட்ல தங்கி இருந்திருக்கேன். அங்கே இன்னைக்கு அவரோட மகளின் திருமணமாச்சே!"
"ஆமா..."
"அந்தப் பொண்ணோட அம்மாவுக்கு என்னை ரொம்பவும் பிடிக்கும்!"
நான் சொன்னேன்: "எனக்கு அம்மா இல்ல. நாலு ரோடுகள் சந்திக்கிற இடத்துல ஒரு பழைய துணியில சுற்றி, இருட்டுல கிடந்த குழந்தை நான்..." நான் சொன்னதை அவன், அது நம்பினதாகத் தெரியவில்லை.
அவன் ஒரு ஆண் விபச்சாரியாக ஆனது எப்படின்னு சொன்னான். அப்போ அவன் பள்ளிக்கூடத்துல படிச்சிக்கிட்டு இருந்துருக்கான். குருநாதர், நண்பர்கள் எல்லாமே அவன் வாழ்க்கையில் வர்றாங்க. நகரத்துல இருந்து ஐம்பது மைல் தூரத்துல இருந்த ஒரு கிராமத்துலதான் அவன் பிறந்தது. பதினாலு வயசு அவனுக்கு நடக்குறப்போ அவனோட குருநாதர் அவனை ஓரினச் சேர்க்கைக்கு பயன்படுத்திக்கிட்டாரு. குருநாதர்! சரிதான்... ஒழுக்கத்தைச் சொல்லித்தர வேண்டிய குருநாதர் இப்படி! சுய புணர்ச்சியில் ஒரு இன்பம் இருக்குன்னு அந்த ஆளுதான் சொல்லித் தந்தாரு. கொஞ்ச நாள் போன பிறகுதான் அவனுக்கே தெரிய வந்தது- நாடு முழுக்க இப்படிப்பட்ட காரியங்கள் பெரிய அளவுல நடந்துக்கிட்டு இருக்குன்னு. பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், மதப் பாடசாலைகள், கன்னியாஸ்திரீ மடங்கள், வைதீக ஆசிரமங்கள்... இந்த இடங்கள்ல இருக்குற உடலுறவு சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களையும் அவன் நாளடைவில் கற்றுக்கொண்டான். பதினாறு வயசு அவனுக்கு நடக்குறப்போ, அவன் நகரத்துல ஒரு ஹோட்டல்ல வேலை பார்க்கப் போனான். அங்கே இருந்த இன்னொருத்தன்கிட்ட இருந்து அவனுக்கு கொனொரியா நோய் கிடைச்சது. எல்லா ஹோட்டல்ல வேலைபார்க்குற வேலைக்காரர்களுக்கும் கொனோரியாவோ, ஸிஃபிலிஸ்ஸோ கட்டாயம் இருக்கும்! அவன் எங்கெங்கோ அலைஞ்சு திரிஞ்சு நகரத்தின் இந்தப் பகுதிக்கு வந்தான். நான் தங்கிக்கிட்டு இருந்த வீட்டு உரிமையாளரோட ட்ரைவர்கூட கொஞ்ச நாள் தங்கினான். அவன் மூலமா வீட்டுக்குள்ளே வர்றதுக்கு அவனுக்கு வாய்ப்பு கிடைச்சது. முதல்ல அவன் "பாய்" ஆகத்தான் இருந்தான். பிறகு... அந்தவீட்டு உரிமையாளரான பெரிய மனிதரின் கால் தொடைகள் வழியே மேல் நோக்கி அவனுக்குத் தடவுற வேலை. வீட்டு உரிமையாளரோட மனைவிக்கு காலை அமுக்கிவிட்டால் மட்டும் போதாது... அந்தக் காலத்துல அவனுக்கு ஆண்மைத்தனம் சொல்லிக்கிற மாதிரி இல்ல. இறுதியில்... அவன் வெளியே தெரியிற மாதிரி ஒரு ஆண் விபச்சாரியா ஆயிட்டான். அந்தத் தெரு முழுக்க ஆண் விபச்சாரிகள்தாம். கூட்டமா அவங்க வசதியானவங்க வீடுகள்ல போய் ஆடுவாங்க, பாடுவாங்க- வாத்தியங்கள், மேளங்கள் சகிதமா. இப்படி எத்தனையோ பேர்! பெண் விபச்சாரிகள் எவ்வளவு பேர் இருக்குறாங்களோ, அவ்வளவு ஆண் விபச்சாரிகளும் இருக்குறாங்க! அவன்கிட்ட இருந்துதான் எனக்கு ஸிஃபிலிஸும் கொனோரியாவும் கிடைச்சது...''
"உங்களுக்கா?''
"ஆமா...''
"இப்பவும் அது இருக்கா?''
"இருக்கு. உங்களுக்கு இது ஏற்கனவே தெரிஞ்சிருக்கும்னு நினைச்சேன்!''
"எதை வச்சு சொல்றீங்க?''
"துண்டும்...படுக்கையும்!''
"நான் சாதாரணமா என் படுக்கையில இன்னொருத்தரைப் படுக்க விடுறது இல்ல. நான் பயன்படுத்துற துண்டை இன்னொருத்தருக்குத் தர்றது இல்ல. அதற்கு வேற காரணங்கள் இருக்கு. இன்னொரு ஆள் குளிச்சு அவனோட உடம்பையும், மற்ற உறுப்புகளையும் துடைச்ச துண்டு... மற்றொரு ஆளின் வியர்வை பட்ட படுக்கை. மனிதர்கள் கிட்டத்தான் ஏகப்பட்ட நோய்கள் இருக்கே! அவற்றில் பல தொற்றிக் கொள்ளக்கூடியவை! ஆனால், என்னைத்தேடி நேரம், காலம் எதையும் பார்க்காம ஆளுங்க வருவாங்க. அதுனால ஒரு படுக்கையும் துண்டும் அடுத்த அறையில எப்பவும் இருக்கும்.''
"நான் வேற மாதிரி நினைச்சேன்!''
"இது பரவுமா?''
"வியர்வை மூலமாகவும், துண்டு பயன்படுத்தினாலும், படுக்கை மூலமாகவும், அணிகிற ஆடைகள் வழியாகவும்கூட இது பரவும்!''
"நீங்க அந்த அறையிலேயே இருந்தது ஒருவிதத்துல நல்லதாப் போச்சு!''
"நான் இப்போ ஒரு தாயின் கதையையும், அவளின் மகனின் கதையையும் கூறப் போறேன்!''
"நீங்க நகரத்துல தங்கி இருந்த அந்தப் பெரிய வீட்டைவிட்டு எப்போ வெளியேறினீங்க?''
"உடம்புக்கு ரொம்பவும் முடியாமப்போச்சு. அங்கே இருந்தவங்க முகத்தைப் பார்க்கவே எனக்கு என்னவோபோல் இருந்துச்சு. அவ்வளவுதான்- நான் வீட்டைவிட்டு வெளியேறிட்டேன். சாப்பிடுறதுக்கு ஒரு வழியும் இல்ல. நோய்க்கு சிகிச்சை பண்ண கையில் காசு இல்ல. தங்குறதுக்கு இடமில்ல. என்ன பண்றதுன்னு தெரியாம இங்கேயும் அங்கேயுமா அலைஞ்சிக்கிட்டு இருந்தப்ப தான் அம்மாவையும் பையனையும் நான் பாக்குறேன். அந்த அம்மா என் நெஞ்சில் ஓங்கி மிதிச்சாங்க!
அதைப்பற்றி நான் பிறகு சொல்கிறேன். அந்த ஆண் விபச்சாரி என்ன சொன்னான் தெரியுமா?
என்னையே வச்ச கண் எடுக்காமப் பார்த்தான். பிறகு சொன்னான்:
"நல்ல பலமும் அழகும் உள்ள ஆண்களைப் பாக்குறப்போ, என் மனசில இனம் புரியாத ஒரு விருப்பம் உண்டாகுது..."
நான் நாளைக்கு வர்றேன்னு சொல்லிட்டு கிளம்பிட்டேன். என் பாக்கெட்ல இருந்த பணம் எல்லாத்தையும் அவன் ஏற்கெனவே எடுத்திருந்தான்...''
"அப்படித்தான் உங்களுக்கு உடல்நலக் கேடு உண்டாச்சா?''
"ஆமா!''
"ரொம்பவும் வலி இருக்கா என்ன?''
"மூத்திரம் இருக்க முடியல. ஒரு கடல் அளவுக்கு மூத்திரம் வரப்போற மாதிரி இருக்கும். ஆனா, உட்கார்ந்தா வராது. ஒரே கடுகடுப்பு. மிளகாயை அரைச்சு தேய்ச்சா எப்படி இருக்கும்? அப்படியொரு எரிச்சல்... பிறப்பு உறுப்புக்குள்ளே நிறைய முட்கள் குத்துறது மாதிரி இருக்கும். பல்லைக் கடிச்சிக்கிட்டு, மூச்சை அடக்கிப் பிடிச்சிக்கிட்டு, கண்களால வெறிச்சிப் பார்த்துக்கிட்டு நான் மூத்திரம் பெய்வேன்.