தானியமும் கிழவர்களும்
- Details
- Category: சிறுகதைகள்
- Written by சுரா
- Hits: 7040
ஒரு நாள் ஒரு ஓடையில் சில குழந்தைகள் சோள விதையைப் போன்ற ஒன்றைக் கண்டெடுத்தார்கள். அந்த விதையின் நடுப்பகுதியில் ஒரு கோடு இருந்தது. ஆனால், அது ஒரு கோழி முட்டை அளவிற்குப் பெரியதாக இருந்தது. அந்த வழியாக நடந்து சென்ற ஒரு வழிப்போக்கர் அந்தக் குழந்தைகளிடம் ஒரு பென்னியைக் (காசு) கொடுத்து விட்டு, அதை வாங்கினான். ஆர்வ மிகுதியால் அதை நகரத்திற்குக் கொண்டு சென்று மன்னனிடம் விற்றுவிட்டான்.