
கூட்டமாக இருந்த பூனைகளுக்கு மத்தியில் புத்திசாலியான ஒரு நாய் கடந்து போனது.
அருகில் வந்த பிறகும் பூனைகள் தன்னை கவனிக்கவே இல்லை என்பதை நாய் புரிந்து கொண்டது. அது நின்றது.
அப்போது பூனைக் கூட்டத்திலிருந்து தைரியசாலியான ஒரு பெரிய பூனை தன் தலையை உயர்த்தி எல்லோரையும் பார்த்தது. பிறகு அது சொன்னது: ‘சகோதரர்களே! நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். திரும்பத் திரும்ப பிரார்த்தனை செய்யுங்கள். அப்போதுதான் உண்மையாகவே எலி மழை பெய்யும். சந்தேகப்படவே வேண்டாம்.’
அதைக்கேட்டதும் நாய்க்கு சிரிப்பு வந்தது. அது பூனைகள் பக்கம் திரும்பி நின்று சொன்னது: ‘குருடர்களே! முட்டாள்களே! பூனைகளே! முன்னோர்களும் எழுதி வைத்ததும் நானும் என்னுடைய பெற்றோர்களும் தெரிந்திருப்பதும் என்ன? பிரார்த்தனைக்கும் நம்பிக்கைக்கும் வேண்டுகோள்களுக்கும் பதிலாக மழை போல வந்து விழுந்தவை எலிகள் அல்ல, எலும்புகள்தான்.’
தனியாக இருந்த மலையில் இரண்டு துறவிகள் வாழ்ந்தார்கள். அவர்கள் ஒருவர் மீது ஒருவர் ஆழமான அன்பு செலுத்தினார்கள். கடவுளை அவர்கள் தொழுவார்கள்.
அவர்களிடம் சொந்தம் என்று இருந்தது ஒரே ஒரு மண் சட்டி மட்டும்தான்.
மூத்த துறவியின் இதயத்திற்குள் பிசாசு நுழைந்தது. அவர் இளைய துறவிக்கு அருகில் சென்று சொன்னார்: ‘நீண்ட காலமாக நாம ஒண்ணா இங்கே தங்கியிருக்கோம். நாம பிரிய வேண்டிய நேரம் வந்துவிட்டது. நம்ம சொத்தை பிரிப்போம்.’
அதைக் கேட்டு இளைய துறவி கவலைக்குள்ளானார். அவர் சொன்னார்: ‘அண்ணா! நீங்க என்னைவிட்டு போகக் கூடாது. நீங்க போறதா சொல்றது என்னை வேதனைப்பட வைக்குது. போகணும்ன்றது கட்டாயம்னா, அப்படியே நடக்கட்டும்.’
சொல்லிவிட்டு அவர் மண் சட்டியை எடுத்து மூத்த துறவியிடம் தந்தார். பிறகு அவர் தொடர்ந்து சொன்னார்: ‘இதை நாம பாகம் பிரிக்க முடியாது. நீங்கள் இதை வச்சுக்குங்க.’
‘நான் தானம் வாங்க மாட்டேன். எனக்குச் சொந்தமானது மட்டும்தான் எனக்கு வேணும். இதை பாகம் பிரிச்சே ஆகணும்’- மூத்த துறவி சொன்னார்.
‘இந்தச் சட்டியை உடைச்சா உங்களுக்கோ எனக்கோ ஒரு பிரயோஜனமும் இல்ல. உங்களுக்கு சந்தோஷம்னா நாம சீட்டு குலுக்கி போடுவோம்.’
‘நியாயமா எனக்கு கிடைக்க வேண்டியது மட்டும் கிடைச்சா போதும். நியாயத்தையும் உரிமையையும் சாதாரண அதிர்ஷ்ட சோதனையிடம் விட்டுவிட முடியாது. எனக்கு அதுல நம்பிக்கையும் இல்ல. மண்சட்டியைப் பாகம் பிரிச்சே ஆகணும்.’
அதற்கு மேல் வழி சொல்ல முடியாமல் இளைய துறவி சொன்னார்: ‘உங்களுடைய இறுதி முடிவு அதுதான்னா, அப்படியே நடக்கட்டும். மண்சட்டியை நாம உடைப்போம்.’
அதைக் கேட்டு மூத்த துறவியின் முகம் இருண்டு விட்டது. அவர் புன்னகைத்தார். அவர் சொன்னார்: ‘கோழை! ஒரு சண்டைக்கு நீ தயாராக இல்லையா என்ன?’
அறை முழுக்க தையல் ஊசிகளை வைத்திருந்த ஒரு மனிதன் இருந்தான்.
இயேசுவின் தாய் அந்த மனிதனைத் தேடிச் சென்று கெஞ்சினார்: ‘என் மகன் அணிந்திருந்த ஆடை கிழிந்து போய் விட்டது. அதை உடனடியா தைக்கணும். அவன் தேவாலயத்துக்குப் போறதுக்கு முன்னாடியே நான் தைக்கணும். தயவு செய்து எனக்கு ஒரு ஊசி தர முடியுமா?’
ஒரு ஊசியைக் கூட அந்த மனிதன் தருவதற்கு தயாராக இல்லை. கொடுக்கல் வாங்கலைப் பற்றி அவன் ஒரு சொற்பொழிவு நடத்தினான் - தேவாலயத்திற்கு மகன் போவதற்கு முன்பே எப்படி ஆடையைத் தைத்து தயார் பண்ணுவது என்பதைப் பற்றி.
இரவு அரண்மனையில் விருந்து நடக்கும்போது ஒரு மனிதன் அங்கு வந்தான். அவன் மன்னனை வணங்கினான். விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் அங்கு வந்த மனிதனையே பார்த்தார்கள். அவனுக்கு ஒரு கண் இல்லை. கண் குழியிலிருந்து இரத்தம் வந்து கொண்டிருந்தது.
‘உங்களுக்கு என்ன ஆச்சு?’ - மன்னன் விசாரித்தான்.
‘மன்னா! நான் ஒரு திருடன். நேற்று இரவு நிலவு இல்லாமலிருந்தது. நான் ஒரு வியாபாரியின் கடைக்கு திருடுவதற்காக போனேன். ஜன்னல் வழியாதான் நான் ஏறினேன். அப்போ நான் தப்பு பண்ணிட்டேன். நான் ஒரு நெய்தல்காரனின் நெசவு நடக்குற இடத்துக்கு தப்பா போயிட்டேன். அப்போ நல்ல இருட்டு. இடிச்சு எனக்கு கண் போயிடுச்சு. அந்த நெசவு செய்யிற மனிதன்தான் எல்லாத்துக்கும் காரணம். மன்னா! நீங்கதான் நீதி சொல்லணும்.’
மன்னன் நெசவு செய்யும் மனிதனை ஆள் அனுப்பி வரவழைத்தான். அவனுடைய கண்களில் ஒன்றைத் தோண்டி எடுக்கும்படி மன்னன் கட்டளையிட்டான்.
நெசவுக்காரன் சொன்னான்: ‘மன்னா! நீங்க கட்டளை இட்டது நியாயப்படி சரிதான். என் கண்கள்ல ஒரு கண்ணைத் தோண்டி எடுக்கும்படி சொன்னீங்க. அது நியாயமான ஒண்ணுதான். ஆனா, நான் நெசவு செய்யிறப்போ துணியின் இரண்டு முனைகளையும் பார்க்கணும்னா ரெண்டு கண்களும் எனக்கு கட்டாயம் வேணுமே! என் பக்கத்து வீட்டுல ஒரு ஆள் இருக்கான். அவன் ஒரு செருப்பு தைப்பவன். அவனுக்கு ரெண்டு கண்கள் இருக்கு. அவனுடைய தொழிலுக்கு ரெண்டு கண்கள் தேவையே இல்ல.’
அந்த நிமிடமே மன்னன் செருப்பு தைக்கும் மனிதனை அங்கு வரும்படி செய்தான். அவனுடைய ஒரு கண்ணைத் தோண்டி எடுக்கும்படி மன்னன் கட்டளை இட்டான்.
அதன்மூலம் நீதி எல்லோருக்கும் திருப்தி அளிக்கும் வண்ணம் நிறைவேற்றப்பட்டது.
சூரியன் தோன்றிய நேரத்தில் குள்ளநரி தன்னுடைய நிழலைப் பார்த்து விட்டு சொன்னது:
‘இன்னைக்கு என்னுடைய மதிய உணவு ஒரு ஒட்டகம்.’
காலை முதல் அது ஒட்டகத்தைத் தேடி அலைந்தது. ஆனால், ஒரு ஒட்டகத்தைக் கூட அது பார்க்கவில்லை.
மதியம் அது தன்னுடைய நிழலைப் பார்த்து சோர்வுடன் சொன்னது:
‘ஒரு எலி கிடைச்சாக்கூட போதும்.’
நம்முடைய சகோதரரான இயேசுவின் மூன்று அற்புதச் செயல்களை இதுவரையில் புத்தகங்கள் பதிவு செய்யவில்லை.
உங்களையும் என்னையும் போல இயேசுவும் ஒரு மனிதனாக இருந்தார் என்பதையும், இயேசுவிற்கு நகைச்சுவை உணர்வு இருந்தது என்பதையும், பல துன்பங்கள் அவருக்கு உண்டான போதும் அவர் ஒரு வெற்றி வீரராக இருந்தார் என்பதை இயேசுவே அறியாமல் இருந்தார் என்பதையும் எந்தப் புத்தகமும் பதிவு செய்யாமலே இருக்கின்றன.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook