Lekha Books

A+ A A-

பூவினும் மெல்லிய பூங்கொடி! - Page 10

poovinum mellia poongodi

கோபாலைப் பார்த்ததும் திடுக்கிட்டான். பின்னர் சமாளித்து அருகில் வந்தான்.

"நல்லா இருக்கீங்களா கோபால் சித்தப்பா?"

"நான் நல்லா இருக்கேன். உங்க அப்பா எப்பிடி இருக்கார்? அவர் வரலியா?..."

"அச்சுத் தொழிலோ நச்சுத் தொழிலோன்னு அச்சாபீஸ்ல வேலை சரியா இருக்கு சித்தப்பா. ஒண்ணு நான் வரணும். இல்லைன்னா அப்பா வரணும். அப்பாவை சுலபத்துல வெளியூருக்குக் கிளப்ப முடியாது. அதனால நானும் அம்மாவும் வந்தோம்."

"அது சரி. சென்னைக்கு வந்த நீங்க, எங்க வீட்டுக்கு வராம நேரா கல்யாணத்துக்குப் போயிட்டீங்களா? எங்க வீட்ல வந்து இறங்கியிருக்கலாம்ல?"

"கல்யாண வீட்டுக்காரங்களே நல்ல லாட்ஜுல ரூம் போட்டிருந்தாங்க. அங்கதான் தங்கணும்னு அன்புத் தொல்லை குடுத்தாங்க. அதனால அங்க போக வேண்டியதாயிடுச்சு. அர்ஜுன் நல்லா இருக்கானா சித்தப்பா?"

"அவன் நல்லா இருக்கான்ப்பா..."

"டேய் அவினாஷ்... சித்தப்பா ஏதோ வேலையா கார்ல இருந்து இறங்கினார். நாம்ப பிடிச்சுக்கிட்டோம். அவருக்கு வேலையோ என்னவோ..."

"ஆமா மதினி. முக்கியமான மீட்டிங்க்காக போய்ட்டிருக்கேன். இதோ தெரியுதே இந்த ஃபைவ் ஸ்டார் ஹோட்டலோட கன்வென்ஷன் ஹால்ல தான் மீட்டிங். மீட்டிங் ஆரம்பிக்க இன்னும் அரை மணி நேரம் இருக்கு. வாங்களேன். காபி சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்."

மூவரும் அந்த ஃபைவ் ஸ்டார் ஹோட்டலின் ரெஸ்டாரெண்டிற்குள் சென்றனர். அமர்ந்தனர். கோபாலைப் பார்த்ததும் அவருக்குப் பரிச்சயமான வெயிட்டர் பணிவன்புடன் ஓடி வந்தான்.

"ஸார்... என்ன ஸார் வேணும்?"

"இவங்க ஹோட்டல்ல ஃபில்ட்டர் காபி ரொம்ப விசேஷம் மதினி. ஆர்டர் பண்ணட்டுமா? அவினாஷ்.. உனக்கு ஐஸ்க்ரீம்... ஜுஸ்..."

"எனக்கு கோல்ட் காபி வித் ஐஸ்க்ரீம் அங்கிள்."

"எனக்கு காபி கோபால்."

காத்திருந்த வெயிட்டரிடம் ஆர்டர் கொடுத்தார் கோபால்.

"அப்புறம் மதினி... வேற என்ன விசேஷம்?"

"எங்க வீட்டில என்ன விசேஷம்? உங்க வீட்லதான் விசேஷமாமே? ஊருக்கு வர்றவங்க பேசிக்கறாங்க."

"ஊர் பேசறது என்ன? ஊரே கொண்டாடற மாதிரியில்ல எங்க அர்ஜுனுக்கும் உங்க கவிதாவுக்கும் கல்யாணம் நடத்தப் போறேன்?"

இதைக் கேட்டதும் முகம் மாறியது கௌரிக்கு. சமாளித்து சிரித்தாள்.

"சந்தோஷமான சமாச்சாரம்தான் கோபால். ஆனா... ஆனா... கவிதா.... எங்க அண்ணனோட சொந்தப் பொண்ணு இல்லையே...."       

"என்ன அண்ணி நீங்க? கவிதா, என் தங்கச்சி விஜயாவோட வளர்ப்பு மகள்ங்கற விஷயம் என்ன புதுசா? கவிதாவை தத்து எடுத்தப்புறம்தான் எங்க விஜயா சந்தோஷமா இருக்கா."

"அதெல்லாம் சரிதான் கோபால். கவிதா எங்க அண்ணனோட வளர்ப்பு மகள்ங்கறது தெரிஞ்ச விஷயம்தான். இதில யாருக்குமே தெரியாத ஒரு விஷயம் கவிதாவோட பிறப்பு பத்தின விபரங்கள். அண்ணனும், அண்ணியும் அநாதைக் குழந்தையை தத்து எடுத்து சீராட்டி பாராட்டி வளர்த்தது வரைக்கும் சரிதான். ஆனா இப்ப, கவிதாவோட பிறப்பு பத்தின ரகசியம் வெளியே கசிய ஆரம்பிச்சிருக்கு. கவிதா யாரோ பெத்த பொண்ணுங்கற வரைக்கும் சரி. ஆனா, சர்ச்ல வேலை செய்யற ஒரு பொம்பளைக்கு முறையில்லாம பிறந்தவ கவிதான்னு ஊர்ல பரவலா பேசிக்கறாங்க. இதைப் பத்தி பொண்ணு எடுக்கப் போற நீ யோசிக்கணுமே கோபால். உன் அந்தஸ்து என்ன? உன்னோட பிரபலமான பேரு என்ன? இவ்வளவு பெரிய சென்னையில உன்னை அடையாளமிட்டு சொல்ற அளவுக்கு செல்வாக்கோட இருக்கறவன் நீ... எவளோ முறை தவறி, நெறி தவறி, அதனால  பிறந்துட்ட கவிதாவை உன் வீட்டு மருமகளா ஆக்கறது அவ்வளவு கௌரவமா இல்லியே..."

வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல மெள்ள வார்த்தைகளை கோபாலின் மனதில் ஏற்றினாள் கௌரி.

கோபாலின் மனதிற்குள் 'சுர்'ரென்று கோபம் ஏறினாலும் அவரது இயல்பான பண்பாடு, அந்தக் கோபத்தை சட்டென்று வெளிப்படுத்துவதைத் தடுத்தது.

"இங்க பாருங்க மதினி, நீங்க என் தங்கச்சி விஜயாவோட நாத்தனார்ங்கற முறையில உங்க மேல எனக்கு அன்பு, மரியாதையெல்லாம் இருக்கு. ஆனா என் தங்கச்சி குடும்பத்தைப் பத்தி என்கிட்டயே இப்பிடி நீங்க பேசறது சரியில்ல.. விஜயா எப்பிடி என் உடன் பிறந்த ரத்தமோ அது போல கவிதாவும் எங்க ரத்தம்தான். அப்பிடித்தான் கவிதா வந்ததிலிருந்து விஜயா மட்டுமில்ல, நாங்க எல்லாருமே நினைக்கிறோம். கவிதா மேல பாசம் வச்சிருக்கோம். அவளோட பிறப்பைப் பத்தின விமர்சனம் எங்களுக்குத் தேவை இல்லாதது. அதைப் பத்தி பேசறது உங்களுக்குத் தேவை இல்லாதது" அவர் வெகுவாகக் கோபத்தைக் குறைத்துப் பேசியபோதும் அவரது வார்த்தைகள் மறைமுகமாகத் தெளித்த கோபத்தைப் புரிந்துக் கொண்ட கௌரி, பயந்து போனாள்.

"ஸாரி கோபால். யதார்த்தமாத்தான் நான் சொன்னேன்."

"நானும் யதார்த்தமாத்தான் சொல்றேன். எங்க குடும்ப விஷயம். என் தங்கச்சியோட நல்லது கெட்டது எல்லாமே என்னோட சொந்த விஷயம். அதனால இனிமேல் கவிதாவைப் பத்தியோ, அவ கல்யாணத்தைப் பத்தியோ பேசாதீங்க. எனக்கு மீட்டிங் போறதுக்கு நேரமாச்சு."

கோபால் எழுந்து கன்வென்ஷன் ஹாலை நோக்கி நடந்தார்.

கௌரியும், அவினாஷும் மௌனமாக அங்கிருந்து கிளம்பினர்.

"ஏம்மா, வாயை வச்சுக்கிட்டு சும்மா இருக்கக் கூடாதா? கோபால் அங்கிள்கிட்ட போய் கவிதாவைப் பத்தி பேசலாமா? எதுக்கெடுத்தாலும் அவசரம்தான் உங்களுக்கு. பிறப்பைப் பத்தி கௌரவம் பார்க்கறவங்களா இருந்தா, அவளை தத்து எடுத்திருக்கவே மாட்டாங்க. விஜயா அத்தை வயித்துல பிறந்த குழந்தை மாதிரி எவ்வளவு அன்பா பாசமா கவிதாவை வளர்த்துக்கிட்டிருக்காங்க! தத்து எடுத்த பொண்ணுன்னு தெரிஞ்சும்தான் கோபால் அங்கிள், அவரோட பையன் அர்ஜுனுக்குக் கட்டி வச்சு மருமகளாக்கிக்கணும்னு முடிவு பண்ணியிருக்காரு. கவிதா, சர்ச்ல பிறந்தவ, முறை தவறி பிறந்தவ அது இதுன்னு யார் யாரோ பேசறதையெல்லாம் கேட்டுட்டு அதைப் போய் அவர்கிட்டயே இப்படி பேசலாமாம்மா... என்னம்மா நீ?... என்னமோ நம்ம நல்ல நேரம்.. அவர் கோபத்தை அடக்கி வாசிச்சாரு..... அது மட்டும் இல்ல. அவர் ஒரு ஜென்ட்டில் மேன். அதனாலதான் கோபப்பட்டாலும் கடுமையான வார்த்தைகளை வீசாம அமைதியா எழுந்து போயிட்டாரு......?"

"அட... போடா... முள்ளை முள்ளாலதான் எடுக்கணும்னு சொல்வாங்க. கேள்விப்பட்டதில்லை?... அதனால்தான் சின்னதா ஒரு ஆப்ரேஷன் பண்ணிப் பார்க்கலாமேன்னு லேசா கத்தியை வச்சேன்..."

"லேசாவா வச்சீங்க? லேஸர் தனமா இல்ல வச்சீங்க? அம்மா... இது ஆப்ரேஷன் இல்லம்மா. படுகொலை. உங்க வார்த்தைகள் சாதாரண கத்தி இல்லம்மா. விஷம் தோய்ச்ச கத்தி..."

 

+Novels

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

தந்தை விழுந்தபோது...

March 8, 2012,

மகாலட்சுமி

March 22, 2013,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

வனவாசம்

September 18, 2017

என் தந்தை

என் தந்தை

September 24, 2012

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel