Lekha Books

A+ A A-

வான்கா - Page 93

van gogh

“நான்... நான்...” – தியோ நண்பர்களுக்கு நன்றி கூற முயற்சித்தான். ஆனால் தொண்டையிலிருந்து, வார்த்தைகள் வந்தால்தானே! அவனால் ஒன்றுமே பேச முடியவில்லை.

வின்சென்ட் ஒவேருக்கு வந்தவுடன், முதலில் இயற்கையின் வனப்பையும் ஊரின் அழகையும் பார்த்து ரசித்த வழியோரத்தில் டாக்டர் காஷெ, வின்சென்ட்டிற்காக இடம் ஒதுக்கி இருந்தார்.

உடலை அடக்கம் செய்த பிறகு, ஏழு பேரும் திரும்பி நடந்தார்கள்.

டாக்டர் காஷெ சில நாட்களுக்குப் பிறகு, வின்சென்ட் நிரந்தரமாக உறங்கிக் கொண்டிருந்த இடத்திற்கு மேலே சூரியகாந்திச் செடிகளைக் கொண்டு வந்து நட்டார்.

¤               ¤             ¤

வின்சென்ட் இறந்த சில நாட்களிலேயே தியோவும் அவனைப்பின் தொடர்ந்தான்.

சூரியன் ஒவேரின் கல்லறையிலும், சோள வயல்களிலும், தன்னுடைய பொற்கதிர்களைப் பரப்புகிறபோது, தியோ, வின்சென்ட்டின் சூரியகாந்திப் பூக்களுக்கிடையே இளைப்பாறினான்.

¤               ¤             ¤

பின்குறிப்பு:

இன்று ஆம்ஸ்டர்டாமிலும், தி ஹேகிலும், பாரீஸிலும், ட்ரெஸ்டனிலும், ம்யூனிச்சிலும், மாஸ்கோவிலும், நியூயார்க்கிலும் உள்ள அருங்காட்சியகங்கள் வின்சென்ட் வான்காவின் ஓவியங்களை பெரும் நிதி என பத்திரமாகப் பாதுகாத்துக் கொண்டிருக்கின்றன.

அந்த கலை மேதையைப் பற்றி உலகம் முழுக்க பல நூறு நூல்கள் வெளியாகி இருக்கின்றன. அவரைப் பற்றி தங்கள் பாடங்களில் உலகம் முழுவதும் மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கின்றனர். வின்சென்ட்டின் வாழ்க்கையை மையமாக வைத்து நாடகங்களும் நாவல்களும் எழுதப்படுகின்றன.

கலை மீது ஆர்வம் கொண்டவர்கள் கூடுகிற எந்த இடமாக இருந்தாலும், அங்கு வின்சென்ட் வான்காவின் பெயர் உச்சரிக்கப்படுகிறது. அவன் ஒரு புண்ணியச் சின்னமாக அவர்களால் கருதப்படுகிறான்.

வின்சென்ட் வான்காவிற்கு என்றுமே மரணமில்லை!

  ¤               ¤             ¤

வான்காவின் வாழ்க்கைப் பயணத்தில் பங்கு பெற்றவர்கள்

 

 

ஊர்ஸுலா                                                 -     வான்காவின் முதல் காதலி

தியோ                                                        -     வான்காவின் தம்பி

தியோடரஸ்                                              -     வான்காவின் தந்தை

அன்னா கார்ணீலியா                                 -     வான்காவின் தாய்

ஸ்டாக்ஸ்                                                  -     ராம்ஸ்கேட் பள்ளி உரிமையாளர்

ஒபாக்                                                        -     லண்டன் குபில்ஸின் மேலாளர்

ஜோன்ஸ்                                                  -     ஐஸ்ல்வொர்த் பள்ளி உரிமையாளர்

கே                                                             -     வான்காவின் கஸின்

ஸ்ட்ரிக்கர்                                                 -     வான்காவின் பெரியப்பா

விலெமின்                                                 -     வான்காவின் பெரியம்மா

மெந்தெஸ்                                                -     வான்காவிற்கு கிரேக்க, லத்தீன்   மொழிகளைக் கற்பித்தவர்

ஜான்                                                         -     வான்காவின் அங்கிள்

ப்ரிங், ஜோங்க், பீட்டர் ஸென்                   -     பெல்ஜியத்தில் மத போதனை     செய்து கொண்டிருப்பவர்கள்

போக்மா                                                   -     வான்காவின் மத போதனை      ஆசிரியர்

தெனி                                                       -     போரினேஜில் பேக்கரி வைத்திருப்பவர்

மேடம் தெனி                                           -     தெனியின் மனைவி

மவ்                                                          -     வான்காவின் கஸின்

ஜேக்யு வெர்ணெ                                      -     சுரங்கத்தின் ஃபோர்மேன்

தெர்ஸ்டீக்                                                -     வான்காவின் நண்பன். தி ஹேக்கின் குபில் காலரியின்      மேலாளர்

தெ போக்                                                  -     வளர்ந்து வரும் ஓவியர் –   வான்காவின் நண்பர்

கிறிஸ்டின்                                               -     விலை மாது. தன் மனைவியாக வான்கா ஏற்றுக் கொண்ட பெண்

வெய்ஸன் ப்ரூக்                                      -     வான்காவின் ஓவியங்களை விலைக்கு வாங்கிய முதல்     மனிதன்

மார்கோ                                                    -     வான்காவை உயிரென நேசித்த    பெண்

தெக்ரூத்                                                   -     ந்யூனனில் வான்கா பார்த்த விவசாயி

துளுஸ்- லாத்ரெக்                                    -     ஃப்ரெஞ்ச் ஓவியர்

காகின்                                                      -     ஃப்ரெஞ்ச் ஓவியர்

ஸெரா                                                      -     ஃப்ரெஞ்ச் ஓவியர்

ரூஸோ                                                    -     ஃப்ரெஞ்ச் ஓவியர்

ஸெஸான்                                                -     ஃப்ரெஞ்ச் ஓவியர்

எமிலி ஸோலா                                        -     ஃப்ரெஞ்ச் நாவலாசிரியர்

தான்குய்                                                   -     பாரீஸில் வான்கா சந்தித்த வர்ண கடை உரிமையாளர்

ரக்கேல்                                                     -     ஆர்ளில் வான்கா சந்தித்த இளம்  பெண்

ரூளின்                                                      -     ஆர்ளின் தபால்காரர்

ரே                                                             -     ஆர்ள் மருத்துவமனையின்  டாக்டர்

டாக்டர் பெய்ரோன்                                   -     ஸெய்ன்ட் ரெமியின் டாக்டர்

ஜோஹன்னா                                            -     தியோவின் மனைவி

காஷெ                                                       -     வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் வான்கா சந்தித்த இனிய நண்பர் –    நரம்பியல் நிபுணர்

 

Page Divider

 

+Novels

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

தந்தை விழுந்தபோது...

March 8, 2012,

மகாலட்சுமி

March 22, 2013,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel