கன்யாகுமாரி - Page 13
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 7570
கிழவர்: நீ வேணும்னா போ.
ரஜனி: நான் போகல.
கிழவர்: போ. எனக்கு கடல் காற்று ஒத்து வரல.
ரஜனி: நான் போகல. சும்மா பேச்சுக்காக சொன்னேன்.
கிழவர்: எனக்காக யாரும் தியாகம் செய்றதா நினைக்க வேண்டாம். அதை நான் விரும்பவும் இல்ல.
ரஜனியின் கவலை படர்ந்த முகம். அந்த முகத்தின்மீது கடலலைகள்.
38
கடலலைகள்.
கரை மேல் ஏறும் அலைகள் மீது நீர் தெறிக்க அவர்கள் ஓடுகிறார்கள்.
வாழ்க்கையின் வசந்தத்தைக் காண துடிக்கும் இரண்டு குதிரைகள் -சங்கரனும் பார்வதியும்.
கடலலைகளை விட்டு மேலே கரைக்கு வந்து உயர்ந்த மணல் மேட்டின் மேல் சங்கரன் அமர்கிறான். அவளும் கரைக்கு ஏறி வந்து அவனுக்கு அருகில் நின்றிருக்கிறான்.
சங்கரன்: மேஸ்திரி இன்றைக்கு கணக்கு பார்த்து விடுறப்போ எவ்வளவு காசு கையில இருக்கும் தெரியுமா?
பார்வதி: எவ்வளவு இருக்கும்?
சங்கரன்: ‘ஒன்று’ என்று கையால் காட்டுகிறான்.
பார்வதி: ஒண்ணா?
சங்கரன்: போடி... நூறு. ஒருவேளை அதிகமாக்கூட இருக்கலாம்.
பார்வதி: அது கிடைச்ச பிறகு...?
சங்கரன்: எங்கேயாவது போக வேண்டியதுதான்.
பார்வதி: இங்கேயே இருக்கலாம்ல? இங்கே கல் இல்லியா? கல் இருக்குற இடத்துல வேலை இருக்கும்னு சொல்லிக்கிட்டு இருக்குற ஆளுதானே நீங்க?
சூரிய அஸ்தமனத்தின் கடைசி நிமிடம். சூரியன் மறையப் போகும் கடைசி நிமிடத்தில்-
பார்வதி: நான் கூட சில முடிவுகள் எடுத்திருக்கேன்.
சங்கரன்: அப்படியா?
பார்வதி: பார்க்கத்தானே போறீங்க. நானும் எங்கேயாவது போகப் போறேன்.
சங்கரன்: (கோபத்துடன்) எங்கே போகப் போற?
பார்வதி: எங்க போகணும்னு தோணுதோ அங்கே...
அவள் அவனுடன் கொண்ட கோபத்துடன் நடந்து போகிறாள்.
சங்கரன்: பார்வதி!
அவள் நிற்கவில்லை. அதற்கு பதிலாக வேகமாக நடக்கிறாள். அவன் எழுந்து அவளைப் பின்தொடர்ந்து நடக்க ஆரம்பிக்கும்போது கையில் இருந்த சிப்பி மாலைகள் ஓசை உண்டாக்கும் வண்ணம் அவள் வேகமாக ஓடுகிறாள். அவன் அவளைத் தொடர்ந்து ஓடுகிறான்.
39
பார்வதி முன்னால் ஓடுகிறாள். அவளைப் பின்பற்றி சங்கரன் ஓடுகிறான். வேகமாக ஓடி அவன் அவளை நெருங்குகிறான். அப்போது தனியாக இருக்கும் ஒரு மண்மேட்டின் மேல் அவள் களைப்படைந்து சிரித்துக் கொண்டே விழுகிறாள். அவனும் மண்மேட்டின்மேல் விழுகிறான். அவளின் உடம்பை உரசியவாறு அவனின் கைப்பிடிக்குள் அவள் -
அவன் தன்னையும் மீறி தான் இதுவரை அனுபவித்திராத ஒரு உள்ளுணர்வால் உந்தப்பட்டு அவளை முத்தமிடுகிறான். அவள் தன்னை மீறி அவனுடைய கழுத்தைச் சுற்றி வளைக்கிறாள்.
பார்வதி: போவீங்களா?
சங்கரன்: இல்ல...
பார்வதி: சத்தியம் பண்ணுங்க. தேவிமேல சத்தியம் பண்ணுங்க.
சங்கரன்: உன் மேல சத்தியமா...
பார்வதி: தேவி மேல் சத்தியமான்னு சொல்லுங்க...
சங்கரன்: நீதானே தேவி! பார்வதி!
40
பாதை பிரியும் இடத்தில் பார்வதியும் சங்கரனும் நிற்கிறார்கள். நாணத்தால் அவள் தலை குனிந்தவண்ணம் இருக்கிறாள்.
சங்கரன்: நல்ல நிலவு இருக்குற ஒரு ராத்திரி நேரத்துல நாம பாறைக்குப் போகணும்.
பார்வதி நாணம் மேலிட நிற்கிறாள்.
சங்கரன்: கட்டு மரத்துல வர பயமா இருக்கா?
பார்வதி: தனியாவா?
சங்கரன்: நான் துடுப்பு போடுவேன். அப்ப பயப்படுவியா?
பார்வதி: நான் பயப்பட மாட்டேன்... (தலைகுனிந்தவாறு) நீங்க எங்கே கூப்பிட்டாலும் நான் வருவேன்.
சங்கரன்: எங்கே கூப்பிட்டாலும்...?
பார்வதி: கூப்பிட்டு பாருங்க...
சங்கரனுக்கு மீண்டும் அவளைத் தொட வேண்டும் போல் இருக்கிறது. மனமே வராமல் அவள் நடக்கிறாள். அவன் காதல் மேலோங்க அவளையே பார்த்தவாறு நின்றிருக்கிறான்.
41
தோழிகள் புடைசூழ மாலை அணிந்த கோலத்துடன் திருமணப் பந்தலில் பார்வதி நின்றிருக்கிறாள். மேள சத்தம் காதைப் பிளக்கிறது. குளவைச் சத்தமும்தான். திருமணத்திற்காக வந்த தேவதைகள் அவளை வாழ்த்துகின்றனர்.
எல்லோரும் புறப்படுகின்றனர். தோழிகளும்தான். திருமணப் பந்தலில் பார்வதி மட்டும் தனியாக இருக்கிறாள். அவள் தன் கழுத்தில் இருந்த மாலையை விட்டெறிகிறாள். பந்தலில் இருக்கும் தோரணங்களைப் பிய்த்து எறிகிறாள்.
அவள் மெதுவாக மங்கலான இருட்டில் கண்களைத் திறந்து பார்க்கிறாள். கயிற்றுக் கட்டிலின் மேல் படுத்து உறங்கிக் கொண்டிருக்கும் பாட்டியின் சுவாச சத்தம் மட்டும் கேட்கிறது.
42
சூரிய உதயம்.
ரெஸ்ட் ஹவுஸின் முன்னால் சேட்டும் அவரின் மனைவியும் நின்றிருக்கிறார்கள். டாக்ஸியில் பணியாள் சாமான்களை ஏற்றுகிறான்.
நீச்சலடிப்பதற்காகச் செல்லும் ஃப்ரெடரிக் ஒரு நிமிடம் அதைப் பார்த்தவாறு நிற்கிறான். பிறகு நடக்க ஆரம்பிக்கிறான். சேட்டின் மனைவி அவனைப் பார்க்காதிருக்க முயற்சிக்கிறாள்.
கடற்கரையில் இருந்து ஃப்ரெடரிக்கிற்கு எதிரில் வந்து கொண்டிருக்கும் சாமியாரைப் பார்த்து சேட் வணங்குகிறார்.
கடற்கரையில் இருந்து ஃப்ரெடரிக்கிற்கு எதிரில் வந்து கொண்டிருக்கும் சாமியாரைப் பார்த்து சேட் வணங்குகிறார்.
சேட்: ஆசீர்வதிங்க... (மனைவியிடம் சைகை காட்டுகிறார்)
சேட்டின் மனைவி சாமியாரின் காலில் விழுந்து வணங்குகிறாள். சாமியார் அவளை ஆசீர்வதிக்கிறார்.
சேட்: பல வருஷங்களா வியாபாரம் செஞ்சு எவ்வளவோ சொத்து சம்பாதிச்சாச்சு. இருந்தாலும் ஒரு வாரிசு இல்ல. எத்தனையோ புண்ணிய இடங்களுக்குப் போயாச்சு சாமி... நீங்க எங்களை ஆசீர்வதிக்கணும்.
சாமியார்: ஸ்வஸ்தி!
அவர்கள் காரில் ஏறுகிறார்கள். கார் அந்த இடத்தைவிட்டு நீங்குகிறது. தூரத்தில் பார்வதி. நீச்சலடிக்கும் ஃப்ரெடரிக் அவளுடன் பேசிக் கொண்டிருப்பதை சாமியார் பார்க்கிறார்.
43
பகல்.
ஃப்ரெடரிக் வழக்கமான தன்னுடைய நீச்சல் உடையுடன் நின்று கொண்டிருக்கிறான். எப்போதும் இருப்பதைப்போல் இல்லாமல் பார்வதி ஒரு அழுக்கு தாவணியை அணிந்திருக்கிறாள். கூந்தலில் நான்கைந்து பூக்கள் இருக்கின்றன. கையில் விற்பதற்காக இருக்கும் சங்கு மாலைகள்.
ஃப்ரெடரிக்கைக் கொஞ்சம்கூட கவனிக்காமல், அதாவது- அவன் கேட்ட கேள்விக்கு பதிலெதுவும் கூறாமல் அவள் நடந்து போகும்போது-
ஃப்ரெடரிக்: நில்லு... எனக்கு மாலை வேணும்.
பார்வதி: எனக்கு வேற வேல இருக்கு.
ஃப்ரெடரிக்: ஆமா... மாலை வித்தா ஒரு நாளைக்கு உனக்கு என்ன காசு கிடைக்குது?
பார்வதி போக முயற்சிக்கிறாள். அப்போது கையிலிருந்த மாலைகளைப் பிடித்து அவன் அவளைத் தடுத்து நிறுத்துகிறான்.
ஃப்ரெடரிக்: கொஞ்சம் நில்லு. (தாழ்ந்த குரலில்) நீ என் ரூமுக்கு வர்றியா?
பார்வதி: எதுக்கு?
ஃப்ரெடரிக்: ஒரு விஷயம் இருக்கு. உனக்கு தேவையானதை நான் வாங்கித் தர்றேன்.
பார்வதி: (கோபத்துடன்) இப்போ என் மாலையை விடுறியா இல்லியா?
அப்போது அங்கே வரும் சாமியாரைப் பார்த்து ஃப்ரெடரிக் மாலையை விடுகிறான். கடற்கரையை நோக்கி அவன் நடக்கிறான்.