
சார்லி சாப்ளின்
(1889 - 1977)
1889ஏப்ரல் 16ஆம் நாள் லண்டனில் பிறந்தார். அவருடைய முழு பெயர் சால்ஸ் ஸ்பென்ஸர் சாப்ளின். தந்தை: சால்ஸ் சாப்ளின். தாய்: ஹன்னா ஹில். இருவரும் நாடகங்களில் நடித்தவர்கள். சாப்ளின் குழந்தையாக இருக்கும்போதே பெற்றோர்கள் தனித்தனியாக பிரிந்து விட்டார்கள்.
வறுமையும், கஷ்டங்களும் நிறைந்ததாக இருந்தது சாப்ளினின் இளமைக் காலம். தந்தை அகால மரணமடைந்தார். தாய் மனநோய் மருத்துவமனையில் இருந்தார். சாப்ளினும் சகோதரன் சிட்னியும் அனாதை இல்லத்தில் அபயம் தேடினார்கள்.
பன்னிரெண்டு வயது முதல் சாப்ளின் நாடகங்களில் நடித்தார். 1910இல் நாடக கம்பெனியுடன் அமெரிக்காவிற்குச் சென்றார். அங்கு திரைப்படங்களில் நடித்துக் கொண்டு பல்வேறு கம்பெனிகளுக்காகவும் படங்கள் தயாரித்துக் கொடுத்தார். பிறகு சொந்தத்தில் சினிமா கம்பெனியும் ஹாலிவுட்டில் ஸ்டூடியோவும் உண்டாக்கினார்.
‘தி க்ரேட் டிக்டேட்டர்’ என்ற திரைப் படம் திரைக்கு வந்தவுடன் அமெரிக்கா அரசாங்கம் சாப்ளினை கம்யூனிஸ்ட் என முத்திரை குத்தியது. அமெரிக்காவிற்குள் நுழைய அவருக்கு தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து சாப்ளின் தன் குடும்பத்துடன் ஸ்விட்சர்லாண்டில் வசித்தார்.
1975இல் ‘சர்’ பட்டம் வழங்கப்பட்டது. 1972இல் சிறப்பு ஆஸ்கார் விருது தரப்பட்டது. 1977 டிசம்பர் 25ஆம் தேதி அந்த மிக உயர்ந்த கலை மேதை இந்த உலகை விட்டு விடை பெற்றார்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook