நான் நடிகன் ஆன கதை - Page 35
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 7384
சாப்ளினும் குடும்பமும் லண்டனுக்கு வந்தார்கள். அங்கிருந்து ஃப்ரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளுக்குச் சென்றார்கள். எல்லா இடங்களிலும் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. இறுதியில் சுவிட்சர்லாண்டில் தங்க முடிவெடுத்தார்கள். அங்கு அவர்களுக்கு மேலும் நான்கு குழந்தைகள் பிறந்தன. சாப்ளின் அமெரிக்காவுடன் கொண்டிருந்த எல்லா வர்த்தக விஷயங்களையும் முடிவுக்குக் கொண்டு வந்தார். ஊனா அமெரிக்கா குடிமகள் என்ற தகுதியைத் தூக்கியெறிந்தார்.
சாப்ளினுக்குக் கீழே வேலை செய்து கொண்டிருந்த எட்னா பர்வ்யன்ஸ் அந்தச் சமயத்தில் அவருக்கு கடிதங்கள் எழுதிக் கொண்டிருந்தார். சில நாட்களில் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாகி மரணத்தைத் தழுவினார்.
ஊனாவுடன் வாழ்ந்த வாழ்க்கை சாப்ளினுக்கு மிகுந்த திருப்தியைக் கொடுத்தது. 1964ஆம் ஆண்டில் பிரசுரமான தன்னுடைய சுய சரிதையை அவர் ஊனாவிற்குச் சமர்ப்பணம் செய்திருந்தார். 1965இல் அவருடைய அண்ணன் சிட்னி மரணமடைந்தார். ‘எ கிங் இன் நியூயார்க்’ (1957) ‘எ கெளண்ட்ஸ் ஃப்ரம் ஹாங்காங்க்’ (1966) ஆகியவை அவருடைய இறுதி படங்கள். 1968இல் இரண்டாவது மகனான சாப்ளினின் அகால மரணம் அவரை மிகவும் வேதனைப்பட வைத்தது.
1972இல் அமெரிக்காவின் திரைப்பட விஞ்ஞான கலை அகாடெமியும், ஒரு ஃபிலிம் சொசைட்டியும் விடுத்த அழைப்பை ஏற்றுக் கொண்டு சாப்ளின் ஊனாவுடன் நியூயார்க்கிற்குச் சென்றார். இதய பூர்வமான வரவேற்பு அவர்களுக்கு அளிக்கப்பட்டது. குடிமகன் என்ற தகுதியை ஏற்றுக் கொள்ளும் நேரத்தில் உரையாற்றுவதற்காக சாப்ளின் எழுந்தபோது அரங்கில் கூடியிருந்தவர்களில் நிறைய பேர் அழ ஆரம்பித்துவிட்டார்கள். சாப்ளினும் அழுதார். ‘என்னுடைய மறு பிறவி இது. நான் மீண்டும் பிறந்திருக்கிறேன்’- இதுதான் அவர் பேசியது.
1975இல் பிரிட்டிஷ் மகாராணி சார்லி சாப்ளினுக்கு ‘சர்’பட்டம் வழங்கினார். 1977 டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் நாளன்று மாலை 4 மணிக்கு மிகப் பெரிய அந்தக் கலைமேதை இந்த உலகத்திடமிருந்து விடை பெற்றுக் கொண்டார்.
மிக மிக தாழ்ந்த சூழ்நிலைகளில் இருந்து கூட ஒரு மனிதன் தன்னுடைய சொந்த முயற்சிகளால் உலகத்தின் எல்லைகளுக்கு அப்பால் வளர முடியுமென்று அந்த உன்னத மனிதர் தன் சொந்த வாழ்க்கை மூலம் நிரூபித்துக் காட்டினார்.
சாப்ளின் திரைப்படங்கள்
கீஸ்டோன் கம்பெனி
1914 மேக்கிங் எ லிவிங்
கிட் ஆட்டோ ரேசஸ் அட் வெனீஸ்
மேபல்ஸ் ஸ்ட்ரேஞ்ச் ப்ரெடிக்காமென்ட்
பிட்வீன் ஷவேர்ஸ்
எ ஃபிலிம் ஜானி
டாங்கோ டாங்ல்ஸ்
ஹிஸ் ஃபேவரிட் பாஸ்டைம்
க்ரூவல் க்ரூவல் லவ்
தி ஸ்டார் பார்டர்
மேபல் அட் தி வீல்
ட்வென்ட்டி மினிட்ஸ் ஆஃப் லவ்
காட் இன் எ காபரே
எ ப்யூஸி டே
தி ஃபேட்டல் மாலிட்
ஹெர் ஃப்ரன்ட் தி பான்டிட்
தி நாக் அவுட்
மேபல்ஸ் ப்யூனி டே
மேபல்ஸ் மேரிட் லைஃப்
லாஃபிங் க்யாஸ்
தி ப்ராப்பர்ட்டி மேன்
தி ஃபேஸ் ஆன் எ பார் – ரூம் ஃப்ளோர்
ரிக்ரியேஷன்
தி மாஸ்க்வரெய்டர்
ஹிஸ் நியூ ப்ரொ ஃபஷன்
தி ரவுண்டேர்ஸ்
நி நியூ ஜானிட்டர்
தோஸ் லவ் பாங்க்ஸ்
டஃப் அன்ட் டைனமைட்
ஜென்டின்மேன் ஆஃப் நெர்வ்
ஹிஸ் ம்யூசிக்கல் கேரியர்
ஹிஸ் ட்ரிஸ்ட்டிங் ப்ளெய்ஸ்
டில்லீஸ் பங்க்ச்யூ என்ட் ரொமான்ஸ்
கெட்டிங் அக்வய்ன்டட்
ஹிஸ் ப்ரீஹிஸ்டாரிக் பாஸ்ட்
எஸ்ஸனே கம்பெனி
1915 ஹிஸ் நியூ ஜாப்
எ நைட் அவுட்
தி சேம்பியன்
இன் தி பார்க்
தி ஜிட்னி எலோப்மென்ட்
தி ட்ராம்ப்
பை தி ஸீ
வர்க்
எ உமன்
தி பாங்க்
ஷாங்ஹாய்ட்
எ நைட் இன் தி ஷோ
1916 கார்மென்
பெலீஸ்
1918 ட்ரிப்ள் ட்ரப்ள்
ம்யூச்சுவல் கம்பெனி
1916 தி ஃப்ளோர் வாக்கர்
தி ஃபயர் மேன்
தி வாகாபாண்ட்
ஒன் ஏ.எம்.
தி போன்ஷாப்
பிஹைன்ட் தி ஸ்க்ரீன்
தி ரிங்
1917 ஈஸி ஸ்ட்ரீட்
தி க்யூவர்
தி இம்மிக்ரான்ட்
தி அட்வெஞ்சரர்
ஃபஸ்ட் நேஷனல் கம்பெனி
1918 எ டாக்ஸ் லைஃப்
தி பாண்ட்
ஷோல்டர் ஆம்ஸ்
1919 சண்ணி ஸைட்
எ டெய்ஸ் ப்ளெஷர்
1920 தி கிட்
தி ஐடில் க்ளாஸ்
1922 பே டே
1923 தி பில்க்ரிம்
யுனெட்டெட் ஆர்ட்டிஸ்ட்
1923 எ உமன் ஆஃப் பாரீஸ்
1925 தி கோல்ட் ரஷ்
1928 தி சர்க்கஸ்
1931 சிட்டி லைட்ஸ்
1936 மாடர்ன் டைம்ஸ்
1940 தி க்ரேட் டிக்டேட்டர்
1947 மொஸ்யே வெர்தொ
1953 லைம் லைட்
அட்டிக்கா ஆர்ச்வே
1957 எ கிங் இன் நியூயார்க்
யூனிவர்சல்
1966 எ கவுண்ட்ஸ் ஃப்ரம் ஹாங்காங்