காதல் கடிதம்
- Details
- Category: புதினம்
- Written by சுரா
- Hits: 6853
சுராவின் முன்னுரை
வைக்கம் முஹம்மது பஷீர் (Vaikom Muhammed Basheer) மலையாளத்தில் எழுதிய 'ப்ரேம லேஹனம்' நாவலை 'காதல் கடிதம்' என்ற பெயரில் மொழி பெயர்த்திருக்கிறேன்.
இந்தக் கதை எம்.ஜி. சோமன், ஸ்வப்னா நடிக்க மலையாளத்தில் திரைப்படமாக வந்திருக்கிறது.
ஒரு வீட்டின் மாடியில் வாடகைக்கு குடியிருக்க கேசவன் நாயர் வருகிறார். அந்த வீட்டின் சொந்தக்காரரின் மகள் சாராம்மா அவரிடம் தனக்கு ஒரு வேலை வாங்கித் தரும்படி கேட்கிறாள்.
ஒரு மாதம் கழித்து, அவளுக்கு தான் ஒரு வேலை பார்த்து வைத்திருப்பதாக அவர் கூறுகிறார்.