மணப்பெண்
- Details
- Category: புதினம்
- Written by சுரா
- Hits: 12204
சுராவின் முன்னுரை
சரத்சந்திரர் (Saratchandra Chattopadhyay) எழுதிய புகழ் பற்ற ''பரினீதா'' (Parineeta) நாவலை ''மணப்பெண்'' என்ற பெயரில் மொழி பெயர்த்திருக்கிறேன்.
இந்நாவல் 1953இல் பிமல்ராய் இயக்கத்தில் அசோக் குமார், மீனாகுமாரி நடிக்க திரைப்படமாக வந்து வெற்றி பெற்றது. 2005இல் வித்யாபாலன், சஞ்சய்தத், சைஃப் அலிகான் நடிக்க மீண்டும் திரைப்படமாக வந்து வித்யாபாலனின் திரையுலக பயணத்தில் அவருக்கு ஒரு மிக உயர்ந்த இடத்தை பெற்றுத் தந்தது.
லலிதா இந்த கதையின் நாயகி. அவளை சிறுவயதிலிருந்தே நன்கு தெரிந்த சேகர் உயிருக்குயிராக காதலிக்கிறான். அவளுடைய வீட்டிற்கு விருந்தாளியாக வந்த கிரின்பாபு திருமணம் செய்து கொள்ள நினைக்கிறான். ஆனால் லலிதாவின் இதயத்தில் இடம்பெற்றிருக்கும் நாயகன் யார்?