தேவராகம் - Page 6
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6964
எந்தவிதமான உணர்ச்சி மாறுபாடுகளும் இல்லாத லாராவின் முத்தில் புன்னகை மலர்வதை இறுதியில் அவரால் பார்க்க முடிந்தது. அன்பு, கருணை ஆகியவற்றை வெளிப்படுத்துகிற மாதிரி டாக்டரின் கண்களில் கண்ணீர் நிறைந்தது. அவர் குனிந்து கடவுளுக்கு நன்றி சொன்னார். அவள் தன் சிரமங்களிலிருந்து விடுபட்டு விட்டாள். அதற்குப் பிறகு எவ்வளவு வேகமாக அவளுடைய முன்னேற்றம் இருந்தது தெரியுமா? எல்லா விஷயங்களையும் அவள் தனக்குத்தானே கற்றுக்கொள்ள ஆரம்பித்தாள். இறுதியின் கண்பார்வையற்றவர்கள் சம்பந்தப்பட்ட அமைப்பின் தலைவியாகவே அவள் ஆனாள். சமீபத்தில் இதைப் போன்ற வேறு சிலரைப் பற்றி செய்தித்தாள்களில் விவாதிக்கப்பட்டதே! இப்படிப்பட்டவர்களுக்கு எப்படியாவது நல்லது நடக்குமான்னுதான் மக்கள் ஆர்வமா பார்க்குறாங்க. என் கருத்தில் அவங்க சந்தோஷமா இருக்காங்க. முழுமையான திருப்தியுடன் இருக்காங்க.’’
தொடர்ந்து அவர் டிக்கன்ஸ் எழுதிய ஒரு சிறுகதையை என்னிடம் சொன்னார். லாரா ப்ரிஜ்மேனின் வாழ்க்கையிலிருந்து உண்டான பாதிப்பால் எழுதப்பட்ட அந்தக் கதையை அனுப்பி வைப்பதாக அவர் எனக்கு உறுதி தந்தார். நான்கு நாட்களில் கதை என் கைக்கு வரவும் செய்தது. மிகுந்த மகிழ்ச்சியுடன் நான் அதை வாசித்தேன். ஆரம்பத்திலிருந்து இறுதி வரை உணர்ச்சிமயமாக அந்தக் கதை இருந்தாலும், கண் பார்வையற்ற ஒரு சிறுமியின் இதயத்தை நெகிழச் செய்யும் தன்மை கொண்டதாக அது இருந்தது. ஓய்வு, பணம், சந்தோஷம் ஆகியவை நிறைந்த மாய உலகத்தில், விளையாட்டு பொம்மைகள் உண்டாக்குகிற ஒரு அப்பாவியான அவளுடைய தந்தைதான் எல்லா விஷயங்களையும் நடத்திக் கொண்டிருந்தவன். டிக்கன்ஸின் கோணத்தில் ஒரு முமுமையான புனிதச் செயலாக அது இருந்தது.
டாக்டர் சென்ற பிறகு முழுமையான தீவிரத் தன்மையுடனும் ஈடுபாட்டுடனும் நான் அந்த வழிமுறையைச் செயல்படுத்த ஆரம்பித்தேன்.
ஒளிமயமான அந்தப் பாதையில் ஷரத்ருத்தின் ஆரம்ப கால் வைப்புகளைப் பற்றி விளக்கங்கள் உண்டாக்க முடியவில்லை என்ற கவலை எனக்கு இருக்கவே செய்கிறது. ஆரம்பத்தில் என்னுடைய கால்களே தடுமாறத்தான் செய்தன. ஆரம்ப வாரங்களில் நினைத்ததை விட அதிகமான தைரியம் தேவைப்பட்டது. இப்படிப்பட்ட பயிற்சிக்கு அதிக நேரம் ஆனது என்பதால் அல்ல- அதற்கு மாறாக தாங்க முடியாத நன்றி கெட்டச் செயலைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலை உண்டானது என்பதுதான் மனதில் கவலை தந்த ஒரு விஷயம். என் மனைவி மூலம் தான் அப்படிப்பட் ஒரு செயல் நடந்தது என்பதைக் கூறும்போது என் இதயத்தின் உள்ளறைகளில் தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு வேதனை உண்டாகிறது. எனக்குள் இப்போது வெறுப்பு, கடுமை போன்றவற்றின் ஒரு சிறு அடையாளம்கூட இல்லை என்ற உண்மையை வெளிப்படுத்துவதற்காகத்தான் இந்த விஷயத்தை இங்கு நான் குறிப்பிடுகிறேன். பிறகு எமிலியின் கண்களில் இந்த வரிகள் படக்கூடிய சாத்தியம் இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு தைரியமாகக் கூறுகிறேன்- அவளுடைய நன்றிகெட்டச் செயல் காரணமாக ஏராளமான சிரமங்களை நான் சந்திக்க வேண்டிய சூழ்நிலை உண்டானபோதும், ஷரத்ருத்திற்காக இந்த அளவிற்கு அதிகமான நேரத்தை நான் செலவழிப்பதை அவள் விரும்பவில்லை என்ற உண்மையைத் தெரிந்தபோதும், நான் கொடூரமான மனிதனாக மாறவேயில்லை. என்னுடைய சிரமங்களுக்கு என்றாவதொரு நாள் நல்ல பலன் கிடைக்கும் என்பதில் அவளுக்கு சிறிதுகூட நம்பிக்கையே இல்லாமல் இருந்தது. இந்த விஷயம் என்னை மிகவும் வேதனை கொள்ளும்படி செய்தது. எனினும், நான் என் விஷயத்தில் உறுதியாகவே நின்றேன்.
ஷரத்ருத்துடன் நான் ‘பிஸியாக இருக்கும்போது’ நான் இப்போது ஓரு ஆளைப் பார்க்க வேண்டியிருக்கிறது. இல்லாவிட்டால் இந்த விஷயத்தைச் செய்ய வேண்டியிருக்கிறது என்று எமிலி என்னிடம் வந்து கூறுவாள். ஓருவகையான பொறாமை என்மீது அவளுக்கு இருக்கிறது என்பதென்னவோ உண்மை. எப்படியென்றால் இரண்டு மூன்று தடவைகள் அவள் என்னைப் பார்த்துச் சொன்னாள்:
‘‘நீங்க உங்க சொந்த பிள்ளைகளுக்காகக்கூட இந்த அளவுக்கு கஷ்டப்பட்டது இல்ல...’’
அவள் கூறுவது ஒருவகையில் பார்க்கப்போனால் உண்மைதான். எனக்கு என் பிள்ளைகள் மீது விருப்பம் இருந்தாலும், அவர்களுக்காக இவ்வளவு நேரத்தைச் செலவிடுவேன் என்பதை ஒருமுறை கூட நான் நினைத்துப் பார்த்தது இல்லை.
தாங்கள்தான் உண்மையான கிறிஸ்துவர்கள் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்குக் கூட பைபிளில் இருக்கும் காணாமல் போன ஆட்டுக்குட்டியைப் பற்றிய கதையை ஏற்றுக் கொள்வது என்பது மிகவும் சிரமமான காரியம் என்று என்னுடைய மனம் கூறுகிறது. இடையனின் பார்வையில் கூட்டத்திலிருக்கும் ஒவ்வொரு ஆடும் மற்ற எல்லா ஆடுகளையும்விட மிகவும் விலை மதிப்பு உள்ளதே என்று கூறுவது இப்படிப்பட்ட ஆட்களின் சிந்தனைக்கு அப்பாற்பட்ட ஒரு விஷயமே.
‘நூறு ஆடுகள் இருக்குறப்போ, அவற்றில் ஒரு ஆடு காணாமல் போனால், மீதி தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் மேயும் இடத்தில் விட்டு விட்டு, காணாமல் போன அந்த ஒரு ஆட்டைக் கண்டுபிடிக்கும் வரை தேடிக் கொண்டிருப்பவர் உங்களில் யார் இருக்கிறார்கள்?’’
இந்த வார்த்தைகளில் கனிவு இருக்கிறது. ஆனால், சாதாரண மனிதர்கள் திறந்த இதயத்துடன் பேச தைரியம் கொண்டவர்களாக இருக்கும்பட்சம், அப்படி அவர்கள் செய்வது சிறிதும் சரியான ஒரு செயலாக இருக்காது என்றுதான் நினைக்கிறார்கள்.
ஷரத்ருத் முதல் தடவையாக புன்னகைத்தபோது எனக்கு நிம்மதியாக இருந்தது. சிரமப்பட்டதற்கான ‘கூலி’ எவ்வளவோ மடங்கு அதிகமாகக் கிடைத்துவிட்டதைப்போல் நான் உணர்ந்தேன். ‘காணாமல் போன ஆட்டுக்குட்டிக் கிடைக்கும் மனிதனுக்கு, மீதியிருக்கும் தொண்ணூற்றொன்பது ஆடுகளால் கிடைக்கும் சந்தோஷத்தைவிட அதிகமான சந்தோஷம் கிடைக்கும் என்று நான் கூறுகிறேன்...’ ஷரத்ருத்தின் மஞ்சள் நிறமான முகத்தில் ஒருநாள் புன்னகை மலர்ந்ததைப் பார்த்தபோது, இதுவரை நான் கற்றுத்தர முயற்சித்தபோது அறிவு மற்றும் ஆர்வத்தின் உடனடி வெளிப்பாடு அவளிடம் தெரிந்தபோது, என் இதயம் உற்சாகத்தால் துள்ளியது. என் பிள்ளைகளிடமிருந்து ஒருமுறைகூட எனக்குக் கிடைத்திராத மதிப்புமிக்க ஆனந்தம் அது!
மார்ச், 5.
ஒரு பிறந்தநாளைப் போல இந்த அருமையான நாள் என் ஞாபகத் தளத்தில் ஒரு இடத்தைப் பிடித்துவிட்டது. ஷரத்ருத்தின் புன்சிரிப்பு சாதாரண புன்சிரிப்பு அல்ல. அவளிடம் உண்டான அந்த முன்னேற்றம்... ஆமாம்- அதுதான் அந்தப் புன்சிரிப்பிற்கான அர்த்தம். அவளுடைய மனக்கண்ணில் வாழ்க்கை பிரகாசிக்கத் தொடங்கியது. மிக உயர்ந்த ஆல்ப்ஸ் மலைச் சிகரங்களில் மேகங்களைக் கிழித்துக் கொண்டு தோன்றும் சூரியனைப் போன்ற ஈர்க்கக்கூடிய ஒரு பிரகாசமாக இருந்தது அது. பனி படர்ந்த மலைச் சிகரங்கள் அதன் ஒளியில் நடுங்க, அவற்றுக்கு மேலே மூடியிருந்தது.