இறுதி விருந்தாளி - Page 7
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6790
அந்தப் பெண் தான் அந்த வீட்டின் நாயகி. கொஞ்சம்கூட பயத்தை வெளிப்படுத்தவே இல்லை. சிறிது சிரித்தாளோ என்று கூட எனக்கு சந்தேகம் உண்டானது. வாழ்க்கையில் முதல் தடவையாக எனக்கு இரக்கம் தோன்றியது- அந்தப் பெண்ணின் இறந்த உடலுக்கு விடைகூறிவிட்டுத் திரும்பிய போது... அந்தப் பெண் ஒரு அழகான பெண்ணா இருந்தாள் ஸாப். அந்தப் பெண்ணின் முகத்தில் இருந்த ஒளி என்னை அழ வச்சிடுச்சு. என் தாயின் முகத்தை நான் அந்த நிமிடத்தில் நினைச்சேன். எனக்கு எட்டு வயது நடக்குறப்போ என்னை விட்டுப் போன என் தாய்... என் கைகள் நடுங்கின. இறந்து போய்க் கிடந்த அந்தப் பெண்ணின் பாதங்களைத் தொட்டு நான் மன்னிப்பு கேட்டேன். அவரைக் கொலை செய்வதற்குப பணம் தந்த பெண்ணை நான் மனதிற்குள் திட்டினேன். ஏதாவது தேவடியாளாக இருக்க வேண்டும! இறந்த பெண்ணின் கணவனுடைய செல்வச் செழிப்பில் கண் வைத்திருப்பவளாக இருக்க வேண்டும்... பொதுவாக, கொலை செய்ததற்கான ஆதாரத்திற்காக இறந்த உடலில் இருந்து நான் ஏதாவதொரு நகையை எடுப்பதுண்டு. ஆனால், அந்தப் பெண்ணின் நகைகளைத் தொடுவதற்குக்கூட நான் தயங்கினேன். அவளுடைய கையில் ஒரு நாணயம் பதிக்கப்பட்ட மோதிரம் இருந்தது. பணம் கொடுத்த பெண்ணின் மோதிரத்தைப் போலவே அது இருந்தது. அதை நான் கழற்றி எடுத்திருக்கலாம். ஆனால், கொலை செய்ததற்கான ஆதாரத்தை நான் யாரிடம் காட்ட வேண்டியதிருக்கிறது? கொலை செய்யச் சொன்னவள் முழுப் பணத்தையும் தந்தாச்சே! அதனால் நான் அந்த மோதிரத்தைக் கழற்றவேயில்லை. அது என் மோதிர விரலுக்கு மிகவும் சரியா இருக்கும். ஆனால் எனக்கு வெள்ளி பிடிக்காது. தங்கத்தின்மீதுதான் எனக்கு விருப்பம்..."
"வாங்க அக்காராம்"- இன்ஸ்பெக்டர் சொன்னார்: "என்னுடன் போலீஸ் ஸ்டேஷனுக்கு வாங்க. நீங்க உங்களுடைய கடமையைச் செய்துட்டீங்க. இனி நான் என் கடமையைச் செய்யணும்ல!"