இறுதி விருந்தாளி - Page 4
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6790
"உன்னைத் திருமணம் செய்ய ஒரு கத்தோலிக்கனும் முன் வரல. அந்த அளவுக்கு உன் பெயர் கெட்டுப் போச்சு. அது அப்படின்னா, நீ எல்லாவற்றையும் தந்து சந்தோஷப்படுத்திய அந்த இந்துவை எடுத்துக்கிட்டா... அவனுக்கு உன்னைத் திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை. லிஸா, நீ உன் வாழ்க்கையைப் பாழாக்கிட்டே."
"இந்த விஷயத்தைப் பற்றி இனி என்னுடன் பேசக்கூடாது"- லிஸா சொன்னாள்: "என் வாழ்க்கை என்னுடையது. திருமணம் நடக்காவிட்டால் போகட்டும். இப்படி அவ்வப்போது பார்த்துக் ª££ண்டிருந்தால் எனக்குப் போதும்."
போலீஸ் வேன் வந்த போது, வாசலில் உட்கார்ந்திருந்த கிழவன் அதிர்ச்சியடைந்து எழுந்தான். மற்றவர்கள் பதைபதைத்துப் போனார்கள்.
"போலீஸா?"- சிரில் கேட்டான்: "நாங்க சாராயம் காய்ச்சுவதை நிறுத்தியே ஐந்து வருடங்களாச்சே!"
"நாங்க கள்ளச் சாராயம் விஷயமா விசாரிக்க வரல"- இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் சொன்னார்: "நகரத்தில் உங்களுக்குத் தெரிந்த ஒரு வீட்டில் ஒரு பயங்கர கொலை நடந்திருக்கு. அதற்கு ஆதாரங்கள் தேடி நாங்க வந்திருக்கோம்."
"யார் கொலை செய்யப்பட்டது?"- சிரில் கேட்£ன்.
"அனுசூயாதேவி என்ற பெயரைக் கொண்ட பெண் கவிஞர்"- இன்ஸ்பெக்டர் சொன்னார்.
3
இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரனுக்கு அன்று இரவு தூக்கமே வரவில்லை. அவர் தன்னுடைய மேஜையில் அனுசூயாதேவியின் படத்தை புத்தகத்தின் மீது சாய்த்து வைத்தார். புன்னகை தவழ்ந்து கொண்டிருக்கும் உதடுகள். ஆனால், அழுது கொண்டிருக்கும் கண்கள். வெயிலும் மழையும் ஒன்று சேர்ந்த ஒரு நாளைப் போல இருந்தாள் அந்தப் பெண் கவிஞர். அவள் ஒரு பள்ளிக் கூட மாணவியாக இருந்த போது அவள் மீது மிகுந்த மதிப்பு கொண்டிருந்தார். அவளுடைய காதல் உணர்வு கொண்ட வரிகளை அவர் தனியாக இருக்கும் போது பாடுவது உண்டு. அவளைக் கொல்வதற்கு, மென்மையான அந்த உடலில் தன்னுடைய கத்தியைச் செருக யாருக்கு மனம் வந்தது? அவளுக்கு எதிரிகளே இல்லை என்று அவரிடம் கூறிய அவளுடைய கணவன் கூட உண்மையாகச் சொல்லப்போனால் அந்த அதிர்ஷ்டம் இல்லாத பெண்ணின் எதிரியாக இருந்தார். அவருடைய புகழை மட்டுமே அந்த மனிதர் விரும்பியிருக்கிறார். விசாரணைகள் மூலம் அவர் பலவற்றையும் தெரிந்து கொண்டார். அனுசூயாதேவி திருமணம் செய்து, தன் வீட்டில் மன்னரைப் போல வாழ வைத்த மிஸ்டர் மித்ரா பெண் பித்தராக இருந்தார். வேலைக்காரிகளும், காய்கறி போன்றவற்றை விற்கும் பெண்களும் அவருடைய காமப் பசிக்கு இரையாகியிருக்கின்றனர். அனுசூயாதேவி இறந்தால், அந்தப் பணம் முழுவதற்கும் வாரிசு மித்ராதான். அவளுடைய மரணம் அந்த மனிதருக்கு உண்மையாகச் சொல்லப்போனால் பிரயோஜனமானதுதான். ஆனால் அவர் கொலை செய்திருப்பார் என்பதை அவர் நம்பவில்லை. கனமான எந்த வகையான உணர்ச்சிக்கும் அந்தச் சிறிய தலையில் இடமிருப்பதாகத் தெரியவில்லை.
பிறகு யார் எதிரி? ரோடரிக்ஸின் மகன்களாக இருப்பார்களா? மது அருந்தி போதை தலைக்கேறி சாலையின் ஓரத்திலோ பூங்காவிலோ விழுந்து கிடக்கும் சோம்பேறிகளா? கொலை செய்யக்கூடிய அளவிற்கு அறிவு அவர்களுக்கு எந்தச் சமயத்திலும் இருப்பதற்கான வாய்ப்பே இல்லை. கொல்ல வேண்டும் என்றொரு திட்டத்தை மனதில் வரைவதற்கான பொறுமையும் அவர்களுக்கு இல்லை.
அனுசூயாதேவிமீது ஒரு பொய்யான பதிப்புரிமை வழக்கு தொடுத்து அவளுக்குத் தொல்லைகள் தந்து கொண்டிருந்த பத்திரிகை ஆசிரியர், வழக்கைத் திரும்பப் பெற பயப்பட்டார் என்ற தகவல் கிடைத்தது. அவருக்கு அவமானம் உண்டாகக்கூடிய ஒரு விஷயமாயிற்றே அது! எல்லா இலக்கியவாதிகளும் அரசியல்வாதிகளும் அனுசூயாதேவியின் பக்கம்தான் இருந்தார்கள். பல இடங்களிலும் கூட்டங்கள் நடந்தன. விவாதங்கள் நடந்தன. அனுசூயா தேவியை இந்த பூமியை விட்டுத் துடைத்தெறிந்தால் மட்டுமே தன்னால் நான்கு பேரின் முகத்தைப் பார்த்து இனிமேல் நடக்க முடியும் என்று அந்த மனிதர் நினைத்திருக்க வேண்டும். அவர் பணம் கொடுத்துக் கொலை செய்ய வைத்திருக்கலாம்.
இல்லாவிட்டால் அனுசூயாதேவியின் குப்பைத் தொட்டில் கிடந்த கடிதத்தை எழுதிய மாதவன் பிள்ளை அந்தக் ª£கலையைச் செய்திருக்கலாம். 'பார்க்க அனுமதிக்கவில்லையென்றால், நான் பழைய ரகசியத்தை வெளிப்படுத்திவிடுவேன். அந்தக் கடிதம் என் கையில் இருக்கிறது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்'- கடிதத்தில் இருந்த வரிகள் இவை. இன்ஸ்பெக்டர் முகவரியைத் தேடிப் போன போது அவர் போய்ச் சேர்ந்த இடம் கான்டிவில்லியில் இருந்த ஒரு மஞ்சள் நிறக் கட்டிடம். வரிசையாக கட்டப்பட்டிருந்த அறைகளில் பல குடும்பங்களும் வாழ்ந்து கொண்டிருந்தன.
"நீங்கதான் மாதவன் பிள்ளையா?"- இன்ஸ்பெக்டர் கேட்டார்.
மூன்றாம் எண் அறையில் கட்டிலில் படுத்துக் கொண்டு 'மாத்ருபூமி' வாசித்துக் கொண்டிருந்த வயதான மனிதர் திரும்பிப் பார்த்தார்.
பயமுறுத்தியபோது பிள்ளை உண்மையைக் கூறினார்: "நான் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னால் பம்பாயில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். ரேஷன் கார்டு சம்பந்தமா விசாரணை செய்து கொண்டு, நான் பல வீடுகளிலும் ஏறி இறங்கிக் கொண்டிருந்த காலமது. நான் அந்தத் துறையில் இன்ஸ்பெக்டராக இருந்தேன். ஒரு மதிய நேரத்தில் நான் சர்ச் கேட்டில் இருந்த ஒரு பணக்காரர்களின் குடும்பம் இருந்த இடத்திற்குப் போனேன். அங்கு பதினைந்து வயது கொண்ட ஒரு சிறுமி மட்டுமே இருந்தாள். "இப்போ இங்கே யாரும் இல்லை. பிறகு எப்பவாவது வந்தால் கார்டைக் காண்பிக்கிறோம்" என்றாள் அவள். ஏதோ உணர்ச்சியின் உந்துதலால் நான் கதவை அடைத்துவிட்டு, அந்தச் சிறுமியை இறுக அணைத்தேன். அவளால் கத்தக் கூட முடியல. இறுதியில் நான் அவளை விட்டுபிரிந்தபோது, தரை விரிப்பில் அவள் மல்லாக்க படுத்துக் கொண்டு தேம்பித் தேம்பி அழுதாள். கதவை அடைத்த போது அவள் 'நீங்க யார்'னு என்னைப் பார்த்துக் கேட்டாள். 'என் பெயர் மாதவன் பிள்ளை. போலீஸ்கிட்ட சொல்லப் போறியா'ன்னு நான் கேட்டேன். எதையும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தைரியம் அந்தக் காலத்துல எனக்கு இருந்தது. அந்தச் சிறுமி எழுந்து வந்து என்னை முத்தமிட்டாள். 'இல்ல.. இதை நான் யாரிடமும் சொல்ல மாட்டேன்'னு அவள் சொன்னாள். அதற்குப் பிறகு நான்கு மாதங்கள் ஓடிவிட்டன. எனக்கு ஒரு கடிதம் வந்தது. அவளுடைய கடிதம்... அப்போதுதான் அவளுடைய பெயர் அனுசூயா என்பதே எனக்குத் தெரிய வந்தது. அவள் பெங்காலி என்பதையும் தாய்-தந்தைக்கு அவள் ஒரே மகள் என்பதையும் நான் நினைத்திருக்கவில்லை.
'என்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும். நான் கர்ப்பமா இருக்கிறேன். இதற்குக் காரணம் நீங்கள்தானே! உடனே என்னைப் பார்க்க வரவேண்டும்- அனுசூயா.'