சோசலிசமும் மனிதனும் - Page 9
- Details
- Category: அரசியல்
- Published Date
- Written by சுரா
- Hits: 8595
படைப்பிற்கு மத்தியில் சூழ்ச்சிகள், வர்க்கப் பகைவர்கள், கடந்த காலத்தின் நோய்கள், சாம்ராஜ்யத்துவம் ஆகியவற்றுக்கு எதிரான நீண்டகால கடுமையான போராட்டம் என்ற புரட்சிக் கடமையை நிறைவேற்றுவதற்கு அவர்கள் தங்களின் செயல்பாடுகள் மூலமாக பொதுமக்களை வழிநடத்திச் செல்ல வேண்டும்.
வரலாறு படைத்த பொதுமக்களின் தலைவன் என்ற நிலையில் தனி மனிதன் வகித்த பங்கினைப் பற்றி நான் விளக்கிக் கூறுகிறேன். அது எங்களுடைய அனுபவமாக இருந்தது.
ஆரம்ப வருடங்களில் ஃபிடெல் புரட்சிக்கு உத்வேகத்தையும் தலைமைப் பொறுப்பையும் ஏற்றார். அவர் அதை எல்லா நேரங்களிலும் பலப்படுத்திக் கொண்டே இருந்தார். ஆனால், தங்களுடைய மதிப்பிற்குரிய தலைவனைப் போலவே வளரும் ஒரு குழு இருந்தது. தங்களுடைய அந்த தலைவர்மார்களை மக்கள் பின்பற்றினார்கள். அவர்களுக்கு தங்களுடைய தலைவர்கள் மீது நம்பிக்கை இருந்தது. காரணம்- அந்தத் தலைவர்களுக்கு அந்த மக்களுடைய மிகச் சரியாக புரிந்து கொள்ளக்கூடிய ஆற்றல் இருந்தது.
ஒரு ஆளுக்கு எத்தனை ராத்தல் மாமிசம் சாப்பிடக் கிடைக்கும், எத்தனை முறை கடற்கரைக்குப் போக முடியும், இப்போது கிடைக்கக் கூடிய சம்பளத்தின் மூலம் வெளிநாட்டிலிருந்து எத்தனை நகைகளை வாங்க முடியும் போன்ற விஷயங்கள் அல்ல இங்கு பிரச்சனை.தனி மனிதனுக்கு தான் முழுமையான மனிதனாக தோன்றுகிறான். உள்ளுணர்வில் அதிக வசதி படைத்தவனாக தோன்றுகிறான். அதிக பொறுப்புணர்வு தோன்றுகிறது.
எங்களுடைய நாட்டில் அந்தத் தனிமனிதனுக்குத் தெரியும்-புனிதமான அந்தக் காலகட்டம் தியாகம் நிறைந்த ஒன்று என்பது. தியாகங்களைப் பார்த்து அவனுக்கு உத்வேகம் பிறக்கும். சிராமெய்ஸ்த்ராவில்தான் அது முதலில் வெளியே தெரிந்தது. பிறகு அவர்கள் போர் புரிந்த எல்லா இடங்களிலும் அது அறிந்து கொள்ளப்பட்டது. தொடர்ந்து க்யூபா முழுவதும் அது தெரிந்தது. அமெரிக்கர்களின் முன்னணி பிரிவினர்தான் இந்த க்யூபா. முன்னணியில் இருக்கும் காவலர்களின் இடம் இதற்கு என்பதால், லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்த மக்களின் முழுமையான விடுதலைக்கான பாதையைக் காட்டிக் கொடுக்கும் நோக்கத்தில் அது தியாகங்களை வரவேற்க வேண்டும்.
நாட்டிற்குள் தலைமைப் பதவிக்கு அதன் முன்னணிப் படை என்ற பங்கு நிறைவேற்றப்பட வேண்டியிருந்தது. புரட்சியாளர்களான முன்னணிப் படையினரின் கடமையைப் பொறுத்தவரையில் அவன் தன்னுடைய எல்லாவற்றையும் தியாகம் செய்வதுடன் தேவைகள் எதையும் எதிர்பார்க்காமலும் இருக்கக்கூடிய உண்மையான புரட்சி ஒரே சமயத்தில் மகத்தானது, கடுமையான துக்கமும் கூட.
எதிர்பார்ப்பிற்குரியதைப் போல் தோன்றினாலும், நானொன்று கூறட்டுமா? உண்மையான புரட்சியாளன் மகத்தான அன்பால் வழி நடத்தப்படுகிறான். ஒரு மிகச் சரியான புரட்சியாளனுக்கு இந்த குணமில்லாமல் இருக்க முடியாது. உணர்ச்சிவசப்படும் மனமும் மரத்துப்போன அறிவும் இணைய, உணர்ச்சியற்று நின்றுகொண்டு மிகவும் துக்கங்கள் நிறைந்த முடிவுகளை கையாள்வது என்பது ஒரு வேளை தலைவரைப் பொறுத்தவரையில் ஒரு பெரிய நாடகம் என்றுதான் கூறவேண்டும். மக்கள் மீது கொண்ட இந்த அன்பு கலந்த மிகவும் புனிதமான கடமையின் அடையாளமாக இருக்க வேண்டும் நம்முடைய முன்னணிப் போராளி. அது அவனுடைய மிக முக்கிய ஒரு குணமாக இருக்க வேண்டும். சாதாரண மக்கள் தங்களுடைய அன்பை வெளிப்படுத்துகிற தளத்திற்கு, சிறு சிறு அன்றாட பற்றுகளின் தளத்திற்கு அவர்களால் இறங்கி வர முடியாது.
புரட்சியில் ஈடுபடும் தலைவர்மார்களுக்குப் பேச ஆரம்பிக்க மட்டும் செய்திருக்கும் குழந்தைகள் இருப்பார்கள். அந்தக் குழந்தைகள் தங்களுடைய தந்தைமார்களைப் பெயர் கூறி அழைக்கும் நிலையில் இருக்கமாட்டார்கள். புரட்சியை முழுமை செய்வதற்காக நடத்தும் பொது தியாகத்தின் பகுதி என்ற நிலையில் புரட்சியாளர்களுக்குத் தங்களின் மனைவிமார்களிடமிருந்து பிரிந்து செல்ல வேண்டியதிருக்கும். நண்பர்களான புரட்சியாளர்களுக்கிடையே அவர்களின் நட்பு வளையம் விலகி நின்றிருக்கும். அவர்களுக்குப் புரட்சிக்கு வெளியே வேறொரு வாழ்க்கை இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் தீவிரமான வெற்று தத்துவங்களிலும் உயிரற்ற பண்டிதத்தன்மையிலும் பொதுமக்களிடமிருந்து தனிமைப்பட்டு இருப்பதிலும் போய் சிக்கிக் கொள்ளாமல் இருக்க வேண்டுமென்றால் ஒரு மனிதனுக்கு விசாலமான மனிதநேயமும் பலமான நீதி உணர்வும் நேர்மையும் இருக்க வேண்டும். மனித இனத்தின் மீது கொண்டிருக்கும் இந்த உண்மையான அன்பு, உண்மையான செயல்பாட்டிற்கும் மிகப்பெரிய காரியங்கள் செய்வதற்கும் உதவியாக இருக்க நாம் ஒவ்வொரு நாளும் கடினமாக உழைக்க வேண்டும்.
புரட்சிக்குப் பின்னால் கொள்கைவழிப்பட்ட மிகப்பெரிய சக்தியாக இருப்பவர்கள் புரட்சியாளர்கள்தான். அவனுடைய தொடர்ச்சியான புரட்சிச் செயல் மரணம் வரை தொடர்ந்து கொண்டிருக்கும். உலகம் முழுக்க சோசலிஸத்தை உண்டாக்குவது வரை. ஒரு புரட்சியாளனின் உடனடியாக செய்யப்பட வேண்டிய கடமை பகுதி பகுதியாக நிறைவேற்றப்பட்டு முடிக்கும்போது, அவனுடைய புரட்சி வேகத்தின் கூர்மை குறைந்துவிடுகிறது என்ற தொழிலாளி வர்க்க சர்வதேசியத்தை அவன் மறந்து விடுகிறான் என்பதாக நினைத்து, அவன் நடத்திக் கொண்டிருக்கும் புரட்சி, ஆவேசத்தை உண்டாக்குகிற சக்தி என்ற நிலையில் அதற்குப் பிறகு செயல்படாது. அவன் வசதிகள் கொண்ட ஜடநிலைமையில் தன்னை இருத்திக் கொள்வான். நம்முடைய வீழ்ச்சியே இல்லாத எதிரியான சாம்ராஜ்யத்துவம் இதை சாமர்த்தியமாக பயன்படுத்திக் கொள்ளும். தொழிலாளி வர்க்க சர்வதேசியம் ஒரு கடமை. அது ஒரு புரட்சிகரமான தேவையும்கூட. அதனால் நாம் நம்முடைய ஆட்களுக்கு அதைக் கற்றுத் தரவேண்டும்.
இன்றைய சூழ்நிலையில் ஆபத்துகள் இருக்கின்றன என்பது உண்மைதான். வறட்டுத் தத்துவ வாதம் மட்டுமல்ல அது. மகத்தான கடமைகளுக்கு மத்தியில் பொதுமக்களுடன் கொண்டிருக்கும் உறவு தளர்ந்து போவது மட்டுமல்ல அது.பலவீனங்களின் ஆபத்தும் நமக்கு முன்னால் இருக்கிறது. ஒரு புரட்சியாளன் இப்படிச் சிந்திக்கிறான் என்பதாக எண்ணிப் பாருங்கள்: ‘நான் என்னுடைய வாழ்க்கை முழுவதையும் புரட்சிக்காக அர்ப்பணித்து வைத்திருக்கிறேன். அதனால், என்னுடைய மகனுக்குச் சில பொருட்கள் இல்லை. என் குழந்தைகளின் காலணிகள் கிழிந்து பழையதாகி விட்டிருக்கின்றன. என் குடும்பத்திற்குத் தேவைப்படுகிற பலவும் இல்லை. இப்படிப்பட்ட கஷ்டங்கள் எனக்கு இருக்க வேண்டியது இல்லை, அவனுடைய இந்த எண்ணம் அவன் மனதில் எதிர்காலத்தில் உண்டாகப் போகிற ஊழலுக்கு விதையை விதைக்கிறது என்பதுதான் உண்மை.
எங்களைப் பொறுத்தவரையில் எங்களின் குழந்தைகளுக்கு இது வேண்டும் இது வேண்டாம் என்றெல்லாம் இல்லை. இதைத்தான் அணிந்து நடக்க வேண்டும் என்பதை நாங்கள் தீர்மானித்து வைத்திருக்கிறோம். எங்களின் குடும்பங்கள் இந்த விஷயங்களையெல்லாம் புரிந்துகொண்டு அந்த நிலைமையைத் தொடர்ந்து காப்பாற்ற முயற்சிக்க வேண்டுமென்று நாங்கள் கட்டாயப்படுத்துகிறோம். மனிதன் மூலம்தான் புரட்சி உண்டாகிறது. ஆனால், மனிதன் தன்னுடைய புரட்சிக்கான உத்வேகத்தை ஒவ்வொரு நாளும் வடிவமைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.