சோசலிசமும் மனிதனும் - Page 8
- Details
- Category: அரசியல்
- Published Date
- Written by சுரா
- Hits: 8595
பொது கலாச்சாரத்தின் பிரச்னை என்பது இன்றைய சோசலிஸத்திலிருந்து சிறிது எடுப்பது, எப்போதோ முடிந்துபோன இறந்த காலத்திலிருந்து சிறிது எடுப்பது என்ற அளவில் சுருங்கிப் போனது (இறந்த காலம் மட்டும் என்பதால் அது ஆபத்தானது என்று கூறுவதற்கில்லையே!). இந்த வகையில் கடந்த நூற்றாண்டின் கலையின் அடித்தளத்திலிருந்துதான் சோசலிஸ்ட் ரியலிஸம் உயிர் பெற்றது.
அதே நேரத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் யதார்த்த கலையும் வர்க்கரீதியான கலைதான். மனிதனின் தனிமைப்பட்ட கவலை வெளிப்படும் இருபதாம் நூற்றாண்டின் வீழ்ச்சியுற்ற கலையை விட முழுமையான முதலாளித்துவக் கலை அது. கலாச்சார விஷயத்திற்கும் முதலாளித்துவத்தால் தர முடிகிற எல்லாவற்றையும் அது தந்திருக்கிறது. இன்றைய வீழ்ச்சியடைந்த கலையின் இறந்த பிணத்தின் கெட்ட நாற்றத்தைத் தவிர வேறு எதுவும் அதில் எஞ்சியிருக்கவில்லை.
கலையைப் பொறுத்தவரையில் எளிமையான ஒரே ஒரு நிலைமை சோசலிஸ்ட் ரியலிஸத்தின் பல்வேறு வடிவங்களாக இருக்க வேண்டுமென்று நாம் கூறுவது எதற்காக? சோசலிஸ்ட் ரியலிஸம் என்ற கொள்கைக்குப் பதிலாக நம்மால் சுதந்திரத்தைப் பார்க்க முடியாது. காரணம்- சுதந்திரம் இதுவரை நடைமுறையில் இருந்ததில்லை. புதிய சமூகம் முழுமையாக வளர்ந்து வருவது வரை அந்த கொள்கை நடைமுறையில் இருக்கப் போவதும் இல்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதல் பாதியிலிருந்து வடிவம் எடுத்த கலை வடிவங்களை எதையாவது செய்து ரியலிஸமாக்குவது என்ற கர்வத்துடன் ஒதுக்க முயற்சிப்பது நல்லதல்ல. கடந்த காலத்தின் தவறுகளை நோக்கித் திரும்பவும் செல்வதாக இருக்கும் அது. பிறப்பதும், தன்னை உண்டாக்கிக் கொள்வதில் ஈடுபடுவதுமாக இருக்கக் கூடிய மனிதனின் கலை வெளிப்பாடுகளை அது மூச்சடைக்கச் செய்துவிடும்.
சுதந்திரமான தேடலுக்கு இடம் கொடுத்து அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் பலன் கிடைக்கக்கூடிய பூமியில் மிகவும் வேகமாக முளைத்து இரண்டு மடங்காக பெருகிக் கொண்டிருக்கும் விதைகளை முழுமையாக அழிக்கும் கொள்கை ரீதியான - கலாச்சார ரீதியான அமைப்பின் வளர்ச்சி இன்று கட்டாயத் தேவையாக இருக்கிறது.
எங்களுடைய நாட்டில் இயந்திரத்தனமான ரியலிஸம் என்ற தவறைப் பார்க்க முடியாது. ஆனால், அதற்கு மாறாக இருக்கும் விஷயம். பத்தொன்பதாம் நூற்றாண்டின் கொள்கைகளையோ, முடிந்து போனவையும் நோய் வாய்ப்பட்டவையுமான நம்முடைய இந்த நூற்றாண்டின் கொள்கைகளையோ பின்பற்றாத ஒரு புதிய மனிதனைப் படைக்க வேண்டிய தேவையைப் புரிந்து கொள்ளவில்லை என்பதுதான் அதற்குக் காரணம்.
உண்மையான ஒரு இலக்கை, சாத்தியமாகக் கூடிய ஒன்றல்ல என்றிருந்தாலும், நாம் இருபத்தொன்றாம் நூற்றாண்டின் மனிதனைத்தான் படைக்க வேண்டியிருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால் நம்முடைய செய்ல்களின் முக்கிய நோக்கங்களில் ஒன்று அடுத்த நூற்றாண்டின் இந்த மனிதன்தான். கொள்கை ரீதியான தளத்தில் நாம் தெளிவான வெற்றியை அடைவதைப் பொறுத்து-இல்லாவிட்டால், அதற்கு மாறாக நம்முடைய தெளிவான தேடல்களின் அடிப்படையில் மிகவும் விசாலமான கொள்கைச் செயல்பாடுகளில் நாம் போய் அடைவதைப் பொறுத்து- மார்க்சிஸம்- லெனினிஸத்திற்கு- பரந்த உலகத்திற்கு நாம் ஒரு மிக முக்கியமான கொடையைத் தருகிறோம்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் மனிதனுக்கு எதிராக இருக்கும் நம்முடைய செயல் நம்மை இருபதாம் நூற்றாண்டின் முடிவுக்குத் திரும்பவும் கொண்டு போனது. அந்தத் தவறு நம்முடைய விதி அல்ல. நாம் அதை மீறியே ஆகவேண்டும். இல்லாவிட்டால் நாம் ரிவிஷனிஸத்திற்கு வழியைத் திறந்து விடுவதாக ஆகிவிடும்.
மக்கள் சீர்திருத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். புதிய கொள்கைகள் சமூகத்திற்குள் பலம் பெற்றுக் கொண்டேயிருக்கின்றன. சமூகத்தின் எல்லா உறுப்பினர்களுக்கும் முழுமையாக வளர்ச்சி உண்டாக்க உதவக்கூடிய சாத்தியமான அம்சங்கள், நம்முடைய கடமைகளை மேலும் ஆழம் கொண்டவையாக ஆக்குகின்றன. இது போராட்டத்திற்கான காலகட்டம். எதிர்காலம் நம்முடையதுதான்.
சுருக்கமாகச் சொன்னால் நம்முடைய கலைஞர்களின், அறிவுஜீவிகளின் தவறு இருப்பது அவர்களின் ஆரம்பத்தில்தான். அவர்கள் உண்மையான புரட்சியாளர்கள் அல்ல. வேறொரு செடியின் கொம்பில் ஒட்ட வைத்து நாம் ஒரு செடியை வளர்க்க முயற்சி செய்கிறோம். அதே நேரத்தில் அதன் செடியை நட்டு வளர்ப்பதுதான் நல்லது. பழைய நிலையிலிருந்து சுதந்திரமான புதிய தலைமுறை வடிவம் எடுக்கும். கலாச்சார தளமும், கொள்கை வெளிப்பாட்டு சாத்தியங்களும் பரவலாக்குவதை விட மிகவும் வேகமாக மகத்தான கலைஞர்கள் உண்டாகக்கூடிய சாத்தியம் இருக்கிறது.
முரண்பாடுகளால் சின்னாபின்னமான இன்றைய தலைமுறை குழப்பமடைந்து போவதையும், அவர்கள் புதிய தலைமுறையைக் குழப்பத்தில் மூழ்கச் செய்வதையும் தடுக்க வேண்டும் என்பது நம்முடைய கடமையாக இருக்கட்டும். நாம் மேலோட்டமான சிந்தனைக்குக் கீழே விலைக்கு வாங்காத தாசர்களாக ஆகிவிடக் கூடாது. அதாவது- அரசாங்கத்தின் செலவில், சுதந்திரத்தை அனுபவித்துக்கொண்டு வாழும் ஸ்காலர்ஷிப் மாணவர்களாக ஆகிவிடக்கூடாது. புதிய மனிதனின் பாடலை, மக்களின் பொருத்தமான குரலில் பாடக் கூடிய புரட்சியாளர்கள் அதிகமாக உண்டாகிக் கொண்டிருக்கிறார்கள். நீண்ட காலம் ஆகக் கூடிய ஒரு செயல் இது.
எங்களுடைய சமூகத்தில் இளைஞர்களும் கட்சியும் ஒரு முக்கிய பங்கினை வகிக்கிறார்கள்.
பழைய தவறுகள் எதுவும் இல்லாத புதிய மனிதனை உண்டாக்கக் கூடிய களிமண்தான் இளைஞர்கள் என்பதால் அவர்களுக்கு குறிப்பிட்டுக் கூறும் வகையில் முக்கியத்துவம் இருக்கிறது. எங்களின் ஆர்வங்களுக்கு ஏற்ப இளைஞர்களை வளர்த்துக் கொண்டு வருகிறோம். அவர்களுடைய கல்வி மேலும் முழுமையாகவும் தொடர்ந்தும் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. அவர்களும் தொழில் சக்தியுடன் உள்ள உறவுக்காக ஆரம்பத்திலிருந்தே அக்கறை கொண்டிருக்கிறார்கள். ஸ்காலர்ஷிப் மாணவர்கள் தங்களின் விடுமுறை காலத்திலோ இல்லாவிட்டால் படிப்புடன் சேர்ந்தோ சிறுசிறு வேலைகளிலும் ஈடுபடுகிறார்கள். சிலரைப் பொறுத்தவரையில் வேலை என்பது ஆசீர்வதிக்கப்பட்ட ஒன்று. மற்றவர்களுக்கு அது ஒரு கல்விக்கான பாதை. ஆனால், அது எந்தச் சமயத்திலும் ஒரு தண்டனையாக இருக்காது. ஒரு புதிய தலைமுறை வடிவம் எடுத்து வருகிறது.
கட்சிதான் முன்னணி அமைப்பு. மிகச் சிறந்த தொழிலாளர்களை அவர்களுடைய நண்பர்கள் கட்சியில் சேரும்படி கூறுகிறார்கள். கட்சி எண்ணிக்கைகளில் குறைந்தவர்களையே கொண்டிருந்தாலும், தொண்டர்களின் அர்ப்பணிப்பு உணர்வு காரணமாக அதற்கு மிகப்பெரிய அதிகாரம் கிடைக்கிறது. கட்சி பொதுமக்களுக்கான கட்சியாக வளர வேண்டும் என்பதுதான் எங்களின் ஆசை. ஆனால், பொதுமக்கள் முன்னணி படையினரோடு சேர்ந்து நிற்கும்போதுதான் அது சாத்தியமாகும்- அதாவது, கம்யூனிஸத்தை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கும்போது மட்டுமே.
எங்களுடைய செயல்களின் இலக்கு எல்லா நேரங்களிலும் இந்த கல்விதான். அதன் வளர்ச்சி பெற்ற உதாரணம்தான் கட்சி.அதிலிருக்கும் தொண்டர்கள் கடின உழைப்பு, தியாகம் ஆகியவற்றுக்கு உதாரணங்களாக இருக்க வேண்டும்.