சதையின் நமைச்சல்களுக்கு நடுவில்... - Page 2
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6387
எல்லா பெண்களும், எல்லா மனைவிமார்களும் இப்படித்தான் இருப்பார்களா? அல்லது... தனக்கு மட்டுமே உள்ள ஒரு சிறப்புத் தன்மையா இது? உள்ளுக்குள் தோன்றிய உணர்ச்சிகளுக்கு சில நிமிடங்கள் அடி பணிந்து, சரீரமும் மனமும் சோர்வடைந்தபோது மாலதி தனக்குத் தானே கேட்டுக் கொண்ட கேள்விகள் அவை. எல்லா பெண்களையும்போல ஒரு பெண்தான் அவளும். எந்தவொரு வேறுபாடும் இல்லை. உண்மையிலேயே அவளைப் போலவே இப்படிப்பட்ட உணர்ச்சிகள் நிரந்தரமாக எல்லா பெண்களையும் சிரமப்படுத்திக் கொண்டுதான் இருக்கும். அவர்களும் தங்களின் கண்களில் படக் கூடிய ஒவ்வொரு ஆணையும் பிடித்து இழுப்பதைப் போல பார்க்கத்தான் செய்வார்கள். பிறகு கண்களை மூடிக் கொண்டு ஒரே சிந்தனையுடன் அந்த ஆணுடன் உடலுறவு கொள்வது... இப்படி ஒரு நிமிட நேரத்திற்காவது மனதில் நினைத்துப் பார்ப்பார்கள். அந்த நேரத்தில் வேறொரு ஆண் கண்களில் படுவான். அந்த வகையில் அந்தச் செயல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கும். அப்படி இல்லாமலிருக்க எந்தவொரு காரணத்தையும் மாலதி பார்க்கவில்லை. ஆனால், அனைத்தும் ரகசியங்கள்... சிறிய ரகசியங்கள்!
மாலதிக்கு மிகவும் நெருக்கமான ஒன்றிரண்டு சினேகிதிகள் இருந்தார்கள். அவர்களிடம் ஒவ்வொரு நிமிடமும் செய்யக் கூடிய அவர்களுடைய மோசமான செயலைப் பற்றி கேட்க வேண்டும் என்று மாலதி பல நேரங்களிலும் ஆசைப்பட்டிருக்கிறாள். வேறு எதற்காகவும் இல்லை. தன்னை மாதிரிதான் அவர்களும் இருக்கிறார்களா என்பதைத் தெரிந்து கொள்வதற்காக மட்டுமே. ஆனால், கேட்பதற்கு அவளால் முடியவில்லை. அவர்கள் நல்ல தோழிகள். சந்தேகமில்லை. எனினும், அவர்கள் கூற மாட்டார்கள் என்றுதான் மாலதிக்குத் தோன்றியது. இன்று வரை தன்னுடைய விஷயங்களை மாலதி அவர்களிடம் கூறியதேயில்லை. அந்த பெண்கள் அனைவரும் யாருக்கும் தெரியாமல் இப்படித்தான் தங்களுக்குள்ளேயே வெந்து புகைந்து கொண்டிருப்பார்கள். ஓ...! என்ன ஒரு வாழ்க்கை பெண்களுடையது!
ஆண் இல்லாத ஒரு உலகம் எப்படி இருக்கும் என்பதை கற்பனை பண்ணிப் பார்க்க மாலதி முயற்சித்தது உண்டு. அந்த உலகத்தில் இந்த அமைதியற்ற தன்மையும் ஏக்கமும் எதுவும் இருக்காது. அங்கு பெண்கள் மோசமானவர்களாக ஆக மாட்டார்கள். பெண்களுக்கு மத்தியில் இருக்கக் கூடிய குறும்புத்தனமும் குறைபாடும் அந்த உலகத்தில் இருப்பதற்கு வாய்ப்பில்லை. எல்லா அவன்களும் ஒதுங்கியிருந்திருந்தால், இந்த கண்களுக்கு வேலை குறைந்திருக்கும். நரம்புத் துடிப்பு உண்டாகியிருக்காது. வேறு எதைப் பற்றியாவது சிந்தித்துப் பார்ப்பதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கும். பெண்ணுக்கு மனதில் அமைதி கிடைத்திருக்கும்.
அதோ... ஒருவன் சாலையில் நடந்து வந்து கொண்டிருக்கிறான். நல்ல உடல் நிலையைக் கொண்டவன். அவனுடைய முகம் அந்த அளவிற்கு நீளமாகத்தான் இருக்க வேண்டும். ஒரு பெரிய மூக்கு அவனுடைய முகத்திற்கு அழகு இல்லாமற் செய்கிறது. அந்த அளவிற்கு வெள்ளை நிறமும் இல்லை. அவனுக்கு மீசை சிறியதாக இருக்கிறதோ என்று மாலதிக்குத் தோன்றியது. எனினும், ஆள் பரவாயில்லை. அவனுக்கு ஒரு மனைவி இருப்பாளோ? இருந்தால், அவளுடைய அனுபவங்கள் எப்படிப்பட்டதாக இருக்கும்? முகம் முகத்துடன் ஒட்டிச் சேர்வதற்கு அந்த பெரிய மூக்கு தடையாக இருக்குமோ? உரசி உரசி முகம் வேதனை கொள்வதற்கு அவனுடைய மனைவியான அந்தப் பெண் விருப்பப்படவே வேண்டாம் என்று மாலதிக்குத் தோன்றியது. ஏனென்றால், அவனுடைய முகம் மொழு மொழு என்று இருக்கக் கூடிய முகம். அவனுடைய மார்புப் பகுதியில் அப்படியொன்றும் உரோமங்கள் இல்லை. யாரென்று தெரியாத அந்த மனிதனின் படுக்கையறையை மாலதி பார்த்துக் கொண்டிருக்கிறாள். மாலதி கண்களை மூடிக் கொண்டாள். அவனுடைய சரீரத்திலிருந்த எல்லா ஆடைகளும் இல்லாமற் போயின. மாலதி சற்று அதிர்ச்சியடைந்து விட்டாள். உரத்த குரலில் தான் கூப்பாடு போட்டு விட்டோமோ என்று அடுத்த நிமிடம் மாலதி சந்தேகப் பட்டாள்.
கண்களைத் திறந்தபோது, கேட்டைத் திறந்து ஒரு இளைஞன் உள்ளே நுழைந்து வருவதை அவள் பார்த்தாள். நல்ல தடிமனும் மிடுக்குத் தனமும் கொண்ட ஒருவன். அவனுக்கு ஒரு பெரிய மீசை இருந்தது. தலை முடியை அழகாக வாரி விட்டிருந்தான். மாலதி சிறிது நேரமே அவனைப் பார்த்திருப்பாள். பதைபதைப்புடன் அவள் வேகமாக எழுந்து உள்ளே ஓடினாள். நுழைந்து அறையின் கதவை உடனடியாக அடைத்து அவள் தாழ்ப்பாள் போட்டாள்.
அந்த ஆண் திகைப்படைந்து நின்று விட்டான். ஒரு வீட்டிற்குள் செல்வது, வீட்டின் நாயகி ஓடி உள்ளே நுழைந்து தாழ்ப்பாள் போடுவது- இது ஒரு அசாதாரண சம்பவமாயிற்றே! அவனுக்கு எதுவுமே புரியவில்லை.
ஒரு விஷயத்தைத் தெரிந்து கொள்வதற்குத்தான் அந்த மனிதன் அங்கு வந்தான். மாலதியின் கணவனுக்குச் சொந்தமான ஒரு கட்டிடம் காலியாகக் கிடந்தது. அந்த கட்டிடம் வாடகைக்குக் கிடைக்குமா என்பதைத் தெரிந்து கொள்வதற்காக அவன் அங்கு வந்தான். அந்த வீட்டின் நாயகனுடனோ அந்த பெண்ணுடனோ அவனுக்கு எந்தவொரு முன் அறிமுகமும் இல்லை.
சிறிது நேரம் அவன் அங்கேயே நின்று கொண்டிருந்தான். பிறகு அவன் சொன்னான்:
'நான் ஒரு விஷயத்தைத் தெரிந்து கொள்வதற்காக வந்தேன்.'
பதில் இல்லை.
மீண்டும் அந்த மனிதன் தான் வந்திருப்பதன் நோக்கத்தைத் திரும்ப கூறினான். அதற்கும் பதில் இல்லை. மேலும் சிறிது நேரம் நின்று விட்டு, அவன் அங்கிருந்து கிளம்பினான்.
அறைக்குள் நுழைந்த மாலதி தாங்கிக் கொள்ள முடியாத ஒரு நரம்புத் துடிப்புடன் ஒரு கட்டிலில் போய் விழுந்தாள்.
சிறிது நேரம் கழித்து நரம்பின் அந்த துடிப்பு சற்று அடங்கியவுடன், அவன் எதற்காக வந்திருப்பான் என்று மாலதி நினைத்துப் பார்த்தாள். திடீரென்று அவளுடைய மனக் கண்களுக்கு முன்னால் நிர்வாணமான அவளுடைய சரீரம், சிறிது கூட நூலிழை வித்தியாசமில்லாமல் பல தடவைகள் நிலைக் கண்ணாடிக்கு முன்னால் பார்த்திருப்பதைப் போல தோன்றியது. அடுத்த நிமிடம் தன்னுடைய ஆடையை யாரோ பலவந்தமாக பிடித்து அவிழ்ப்பதைப் போல மாலதி 'அய்யோ' என்று உரத்து கத்தி விட்டாள்.
சுரேந்திரன் வந்து அவளுடைய பின் பகுதியில் தட்டி அழைத்தபோதுதான் அவள் சுய உணர்விற்கு வந்தாள். தான் கட்டியிருந்த புடவையை வாரி இழுத்து எடுத்து சுற்றிக் கொண்டு அவள் எழுந்தாள். மாலதி தனக்கு முன்னால் நின்று கொண்டிருந்த ஆணையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய பார்வையும் நடந்து கொண்ட முறையும் சுரேந்திரனை பதைபதைப்பு அடையச் செய்தன. சிறிது நேரம் கழித்து, சுரேந்திரன் கேட்டான்: