கண்ணால் பார்த்த சாட்சி - Page 7
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6821
லலிதா சொன்னாள். எப்போதும் போல அன்றும் அவளுடன் வாதம் செய்ய வேண்டும் என்று சிறுவனுக்குத் தோன்றவில்லைல. அதனால் அன்றைய விளையாட்டு மிகவும் ஆரவாரம் எதுவுமில்லாமல் முடிந்தது. அவன் திரும்பிச் சென்றபோது லலிதாவின் தாய் கேட்டாள்: "சாலையின் ஓரத்தில்ல நடந்து போவாயா? மிகவும் கவனமாகப் போவாய் அல்லவா?"
அவன், "ம்..." என்றான். சாலையில் அப்போதும் ஆட்கள் யாரும் இல்லை. தூரத்தில் கடலோரத்தில் ஒரு பலூன் விற்பவன் நடந்து கொண்டிருந்தான். தூரத்தில் நின்றிருந்த ஒரு லாரி திடீரென்று புறப்பட்டு தனக்கு எதிரில் வந்து கொண்டிருப்பதை சிறுவன் பார்த்தான். அது நடைபாதையில் ஏறி தன்னைக் கீழே தள்ளுவதற்கு முன்னால் சிறுவனுக்கு ஒரு விஷயம் புரிந்து விட்டிருந்தது. அதன் ஓட்டுனர் டுக்காராம் என்ற உண்மை.
"என் வீட்டு திண்ணைக்கு வர மாட்டாயா?" எட்டுக்கால் பூச்சி ஈயிடம் கேட்கிறது.
"என் அழகான திண்ணைக்கு வா!"
ஹ! ஹ! ஹஹ்ஹ! ஹா! ஹஹ்ஹஹ்ஹ! உரத்த சிரிப்புச் சத்தங்கள் கேட்கின்றன. எல்லாருடைய வாய்களிலும் தங்கப் பற்கள் மட்டுமே இருக்கின்றன என்று சிறுவனுக்குத் தோன்றியது. பல்லாயிரக்கணக்கான மக்கள்! பல்லாயிரக்கணக்கான தங்கப் பற்கள்!
தலைமை ஆசிரியர் மேடையின் ஓரத்தில் நகர்ந்தவாறு சொன்னார்:
"இந்த வருடம் ஒரு சிறுவனுக்கு மட்டுமே பரிசு கிடைக்கிறது. அந்தச் சிறுவன் மூன்றாம் வகுப்பில் படிக்கும் மோகன். இங்குள்ள மெடல்களையும், வெள்ளிக் கோப்பைகளையும், புத்தகங்களையும் அவனுக்குத் தரப் போகிறேன்."
ஹ! ஹ! ஹ! ஹ!
ஆயிரம் தங்கப் பற்கள் பிரகாசித்தன.
"நாம் கொசுக்களைக் கொல்லாவிட்டால், கொசுக்கள் நம்மைக் கொன்றுவிடும். அதனால் அவற்றைக் கொன்றே ஆக வேண்டும்."
அந்த வகையில், கொசுக்கள் வானத்திலிருந்து மழையைப் போல கீழே இறங்கி வந்தபோது, தங்கப் பற்கள் ஒரே நேரத்தில் பிரகாசித்த போது, சிறுவன் கண்களை அகல விரித்துக் கொண்டு பார்த்தான். வெள்ளை நிறத்தில் சுவர்களைக் கொண்ட அந்த அறை தன்னுடைய படுக்கையறை அல்ல என்பதை அவன் தெரிந்து கொண்டான். சிறிது நேரம் அவன் தன்னுடைய கால் பகுதியில் தெரிந்த சுவரையும் நீண்ட தூண் விளக்கையும் பார்த்துக் கொண்டே படுத்திருந்தான். முகத்தைச் சற்றுத் திருப்பி வலது பக்கம் திரும்பப் பார்த்தபோது, அவன் தன்னுடைய தாயைக் கண்டான். அவள் ஒரு சிறிய ஸோஃபாவின் மீது சாய்ந்து படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தாள். அவன் எழுந்திருக்க மயற்சித்தான். ஆனால், அவனுடைய வலது காலில் ஒரு பெரிய ப்ளாஸ்டர் கட்டுப் போடப்பட்டிருந்தது. அந்தக் காலைல எடுக்க முடியாத அளவிற்கு கனம் உண்டாகியிருப்பதைப் போல் அவன் உணர்ந்தான். "அம்மா..." அவன் மெதுவாக அழைத்தான்.
அவனுடைய அன்னை கண்களைத் திறந்து எழுந்தாள். அவள் தன்னுடைய கட்டிலில் வந்து உட்கார்ந்தபோது, அவளுடைய கண்கள் ஈரமாகியிமருப்பதை அவன் பார்த்தான். அவன் எதுவும் பேசவில்லை. தன் தலைக்குள் கொசுக்கள் பாடுவதைப்போலவும் தான் வாந்தி எடுக்கப்போவதைப் போலவும் சிறுவன் உணர்ந்தான். அதனால் அவன் தன்னைச் சுற்றி ஆட்கள் வந்து கூடி நின்றபோதும், தன்னுடைய மாமா தன் கால்களுக்கு அருகில் உட்கார்ந்து, தான் இதுவரை பார்த்த வீரர்களிலேயே மிகப்பெரிய தைரியசாலி மோகன்தான் என்று கூறியபோதும் அவன் எதுவும் கூறவில்லை. கூற வேண்டும் என்ற நினைத்தான். பலவற்றையும் தன்னைக் கீழே தள்ளிய லாரியை டுக்காராம் ஓட்டி வந்தான் என்பதையும் தன்னை மட்டுமல்ல; கண்ணால் கண்ட சாட்சி என்ற ஒரு மனிதனையும் அவன் கொல்வதற்கு திட்டம் போட்டிருக்கிறான் என்பதையும் அவர்களிடம் கூறவேண்டுமென்று சிறுவன் நினைத்தான். ஆனால், அவர்களுக்கு மத்தியில் டுக்காராம் நின்று கொண்டிருந்தால்...? அந்தக் கட்டிலுக்கு அடியில் ஒளிந்திருந்தால்-...?"
அவனுடைய வாயில் ஒரு நர்ஸ் ஊற்றும் பாலை உள்ளே போக விட்டவாறு அவன் மல்லாக்கப் படுத்திருந்தான்.
"அதுஎந்ம மாதிரியான லாரி என்று உனக்குத் தெரியுமா?" அவனுடைய தந்தை அவனிடம் கேட்டார். "பலூன் விற்கும் மனிதன் லாரி வந்து உன்னைக் கீழே தள்ளுவதைப் பார்த்திருக்கிறான். ஆனால், அது அரசாங்கத்திற்குச் சொந்தமான லாரியா, தனியாருக்குச் சொந்தமான லாரியா என்பது தெரியவில்லையாம். உனக்கு ஞாபகத்தில் இருக்கிறதா, மகனே?"
"இப்போது அவனைச் சிரமப்படுத்த வேண்டாம்." அவனுடைய தாய் சொன்னாள்: "அவன் ஓய்வு எடுக்கட்டும்."
"அது டுக்காராம்தான்." சிறுவன் மெல்லிய ஒரு குரலில் சொன்னான்.
"டுக்காராமா? யார் அத?"
"டுக்காராம் பால்காரனைக் கொன்றுவிட்டானே! டுக்காராமும் பாண்டுரங்கும் சேர்ந்து..."
"மகனே, கண்களை மூடிப் படு. இப்போதும் எதுவும் கூற வேண்டாம்!"
அவனுடைய தாய் மெதுவாக அழுது கொண்டிருந்தாள். அந்தஅழுகைச் சத்தத்தைக் கேட்டுக் கொண்டே அவன் மீண்டும் உறங்கிவிட்டான்.
மறுநாள் அவன் கண்களைத் திறந்து பாண்டுரங்கின் பேச்சைக் கேட்டுத்தான். "எனக்கு இந்த செய்தியைக் கேட்டபோது மிகவும் கவலையாக இருந்தது. என்னுடைய மாணவர்களிலேயே மிகவும் அதிகமாக நான் விரும்புவது மோகனைத்தான். பரவாயில்லை... காலில் மட்டும்தான் காயம் என்ற தெரிந்த போதுதான், எனக்கு ஒழுங்காக மூச்சு விடவே முடிந்தது!"
சிறுவனுக்கு ஆச்சரியமாக இருந்து. தான் காண்பது கனவோ என்று கூட அவனுக்கு சந்தேகம் உண்டானது. பாண்டுரங்க் எதற்காக ஒரு தவிட்டு நிற கோட்டுடன் இங்கு வந்திருக்கிறான்? அவனுடனே இருக்கக்கூடிய தொப்பி தலையில் இல்லை.
"உட்காருங்க. அவன் கண் விழித்த பிறகு போனால் போதும். இப்போது அவனுடைய அப்பா வருவார். உணவு சாப்பிட வருவதற்கானநேரம் ஆகி விட்டதே!" அவனுடைய தாய் சொன்னாள்: "மாஸ்டர், நீங்கள் அவனுடைய அப்பாவைப் பார்த்த பிறகு போனால் போதும்."
"அதோ... பையன் கண்களைத் திறந்து விட்டான்!" பாண்டுரங்க் கட்டிலை நெருங்கினான். "இப்போது சுய உணர்வு வந்திருக்குமே!"
"நேற்று இரவில் கண்விழித்து வாய்க்கு வந்தபடியெல்லாம் உளற ஆரம்பிச்சிட்டான்." அவனுடைய தாய் சொன்னாள்: "ஒரு டுக்காராமைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தான். எங்களுக்கு மிகவும் பயமாகிவிட்டது."
"டுக்காராமா? அது யாரு?" பாண்டுரங்க் கட்டிலுக்கு அருகில் நின்று தலையைக் குனிந்து கொண்டே சொன்னான்: "அப்படிப்பட்ட ஒரு ஆளை எனக்குத் தெரியாது. ஏதாவது வேலைக்காரனாக இருப்பானோ?"
"எங்களுக்கு எந்தக் காலத்திலும் அந்த பெயரைக் கொண்ட வேலைக்காரன் இருந்ததில்லையே!"
பாண்டுரங்க் மீண்டும் நிமிர்ந்து நின்றான். "நான் பிறகு வருகிறேன். இரண்டு மணிக்கு நான் பள்ளிக் கூடத்தில் இருக்க வேண்டும்."
அவன் போனவுடன், அவனுடைய தாய் அவனக்கு அருகில் வந்து உட்கார்ந்து கொண்டு சொன்னாள்: