ஹோ சி மின் சிறை டைரி - Page 9
- Details
- Category: அரசியல்
- Published Date
- Written by சுரா
- Hits: 7337
ஹோ சி மின்னின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க சம்பவங்கள்
1890, மே 19 ந்யூயென் சின் குங்க் (ஹோ சி மின்) ஹோங்சு என்ற கிராமத்தில் பிறந்தார் - வியட்நாமின் ங்ஙீ-அன் பிரதேசத்தில் இருந்த ஒரு கிராமத்து பள்ளி ஆசிரியரின் மகனாக.
1905 – 1910 ஹ்யூவில் இருந்த தேசிய கல்லூரியில் அவர் படித்தார். வியட்நாமின் பழைய தலைநகரம் ஹ்யூதான்.
1911 – 1917 சமையல்காரர் ஒருவருக்கு உதவியாளர், நியூயார்க்கிலிருந்த ஹார்லெம் என்ற இடத்தில் ஒரு தற்காலிக வேலை, லண்டனில் குப்பைகள் பெருக்குபவர், சமையல்காரர் ஒருவருக்கு உதவியாளர், பாரீஸ் புகைப்பட ஸ்டூடியோ ஒன்றில் பணியாளர். இப்படி பல வேலைகளைச் செய்திருக்கிறார்.
1918 ஃப்ரான்ஸ் சோஷலிஸ்ட் கட்சியில் சேர்ந்தார்.
1919, ஜனவரி ங்யுன் அய் க்யோக் என்ற பெயரில் அவர் பாரீஸில் நடைபெற்ற வியட்நாம் தேசிய விடுதலை புரட்சி அமைப்பின் சர்வதேச கருத்தரங்கில் கலந்து கொண்டார்.
1920, ஜூலை தேசிய மற்றும் காலனிய கேள்விகள் பற்றிய லெனினின் ஆராய்ச்சி கட்டுரையை முதல் முறையாக அவர் படிக்கிறார். அதன் விளைவாக சர்வதேச கம்யூனிசத்தின் மீது ஆழமான ஈடுபாடு ஹோசி மின்னுக்கு உண்டாகிறது.
1920, டிசம்பர் ப்ரெஞ்ச் சோசலிஸ்ட்டுகள் நடத்திய பயணங்களில் கலந்து கொண்டார். அங்கு ஃப்ரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி தொடங்குவதற்காக வாக்களித்த பெரும்பாலானோருடன் அவர் போய் சேர்ந்தார். அதன் மூலம் வியட்நாமின் வரலாற்றில் முதல் கம்யூனிஸ்ட்டாக அவர் ஆனார்.
1924, ஜூன் மாஸ்கோவில் நடைபெற்ற 5வது உலக கமின்டென் காங்கிரஸில் இந்தோ சீனாவின் பிரதிதியாக கலந்து கொண்டார்.
1925, ஜூன் வியட்நாம் புரட்சிகர இளைஞர் சங்கத்தைத் தொடங்குவதற்கான ஆரம்ப வேலைகளைச் செய்தார். அது வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சிக்கு முன்னோடியாக இருந்தது.
1930, பிப்ரவரி 3 வியட்நாமிய கம்யூனிஸ்ட் மாநாடு ஒன்றுக்கு தலைமை வகித்தார். அது ஹாங்காங்கிலுள்ள கவ்லூன் என்ற இடத்தில் நடந்தது. (அதுதான் பின்னர் இந்தோ சீனா கம்யூனிஸ்ட் கட்சி, வியட்நாம் தொழிலாளர்கள் கட்சி என்றெல்லாம் இருந்து கடைசியாக வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியாக உருவெடுத்தது).
1935, ஜூலை – ஆகஸ்ட் 7வது உலக கமின்டென் காங்கிரஸில் கலந்து கொண்டார். சர்வதேச கம்யூனிச அமைப்பின் செயற்குழு இந்தோ சீனா கம்யூனிஸ்ட் கட்சியை அங்கீகரிக்க அங்குதான் முடிவு செய்தது.
1941, பிப்ரவரி 8 30 வருட அலைச்சலுக்குப் பிறகு அவர் காபேங்க் மாநிலத்திலுள்ள பாக்-போ என்ற கிராமத்திற்கு அருகில் எல்லைக் கோட்டை யாருக்கும் தெரியாமல் கடந்து வியட்நாமிற்குள் நுழைந்தார்.
1944 - 1945 பொதுவான ஆயுதப் பெருக்கத்திற்கான தயாரிப்பு வேலைகளைத் தொடங்கினார். 1944 ஆம் வருடம் டிசம்பர் 22ஆம் தேதி அரசியல் கிளர்ச்சிக்கு தனி ஆயுதப் பிரிவு என்ற அமைப்பிற்கு தொடக்கம் குறித்தார். அதுதான் எதிர்காலத்தில் வியட்நாம் மக்கள் ராணுவத்திற்கு அடித்தளமாக அமைந்தது. தேசிய விடுதலை குழுவின் தலைவராக 1945இல் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1945, செப்டம்பர் 2 வியட்நாம் ஜனநாயக குடியரசின் அரசாங்கத்தின் சார்பாக அவர் ஹனாய் பதின் சதுக்கத்தில் சுதந்திரப் பிரகடனத்தை அறிவித்தார். அதன் மூலம் தெற்கு கிழக்கு ஆசியாவில் முதல் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் நாடு பிறந்தது.
1946, மார்ச் 2 தேசிய சட்ட மன்றம் தன்னுடைய முதல் கூட்டத்தில் அவரை தலைவராக தேர்ந்தெடுத்தது. வியட்நாம் ஜனநாயக குடியரசின் பிரதம அமைச்சராக அவர் நியமிக்கப்பட்டார் (1955ஆம் ஆண்டு வரை அவர் அந்த பதவியல் இருந்தார்).
1946, டிசம்பர் 20 ஃப்ரெஞ்ச் காலனிகளுக்கு எதிராக வியட்நாம் மக்கள் போரிடுவதற்கு தயாராக வேண்டும் என்று வானொலியில் பேசினார்.
1950, செப்டம்பர் எதிரியின் வடக்கு பகுதிகளைக் கைப்பற்றுவதற்கான வேலைகள் நடந்தன. அதில் கிடைத்த வெற்றி வியட்நாம் ஜனநாயக குடியரசு சோவியத் யூனியனுடனும் மற்ற சோசலிச நாடுகளுடனும் நேரடியாக உறவு வைத்துக் கொள்ள வழி வகுத்தது.
1951, பிப்ரவரி இந்தோ சீனா கம்யூனிஸ்ட் கட்சியின் 2வது காங்கிரஸில் உரையாற்றினார். தன்னுடைய பெயரை வியட்நாம் தொழிலாளர்கள் கட்சி என்று மாற்றிக் கொள்ள அங்குதான் அது தீர்மானித்தது. தன்னுடைய உரையில் ஹோ சி மின் கிடைக்கக் கூடிய எல்லா இயற்கை சந்திகளையும் பயன்படுத்தி ஒரு வெற்றிகரமான முடிவை உண்டாக்க வேண்டும் என்று கட்சியையும் மக்களையும் கேட்டுக்
கொண்டார். வியட்நாம் தொழிலாளர்கள் கட்சியின் மத்திய குழுவின் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1954, ஜூலை 22 ஜெனீவா ஒப்பந்தங்களில் கையெழுத்து போடுவது பற்றியும், இந்தோ சீனாவில் அமைதி உண்டாக்குவது பற்றியும் மக்களுக்கு உரையாற்றினார்.
1955, ஜூன் சோவியத் யூனியனுக்கும் மற்ற சோசலிச நாடுகளுக்கும் கட்சி மற்றும் நாட்டின் தலைவர் என்ற முறையில் பயணம் சென்றார்.
1960, செப்டெம்பர் வியட்நாம் தொழிலாளர்கள் கட்சியின் 3வது காங்கிரஸ் நடைபெற்றது. அதில் வியட்நாமிய புரட்சி சம்பந்தமாக இரண்டு முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டன. 1) வடக்கில் சோசலிச அமைப்பை உண்டாக்குவது. அடக்கு முறையாளர்களிடமிருந்தும் அவர்களின் வழித் தோன்றல்களிடமிருந்தும் தெற்கை விடுதலை செய்வது. 2) நாட்டை அமைதியாக மீண்டும் இணைப்பது. வியட்நாம் தொழிலாளர்கள் கட்சியின் மத்திய குழுவின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1965, ஏப்ரல் உச்ச பாதுகாப்பு குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். தேசிய சட்டமன்றத்தின் ஒரு கூட்டத்தில் அவர் மக்களிடம் இப்படி கேட்டுக் கொண்டார்: ‘நாட்டின் நலனுக்காகவும் அமெரிக்க அடக்கு முறை ஆட்சியாளர்களுக்கு எதிராகவும் நடைபெறும் போராட்டத்தில் மக்கள் ஒவ்வொருவரும் திரண்டெழ வேண்டும்.’
1969, செப்டெம்பர் 3 ஹனாவிலிருந்த அவருடைய இல்லத்தில் மாரடைப்பு ஏற்பட்டு மரணத்தைத் தழுவினார். வியட்நாம் தொழிலாளர்கள் கட்சியின் மத்திய குழுவின் அரசியல் பிரிவு 1969, நவம்பர் 29ஆம் தேதி ஒரு முடிவு எடுத்தது. அதன்படி ஹோ சி மின்னின் உடலை பதப்படுத்தி வைத்திருப்பது என்றும், அவர் பற்றிய நினைவைத் தொடர்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது. 1975 ஆகஸ்டு 29 ஆம் தேதியிலிருந்து ஹோ சி மின் ஹனாயிலுள்ள பதின் சதுக்கத்திலிருக்கும் நினைவாலயத்தில் உறங்கிக் கொண்டிருக்கிறார்.