
"இங்க பாருங்க... நான் தான்... சுஹாசினி..."
'காற்றினிலே வரும் கீதம்' - அதில் தீவிரமாக மூழ்கிப் போயிருந்தேன். ராக்கிங் நாற்காலிக்குப் பக்கத்திலேயே ஸ்டீரியோ ரெக்காடிங் பிளேயர். இதில் எம்.எஸ். சுப்புலட்சுமி தன் இனிய குரலால் பாடிக் கொண்டிருந்தார். முன் பக்கம் நான்கு பிரம்பு நாற்காலிகள். வெள்ளை மணல் பரப்பிய மரத்தடி. சுற்றிலும் செடிகளும் கொடிகளும் மரங்களும் பல்வேறு வகைப்பட்ட பூக்களும் மலர்ந்து மணம் பரப்பிக் கொண்டிருக்கின்றன. நல்ல பகல் நேரம். ஒரே அமைதிச் சூழ்நிலை. பக்கத்து வீட்டில் ஆட்கள் இருக்கிறார்கள். கேட் வழியே வருபவர்களை இங்கிருந்து பார்க்க முடியாது. சாய்வு நாற்காலியில் சாய்ந்தவாறு பாட்டுக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். சுப்புலட்சுமியின் இளமைக் காலத்தில் அவர் பாடிய இனிமையான பாடல்-
"காற்றினிலே வரும் கீதம்..."
"இங்க பாருங்க... நான்தான்... சுஹாசினி..."
நான் பார்த்தேன். பார்ப்பதற்கு முன்பே... அருமையான வாசனை! பூக்களின் மணம் இல்லையே! பார்த்தேன்.
முடி "பாப்" செய்யப்பட்ட ஓர் அழகான இளம் பெண் - இளம் பெண்கூட இல்லை - இளம் சிட்டு. வனப்பான உடல் கட்டு. ஆரஞ்சு நிறத்தில் இறுக்கமாக அணிந்திருந்த ப்ளவுஸ், முழங்காலுக்கு மேலே நிற்கும் அடர்த்தியான நீல வர்ணத்தில் பாவாடை. வெளுப்பான - எடுப்பான தொடைகள். பாதங்களில் எதுவும் இல்லை. வெறுமையாக இருந்தன. இளம் சிட்டின் உடலில் நகை என்று எதுவுமே இல்லை. "பாப்" செய்யப்பட்ட அடர்த்தியான முடி, சற்று நீண்ட முகம். துடிப்பான, பிரகாசமான கண்கள்.
மொத்தத்தில் - எதிரில் நின்றிருந்த அந்த இளம்பெண்ணை கட்டிப்பிடித்து நெஞ்சோடு சேர்த்து முத்தம் கொடுக்க வேண்டும் போல் இருந்தது. ஒரு முத்தம் அல்ல. ஏகப்பட்ட முத்தங்கள். எல்லா இடங்களிலும். பாட்டின் ஒலியைக் குறைத்தேன்.
"பார்த்தேன்... உட்காரு சுஹாசினி."
சுஹாசினி உதடுகளில் மெல்லிய புன்னகையைத் தவழவிட்டவாறு என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
இரண்டு டம்ளர்களில் தேநீர் ஊற்றி, ஒன்றை சுஹாசினியிடம் கொடுத்தேன். சுஹாசினி தேநீரை அருந்தியவாறு, தங்கப் புன்சிரிப்புடன் என்னையே பார்த்தாள்.
"என்னைப் பற்றி என்ன நினைக்கிறீங்க?"
"நீ இப்போ என்ன செய்யிறே?"
"படிக்கிறேன் - காலேஜ்ல. நான் புரட்சியை விரும்புகிறேன். நக்ஸல் - அதைவிடப் பெரிய ஒரு புரட்சியை!"
"ரொம்ப சந்தோஷம். ஹெட் ஹண்டிங். மொத்தத்தில் நீ ஒரு தலை வேட்டைக்காரின்னு சொல்லு."
"தலையையும் வெட்டுவேன்."
"யாருடைய கழுத்தும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீலால ஆனது இல்லையே! வெட்டினால் யாரோட தலையும் தனியா கீழே விழத்தான் செய்யும். அழகான பொண்ணான உன்னோட ஆசையும் கட்டாயம் நிறைவேறும்."
"என் தலையை நீங்க வெட்டுவீங்களா?"- அழப்போகும் குரலில் கேட்டாள்.
"நான் ஒண்ணும் தலை வேட்டைக்காரன் இல்லியே! சுஹாசினி, உன்னை ஒண்ணு கேக்குறேன். ஆளை வெட்டிக் கொன்னுட்டு உன்னோட அழகான உள்ளங்கையை இரத்தத்துல முக்கி வெள்ளைச் சுவர்ல அதைப் பதிக்கணும்ன்ற ஆசை உனக்கு இருக்கா?"
"எனக்கு அப்படியெல்லாம் ஆசை கிடையாது."
"பிறகு என்ன ஆசை?"
"சொல்றேன். எனக்கொரு பூ தருவீங்களா?"
"முல்லை பூ... பிச்சிப் பூ... சாமந்திப் பூ... ரோஜாப் பூ... இதுல உனக்கு எந்தப் பூ வேணும் சுஹாசினி?"
"எனக்கு ஒரு சிவப்பு ரோஜாப் பூ வேணும். எந்திரிச்சிப் போய்ப் பறிச்சுக் கொண்டு வந்து எனக்குத் தரணும்."
"எனக்கே இலேசா மூச்சுவிடக் கஷ்டமா இருக்கு. ரெண்டடி நடந்தா நெஞ்சுல வலி வருது. மூச்சே நின்னுடும் போல இருக்கும். பிறகு ஒரு நிமிஷம் பலமா மூச்சை இழுத்து இழுத்துவிட்டு நார்மலுக்கு கொண்டு வரணும். பிறகு..."
"எனக்குத் தெரியும். கண்கள்ல காட்ராக்ட். மெதுவா எந்திரிச்சுப் போய் ஒரு பூ..."
மெல்ல எழுந்து சென்று ஒரு சிவப்பு ரோஜா மலரைப் பறித்துக் கொண்டு வந்து அதன் காம்பு சகிதமாக அவளிடம் நீட்டினேன்.
"அதுல முத்தத்தைப் பதிச்சிட்டுக் கொடுங்க."
முத்தத்தைப் பதித்துக் கொடுத்தேன். சுஹாசினி அதில் முத்தத்தைத் தந்து, ப்ளவுஸீக்குள் இரு மார்பகங்களுக்கும் இடையில் வைத்தாள். பிறகு என்ன நினைத்தாளோ, அதை எடுத்து என்னிடம் நீட்டினாள்.
"இன்னொரு தடவை அழுத்தி முத்தம் கொடுத்திட்டு தாங்க."
நானும் அவள் கேட்டுக் கொண்டபடி அழுத்தமாக முத்தத்தைப் பதித்து, மலரை அவள் கையில் தந்தேன். சுஹாசினியும் அழுத்தமான முத்தம் ஒன்றைப் பதித்து, அந்தப் பூவை இரண்டு மார்பகங்களுக்கும் நடுவில் ப்ளவுஸீக்குள் வைத்தாள்.
"நான் இந்தப் பூவை பத்திரமாக வச்சிருப்பேன்."
"எப்படி இருந்தாலும் வாடிப் போகுமே!"
"வாடத்தான் செய்யும். எனக்கு இஸ்லாம் மதம்னா ரொம்பவும் பிடிக்கும்."
"நல்லது. அந்த அளவுக்கு பிடிக்கிறதுக்குக் காரணம்?"
"எங்கள் வீட்டுக்குப் பக்கத்துல முஸ்லீம்கள் இருக்கிறாங்க. அவங்க அருமையா தயார் பண்ணி அப்பமும் கோழிக்கறியும் தருவாங்க. ரொட்டியும் இறைச்சியும் தருவாங்க. நான் அதை ரொம்ப விரும்பிச் சாப்பிடுவேன்."
"கிறிஸ்தவர்கள் கேக்கும் புட்டிங்கும் தருவாங்க. அப்போ...?"
"அவர்களுக்கு பிரியாணியும் இருக்கா? எனக்கு பிரியாணியும் தருவாங்க. அதுவும் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்."
"சுஹாசினி... உனக்கு இப்போ என்ன வயசு?"
"19. ஆனா... பாக்குறதுக்கு அப்படித் தோணுதா? சல்வார், கம்மீஸ், புடவைன்னு நிறைய வச்சிருக்கேன். சின்ன பொண்ணா தெரியணும்ன்றதுக்காக இந்த ட்ரெஸ்ஸைப் போட்டுட்டு வந்தேன்."
"வீட்ல யாரெல்லாம் இருக்காங்க?"
"அப்பா. பேங்க் மேனேஜர். அம்மா. வீட்டு வேலைகளைப் பாக்குறது அவங்கதான். தங்கச்சி படிக்கிறா. டெரஸ் பில்டிங். டி.வி, ரேடியோ எல்லாம் இருக்கு. கார் இருந்ததை வித்தாச்சு. புதிய ஒரு காருக்கு ஆர்டர் கொடுத்திருக்கு. அது வந்திருச்சுன்னா நான் இங்கே கார்லேயே வந்திடுவேன். வீட்டுக்குப் பக்கத்துல ஒரு மலை இருக்கு. நான் அதோட உச்சியில் போய் உட்காருவேன். எவ்வளவு அழகா இருக்கும் தெரியுமா? நாம அந்த மலை மேலே போய் ஒரு நாள் உட்காருவோம்!"
"என்னால மலை மேலே ஏற முடியாது!"
"பெரிய மலை ஒண்ணும் இல்ல. சின்ன குன்றுதான். நான் கையைப் பிடிச்சு ஏற வைக்கிறேன்!"
"கீழே விழுந்து செத்துப் போயிட்டேன்னு வச்சுக்கோ..."
"சும்மா இருங்க. நான் தாங்கிப் பிடிச்சுக்குவேன்!"
"சுஹாசினி, உங்க வீட்டோட பரப்பளவு எவ்வளவு?"
"ஒரு ஏக்கர். தென்னை மரங்கள், மாமரங்கள், பலா எல்லாமே அங்கே இருக்கு..."
"டி.வி. யில செய்தி வாசிக்கிற பொண்ணு தலைமுடியைப் "பாப்" செய்திருக்கிறதைப் பார்த்துத்தானே நீ முடியை "பாப்" வெட்டியிருக்கே?"
"அதெல்லாம் ஒண்ணுமில்லை... புரட்சி..."
"என்ன புரட்சி?"
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook