காதலின் வார்த்தைகள்
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7048
நீ எனக்கு எழுதுவதில்லை. நான் உன்னைப் பார்ப்பதில்லை. நீ ஒருமுறைகூட வருவதில்லை. அதனால் நீ என்னைக் காதலிக்கவில்லை என்று நான் நினைக்க வேண்டி இருக்கிறது. ஆனால், என்ன காணரத்திற்காக இப்படியெல்லாம் நடக்கிறது? நான் உனக்கு என்ன துரோகத்தைச் செய்துவிட்டேன்? நீ கூற வேண்டும்.
கூறியே ஆகவேண்டும். நான் உன்னை அந்த அளவிற்குக் காதலிக்கிறேன். அந்த அளவிற்கு! நீ எப்போதும் எனக்கு அருகில் இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். என்னுள் தோன்றும் காதலின் பெயர்களை, வார்த்தைகளைக் கூறி அழைக்கும்போது நாள் முழுவதும் உன்னை முத்தமிட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்று எனக்கு ஆசை உண்டாகிறது. நான் உன்னை வழிபடுகிறேன். துதிக்கிறேன். என் அழகான சேவலே, காதல் வயப்பட்ட உன்னுடைய இணை உன்னை வழிபடுகிறது.
ஸோஃபி
திங்கட்கிழமை.
'என் பிரிய தோழியே,
நான் கூறப்போகும் விஷயத்தைப் பற்றி உனக்கு எதுவுமே புரியாது. ஆனால், அது ஒரு பிரச்சினையே இல்லை. அதே நேரத்தில் வேறொரு பெண் நான் எழுதிய இந்தக் கடிதத்தைப் படிக்கக்கூடிய சூழ்நிலை உண்டானால், அவளுக்கு அது பயனுள்ளதாக இருக்கும்.
நீ ஊமையாகவும் செவிடாகவும் இருந்தாலும், கொஞ்ச காலமாக நான் உன்னைக் காதலிக்கிறேன் என்ற விஷயத்தில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. அதன் விளைவாக நடந்த ஒரே ஒரு விஷயத்தை நீ பேச ஆரம்பித்திருக்கிறாய். அவ்வளவுதான்.
உனக்குத் தெரியுமா ? காதல் காலத்துக் கனவுகள் எப்போதும் பாடல்களைப் பாடிக்கொண்டே இருக்கும். ஆனால், அவை அப்படிச் செய்யும்போது யாரும் அவற்றைத் தொல்லைக்கு உள்ளாக்கவோ, குழப்பங்கள் உண்டாக்கவோ கூடாது. இரண்டு முத்தங்களுக்கு இடையில் பேசும்போது சொற்கள் உயிர்ப்புடன் இல்லையென்றால், அவன் அல்லது அவள் அந்த உணர்ச்சிமயமான கனவுகளை அலங்கோலப்படுத்துகிறார்கள் என்றுதான் அர்த்தம். அழகிய இளம் பெண்களின் உதடுகளில் இருந்து உணர்ச்சியற்ற சத்தங்கள் எப்போதும் புறப்படாது.
என்னை உன்னால் புரிந்துகொள்ள முடியவில்லையா? அப்படியென்றால், அந்த அளவிற்கு நல்லதுதான். நான் என்னுடைய வார்த்தைகளைத் தொழலாம் அல்லவா? நான் இதுவரை சந்தித்த இளம் பெண்களிலேயே அழகானவளும், ஆராதனை செய்யக் கூடியவளுமாக இருப்பவள் நீதான்.
உனக்கு இருப்பதைவிட அதிகமான கனவுகளும், அதிகமான புரிந்துகொள்ள முடியாத வாக்குறுதிகளும், அதிகமான ஆழம் கொண்ட காதலும் நிறைந்த கண்கள் இந்த உலகத்தில் வேறு எங்கு இருக்கின்றன? இருக்கிறது என்று நான் நினைக்கவில்லை. அழகான உதடுகளை விரித்து, வரிசையான பற்களைக் காட்டி நீ புன்னகையை வெளிப்படுத்தும்போது, அந்த அழகான வாய்க்குள்ளிருந்து வார்த்தைகளால் கூற முடியாத இசை எழுகிறது - விளக்க முடியாத இனியதாக ஏதோ ஒன்று புறப்படுகிறது என்றெல்லாம் கூற யாருக்கும் ஆர்வம் உண்டாகும்.
அப்போது நீ என்னிடம் பேசுகிறாய். அதுதான் என்னை சிரமத்துக்குள்ளாக்குகிறது. நீதான் பார்க்கிறாயே! என் நாக்கால் விளக்க முடிவதைவிட, அது என்னைத் துன்பத்திற்குள்ளாக்குகிறது. உன்னை ஒருமுறைகூட பார்க்காமல் இருந்தால் என்ன என்று நான் நினைக்கிறேன்.
எதுவுமே புரியவில்லை என்று நீ நாடகம் ஆடுகிறாய்... அப்படித்தானே? ஆனால், நான் அதை எப்போதோ கணக்கிட்டுவிட்டேன்.
முதல் தடவையாக நீ நான் வசித்துக் கொண்டிருந்த இடத்திற்கு வந்ததும், என்னைச் சந்தித்ததும் உனக்கு ஞாபகத்தில் இருக்கிறதா? எவ்வளவு சந்தோஷத்துடன் நீ வீட்டிற்குள் வந்தாய்? உன் பாவாடையில் ஒட்டியிருந்த ஒரு காட்டு மலரின் நறுமணம் நீ வருவதை முன்கூட்டியே எனக்கு உணர்த்தியது. ஒரு வார்த்தைகூடப் பேசாமல் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டே நாம் நீண்ட நேரம் நின்றிருந்தோம். பிறகு இரண்டு முட்டாள்களைப்போல, ஒருவரையொருவர் கட்டிப்பிடித்துக் கொண்டோம். அந்த நிமிடத்திலிருந்து கடைசிவரை ஒரு வார்த்தையைக்கூட நாம் ஒருவரோடொருவர் பரிமாறிக்கொள்ளவில்லை.
நம்முடைய உடல் பிரிந்போது, நம்முடைய நடுங்கிக் கொண்டிருந்த கைகளோ, கண்களோ எதையும் கூறவில்லை. எப்படிப்பட்ட மொழி ஊடகத்தாலும் அதை விவரிக்க முடியாது. மிகவும் குறைவாக நான் அப்படி யோசித்துப் போய்க் கொண்டிருப்பதற்கு மத்தியில் நீ மெதுவான குரலில் சொன்னாய். "தாமதிக்காமல் நாம் மீண்டும் சந்திப்போம்."
அதுதான்... அது மட்டும்தான் நீ சொன்னது என்றால், நீ இங்கு விட்டுப்போன சந்தோஷம் தரும் கனவுகளைப் பற்றி, அவற்றின் ஒவ்வொரு நிமிட ஒளியைப் பற்றி உன்னால் கற்பனை பண்ணிக்கூட பார்க்க முடியாது.
முட்டாள்களாக இல்லாத ஆண்களுக்குக் காதல் என்பது ஒரு விளையாட்டு அல்ல என்பதும், காதலின் ஒரு சிறு அடையாளம்கூட அவர்களைத் தலைகீழாகப் புரட்டிவிடும் என்பதும் உனக்குத் தெரியாது பெண்ணே. பெண்களாகிய நீங்கள் காதலிப்பதற்கு மத்தியில் அதன் பரிதாபத்திற்குரிய விஷயங்களைப் பற்றி எங்கு நினைக்கிறீர்கள்? அவலட்சணம் பிடித்த அம்சங்களைப் பற்றி நீங்கள் எங்கு தெரிந்து கொள்வீர்கள்?
ஒல்லியான ஒரு இளம் பெண்ணின் வாயிலிருந்து உதிரும் வார்த்தைகள் இனிமையாக இருக்கின்றன என்று தோன்றும்போது, அதே வார்த்தைகள் ஒரு தடிமனான பெண்ணின் வாயிலிருந்து உதிரும்போது அவ்வளவு இனிமையாக இல்லை என்று படுவது ஏன்? ஒருத்திக்கு இனிமையாக இருப்பது இன்னொருத்திக்கு இனிமையாக இல்லாமற்போவது எப்படி?
ஒரு பெண்ணுக்கு இன்பம் அளிப்பதாய் தோன்றக்கூடிய அணைப்பு வேறொரு பெண்ணுக்கு வெறுப்பை உண்டாக்குவது ஏன்? எதற்காக? எல்லா விஷயங்களிலும், குறிப்பாக காதல் விஷயத்தில் முழுமையான பொருத்தம் - வார்த்தைகளிலும் பார்வையிலும் குரலிலும் அசைவிலும் செயல்களிலும் - காதலை வெளிப்படுத்துவதில் முன்னால் நின்றிருக்கும் மனிதனுக்கு அவசியம் தேவைப்படுகிற ஒரு விஷயம் இது. வயது விஷயத்திலும், உயரம் பற்றிய விஷயத்திலும், தலைமுடியின் நிறம் பற்றிய விஷயத்திலும், அழகு பற்றிய விஷயத்திலும் ஒரு பொருத்தம் கட்டாயம் வேண்டும்தான்.
ஆவசேத்துடன் இருக்கும், உணர்ச்சிகளின் சூறாவளியைச் சந்தித்து நின்றிருக்கும் முப்பத்தைந்து வயதுப் பெண் இருபத்தைந்து வயதுப் பெண்ணின் காதல் வயப்பட்ட அணைப்புகளின், கொஞ்சல்களின் மகிழ்ச்சியைத் தன்னிடம் கொண்டிருக்க வேண்டும். ஆனால், தான் வித்தியாசமாக முத்தமிட வேண்டும் என்றோ, வித்தியாசமாக நடந்துகொள்ள வேண்டும் என்றோ, ஒரு ஜூலியட்டைவிட தந்திரம் கொண்ட பெண்ணாக ஆகவேண்டும் என்றோ அவள் புரிந்துகொள்ள வேண்டும் என்றில்லை. பத்து பேர்களில் ஒன்பது காதலர்களை ஒரு தவறுகூட செய்யாமல் அவள் வெறுப்படையச் செய்வாள். நான் கூறுவது உனக்குப் புரிகிறதா? இல்லை? நான் அப்படி நினைக்கிறேன்.
உன் அழகிற்கு நீயே கடிவாளம் போடுகிற நேரத்திலிருந்து என்னைப் பொறுத்தவரையில் எல்லாமே முடிந்துவிட்டன. எப்போதும் முடிவே இல்லாதது என்பதைப் போன்றிருக்கும் ஒரு முத்தத்தில் ஈடுபட்டுக்கொண்டு, கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்கள் நீளக்கூடிய ஒரு அணைப்பிற்குள் நாம் நுழைகிறோம்.