
மேகங்களைப் போன்ற ஆன்மாக்களுக்கு மத்தியில் அவை எங்கே தப்பித்துப் போய்விடப் போகின்றனவோ என்று பயந்து அப்படிப்பட்ட முத்தங்கள், காதலர்களைக் கண்களை மூடிக்கொள்ளும்படிக் கூறுகின்றன. உதடுகள் பிரியும்போது நீ என்னிடம் இப்படிக் கூறுவாய்:
'அது இனிமையாக இருந்தது என் தடி நாயே!'
சமையல் நூல்களிலும், தோட்ட வேலையைப் பற்றிய புத்தகங்களிலும் இருக்கும் பலதரப்பட்ட உயரினங்களைப் பற்றியும், காய்கறிகளைப்பற்றியும் நீ என்னிடம் புலம்பிக் கொண்டிருந்த அந்த நிமிடங்களில் எனக்கு உன்னை உதைக்க வேண்டும்போல் இருந்தது. ஆனால், அதனால் எந்தவொரு பிரயோஜனமும் இல்லை.
காதலில் அணைப்புகள் முரட்டுத்தனமும் மிருகத்தனமும் கொண்டவை. அதிகமாக சிந்திப்பதாக இருந்தால், அது ஒரு மோசமான வேலை என்பதே உண்மை. என் சிறு பெண்ணே! காம உணர்ச்சியின் எந்த தேவதை உன் கடிதத்தின் இறுதி வார்த்தைகளை எழுத உன்னைத் தூண்டியது? நான் அவற்றைச் சேகரித்து வைத்திருக்கிறேன். ஆனால், உன்மீது கொண்ட காதல் காரணமாக நான் அதை உன்னிடம் காட்ட மாட்டேன்.
சில நேரங்களில் சூழ்நிலைக்குப் பொருத்தமில்லாத பல விஷயங்களையும் நீ கூறியிருக்கிறாய். உதாரணத்திற்கு 'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்ற வார்த்தையை நீ பல நேரங்களில் உச்சரிப்பதை நான் கேட்டிருக்கிறேன். அத்தகைய சில சந்தர்ப்பங்களிலாவது என் விருப்பத்தை ஒரு சிரிப்பில் ஒதுக்கிக்கொள்ள நான் மிகவும் சிரமப்பட்டிருக்கிறேன். 'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்ற வார்த்தைகளைக் கூறுவதற்குப்
பொருத்தமில்லாத, எத்தனையோ சந்தர்ப்பங்கள் உண்டாகி இருக்கின்றன. நான் அதை உன்னிடம் கூறாமல் இருக்க முடியாது.
ஆனால், உனக்கு என்னைப் புரிந்துகொள்ள முடியவில்லை. வேறு பல பெண்களுக்கும் என்னைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர்கள் என்னை ஒரு முட்டாளாக நினைக்கலாம். ஆனால், அது எனக்கு ஒரு பிரச்சினையே இல்லை. அதிகமாக பசியுள்ளவர்கள் ஆசை அதிகமாகி எல்லாவற்றையும் வாரித்தின்பார்கள். ஆனால், நாகரீகமாக இருக்கும் மனிதர்கள் மனக்கட்டுப்பாட்டுடன் இருப்பார்கள். அவர்கள் மிகவும் சாதாரண விஷயம் என்பதைப்போல உணவை நினைப்பார்கள். இந்த விஷயத்தில் சமையலைப் போலத்தான் காதலும்.
ஒரு விஷயம்தான் எனக்குப் புரியாமல் இருக்கிறது. மிகவும் அழகான பின்னல் வேலைப்பாடுகள் கொண்ட காலுறைகள்மீதும், அசாதாரண நிறங்கள்மீதும், உள்ளாடைகளின் அடியில் இருக்கும் லேஸ்கள் மீதும், மறைத்து வைத்திருக்கும் பெண்மையின் ஆவேசங்கள் மீதும் ஈடுபாடு வைத்திருக்கும் பெண்களுக்குத் தாங்கள் பொருத்தமில்லாத நேரத்தில் பயன்படுத்தும் கொஞ்சல்கள் தாங்க முடியாத வெறுப்பை உண்டாக்குகின்றன என்ற விஷயம் எப்படிப் புரியாமலே போகிறது?
சில சந்தர்ப்பங்களில் ஆண்மைத்தனமான - முரட்டுத்தனமான செயல்பாடுகள் ஆச்சரியங்களை உண்டாக்குகின்றன. அவை கற்பனைகளை உண்டாக்கவும், இதயத்துடிப்பை அதிகரிக்க வைக்கவும் செய்கின்றன. போராடும் சந்தர்ப்பங்களில் அவை அவசியம்தான். காம்ப்ரோனின் வார்த்தைகள் முக்கியத்துவம் கொண்டவை தானே?
சரியான நேரத்தில் நடக்கக் கூடியது எதுவும் நம்மை நடுங்கச் செய்வது இல்லை. ஆனால், சில நேரங்களில் தேவையற்ற வார்த்தைகளை உச்சரிப்பதில் இருந்து நம்முடைய நாக்கைப் பின்வாங்கச் செய்ய நமக்கு உரிமை இருக்கிறது.
நீ எதையும் மறுத்துக் கூறமாட்டாய் என்ற நம்பிக்கையுடன் ஆவேசத்துடன் நான் உன்னை இறுக அணைக்கிறேன்.
ரெனே.
வாட்டர் லூ போருக்கு மத்தியில் ஜெனரல் காம்ப்ரோன் இப்படிக் கூறினார்: 'இறந்து விழுந்தாலும், ஒரு போர்வீரன் எந்தச் சமயத்திலும் அடிபணிந்துவிடக்கூடாது.'
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook