ஜலாலுத்தீன் ரூமியின் ஞானப் பெட்டகம் - Page 4
- Details
- Category: தத்துவம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7069
நீங்கள் உங்களின் சிறகுகளை
விடுதலை பெறச் செய்து
உங்களின் சந்தோஷ ஆன்மாவை
சுதந்திரமாக்கினால்,
நீங்களும் உங்களைச் சுற்றியிருக்கும்
அனைவரும் புறாக்களைப் போல
பறந்து திரியலாம்.
* * *
மெழுகேற்றப்பட்ட
ஒரு கண்ணாடி
பிரதிபலிக்காமல் இருக்காது.
* * *
ஏதாவது தவறு நேர்ந்தால்,
முதலில் உன்னை நீயே
குற்றம் சொல்லிக் கொள்.
* * *
டேபிளுக்கு முன்னால் அமர்ந்து
யார் சாப்பிடுகிறார்களோ,
அவர்களுக்குத்தான்
ஒரு உணவின் சுவை தெரியும்.
* * *
ஒரு சாலை
ஒரு தனியாக இருக்கும் வீட்டில் முடியலாம்.
ஆனால், அதுவே காதலின் சாலை அல்ல.
காதல் என்பது ஒரு நதியைப் போன்றது.
அதிலிருந்து அள்ளி பருகு.
* * *
உன் ஆன்மா
எதைச் செய்யுமாறு கூறுகிறதோ,
அதை எவ்வளவு சீக்கிரமாக செய்கிறாய்
என்பதுதான் முக்கியம்.
* * *
ஒளிந்து கொள்வதற்கு
ஒரு பொந்தைத் தேடி
உலகமெங்கும் ஓடிக் கொண்டிருக்காதே.
ஒவ்வொரு குகையிலும்
பயங்கரமான மிருகங்கள் இருக்கின்றன.
நீ எப்போது கடவுளுடன்
தனியாக இருக்கிறாயோ,
அப்போதுதான் உண்மையான ஓய்வு
வந்து சேர்கிறது.
* * *
ஒரே விஷயத்தை நிராகரிக்கவும் முடியும்…
ஏற்றுக் கொள்ளவும் முடியும்.
ஒரு ஜாடியில் ஆயிரம் வருடங்களாக
இருந்து கொண்டிருக்கும் ஒயின்,
ஒரே ஒரு வருடம் மட்டுமே
வயது கொண்டிருக்கும் காதலை விட
குறைவான சுவையையே கொண்டிருக்கும்.
* * *
நீ காதலை காதலிக்கும் பட்சம்,
உன்னையே நீ பார்த்துக் கொள்.
இந்த காதலுடன் அது எப்படி இருக்கிறது?
நான் உன் உலகத்தைப் பார்க்கிறேன்…
உன்னை அல்ல.
* * *
அறிவை அடைந்தவர்கள்,
பார்வையாளர்கள்
அதை விரும்புவார்களோ இல்லையோ
என்று கவலைப்படுகிறார்கள்.
புகழ் பெறுவதற்கான ஒரு கருவியாக
அது இருக்கிறது.
* * *