Read Free Online Tamil Novels,Stories,Cinema,Crime,Health and Recipes

Switch to desktop Register Login

ஜலாலுத்தீன் ரூமியின் ஞானப் பெட்டகம் - Page 2

Jalaluddin-rumiyin-gnaanappettagam

மேலோட்டமான உலகம்

எவற்றையெல்லாம்

மிக உயர்ந்தவையாக நினைக்கின்றதோ,

அவை ஆன்மாவின்

உண்மைத்தன்மையில் ஒளிராது.

*  *  *

உன்னுடைய காலணி

இல்லாத கால்கள்

எங்கு நடக்கின்றனவோ,

அங்கு நான் இருக்க விரும்புகிறேன்.

ஏனென்றால்,

நிற்பதற்கு முன்னால்,

நீ தரையைப் பார்க்கலாம்.

நான் அந்த ஆசீர்வாதத்தை

விரும்புகிறேன்.

*  *  *

பணம், புகழ்,

வறுத்த மாமிசத்தைக் கடிப்பது -

இவற்றையெல்லாம் விட

இங்கு விரும்புவதற்கு

இன்னும் விஷயங்கள்

இருக்கின்றன.

*  *  *

ஒரு பறவை

தன் தலையை மேலும் கீழும்

அசைத்துக்கொண்டே

இரையைக் கொத்துவதைப் போல,

தினமும் பிரார்த்தனை

செய்து கொண்டிருக்காதே.

பிரார்த்தனை என்பது

ஒரு முட்டையைப் போன்றது.

உள்ளே செயலற்று இருப்பதை

பொரிக்க செய்வதைப் போல...

*  *  *

முள்ளில் வாழ்ந்து கொண்டிருக்கும்

மிகவும் அரிதான நறுமணம்-

அதுதான் ரோஜா.

*  *  *

வார்த்தைகள், பொய்களைக் கொண்டு

முலாம் பூசப்பட்டிருக்கும்போது,

அவை ஒரு பழைய விளக்கில்

விழுந்து கொண்டிருக்கும்

நீர் துளிகளைப் போல ஆகி விடுகின்றன.

திரி வெளிச்சத்தை தரவே தராது.

*  *  *

நீ சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று

மனிதர்கள் விரும்புகிறார்கள்.

நீ உன்னுடைய வேதனைகளை

அவர்களுக்கு பரிமாறி விடாதே.

*  *  *

தோட்டத்தைப் பற்றியே

பேசிக்கொண்டிருக்காதே.

திராட்சைக் கனிகளை சாப்பிடு.

*  *  *

ஒரு கண்ணாடியைப் போல

தெளிவாக இரு.

எதையும் பிரதிபலிக்காதே.

*  *  *

நம் முன்னோர்களின் வெளிச்சங்கள்

பெரிதாக ஆக்கிரமிக்கவில்லை -

ஆதவனுக்குள் சேர்ந்திருக்கும் அளவிற்கு.

*  *  *

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Top Desktop version