ஜலாலுத்தீன் ரூமியின் ஞானப் பெட்டகம்
- Details
- Category: தத்துவம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7069
சட்ட திட்டங்கள் காதலிலிருந்து உண்டகின்றன
என்பது உண்மையாக இருக்கும் பட்சம்,
காதலர்கள் அந்த சட்ட திட்டங்களைப் பற்றி
சிறிதும் கவலைப்படுவதே இல்லை
என்பதும் உண்மைதான்.
மெழுகுவர்த்தியை நோக்கி
நேராக பறந்து செல்.
அந்த எரிதல் மிகவும் நெருக்கமானதாகவும்,
மிகவும் குளிர்ச்சியானதாகவும் இருக்கும்.
அது நம்மை அதன் நெருப்புக்குள்
வரும்படி தூண்டும்.
* * *
நீ சேறு படிந்த நீருக்குள்
எந்த அளவிற்கு சிரமப்பட்டு பார்க்கிறாய்
என்பது ஒரு பொருட்டே அல்ல.
நீ நிலவையோ சூரியனையோ
பார்க்கப் போவது இல்லை.
* * *
சில விளக்குகள்
அவை எண்ணெய்யின்
மூலம் எரியும்போது,
வெளிச்சத்தை அளிப்பதைவிட
அதிகமான புகையை
வெளியே விடுகின்றன.
* * *
யார் வசை பாடுகிறார்களோ,
அவர்களிடமிருந்து தப்பி ஓடாதே.
அதேபோல முரண்பாடுகளைக் களையாமல்,
விலகி ஓடாதே.
இல்லாவிட்டால் நீ மிகவும்
பலவீனமானவனாக ஆகி விடுவாய்.
* * *
ஒரு மெழுகுவர்த்தியின்
அழகிலிருந்து ஒரு பட்டுப்பூச்சியைப்
புரிந்து கொள்.
* * *
காதலர்கள் தங்களுக்குள்
ஒரு உண்மை இருக்கிறது
என்பதை உணர்வார்கள்.
அதை பகுத்தறிவாளர்கள் மறுப்பார்கள்.
* * *
விமானம் செல்வதற்கு
பல வழிகள் இருப்பதைப் போல,
புலர்காலைப் பொழுதில்
பிரார்த்தனை செய்வதற்கும்
பல வழிகள் இருக்கின்றன.
* * *
இந்த பிரபஞ்சத்தில் இருக்கும்
ஒவ்வொரு பொருளும்,
உயிரும் ஒரு கண்ணாடி பாத்திரத்தில்
நிறைந்து வழியும் அறிவையும்,
அழகையும் போன்றவையே.
* * *
ஒரே ஒரு மனிதனை
காதலுடன் பார்க்கும்
ஒரு அடக்கமான பெண்-
அதுதான் ஆன்மீக அறிவு.
* * *