ஜலாலுத்தீன் ரூமியின் ஞானப் பெட்டகம் - Page 5
- Details
- Category: தத்துவம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7069
Page 5 of 5
வெளியே செல்ல வேண்டிய அவசியமே இல்லை.
உருகும் பனியாக இரு.
உன்னை நீயே சுத்தமாக்கிக் கொள்.
* * *
நான் ஒரு வெறும் அம்பு.
உன்னுடைய வில்லில் என்னைப் பொருத்து.
நான் பறந்து கொள்கிறேன்.
* * *
சூரியன் நெருப்பில்
தாடை தொடும் வண்ணம் நின்று கொண்டிருக்கிறது.
அதனால் நமக்கு பகல் வெளிச்சம் கிடைக்கிறது.
* * *