Lekha Books

A+ A A-

பாம்பு வழிபாடு

pampu valipadu

நான் பிறந்து வளர்ந்தது மூவாற்றுப்புழை நதிக் கரையில் இருக்கும் தலயோலப்பறம்பில்தான். வைக்கத்திற்கு அருகில் அது இருக்கிறது. மூவாற்றுப்புழை நதியில் வருடத்தில் இரண்டு முறை வெள்ளப் பெருக்கு உண்டாகும். கரைகளைக் கடந்து ஓடவும் செய்யும். ஒரு காலத்தில் நாங்கள் பெரிய படகுகளில்தான் வசித்ததே. அதாவது- பெரிய அளவில் வெள்ளப் பெருக்கு உண்டாகிற காலத்தில். அந்த மலையிலிருந்து வரும் நீரில் பலவும் மிதந்து வரும். யானை இறந்து மிதந்து வருவதையும் நான் பார்த்திருக்கிறேன். பிறகு... மரங்கள், பாம்புகள்... பாம்புகள் இறந் தவை அல்ல.

அவை மரங்களின் கொம்புகளிலும் வீடுகளின் மீதும் அபயம் தேடி இருந்து கொண்டிருக்கும். (அன்று நதியில் தெற்குப் பக்கம் வாய்க்கால் வெட்டப்பட்டிருக்கவில்லை.) நீர் குறைந்துவிட்டால் பாம்புகளின் ஆர்ப்பாட்டம்தான். பாம்பு கடித்து சிலர் இறப்பார்கள். பாம்பினைப் பார்த்தால் இந்துக்களும் கிறிஸ்துவர்களும் முஸ்லிம்களும் அடித்துக் கொல்வார்கள். நீர் குறைந்து வீடுகளில் ஈரம் மாறி காய்ந்து வரும் காலம். அன்று நாங்கள் வசித்துக் கொண்டிருந்த வீடு வாப்பா ஒரே மாதத்தில் உண்டாக்கியது. நதியின் இக்கரையில் அப்போது வாப்பாவிற்கு ஒரு பலசரக்குக் கடை இருந்தது. எனக்கு நினைவு தெரிந்த காலத்தில் வாப்பாவிற்கு மரத்தடி வியாபாரம்தான் வேலையாக இருந்தது. மரத்தடிகளால் ஆன மிதவையை நதியின் வழியாகக் கொண்டு வந்து கரையில் ஏற்றி நிறுத்தியிருப்பார். அந்தக் காலத்தில் நான் காலையில் எழுந்தவுடன் பார்ப்பது யானைகளைத்தான். மரத்தடி களை ஏற்றுவதற்காகக் கொண்டு வரப்பட்டிருக்கும் யானைகளை.

அன்றொரு நாள் இரவு பதினோரு மணிக்கு நான் சிறுநீர் கழிக்க வேண்டும் என்பதற்காக எழுந்தேன். பார்த்தபோது சமையலறைக்கு அருகிலிருந்த மண்ணால் ஆன திண்ணைக்கு முன்னால், மணல் பரப்பப்பட்ட மூன்று கற்களை வைத்து தேங்காய் மட்டைகளை எரிய வைத்து உம்மா நெய்யப்பம் தயாரித்துக் கொண்டிருந்தாள்.

வாப்பாவும் மற்ற பிள்ளைகளும் உள்ளே உறக்கத்தில் இருந்தார்கள். உம்மா விற்குத் துணையாக பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒரு இளம் பெண் இருந்தாள். அவள் கொஞ்சம் தேங்காய் நார்களைக் கொண்டு வந்து கயிறு பிரித்துக் கொண்டிருந்தாள். ஒரு சிறிய மண்ணெண்ணெய் விளக்கு உம்மாவிற்கு அருகில் பிரகாசமாக எரிந்து கொண்டிருந்தது. வாசலிலும் பிற இடங்களிலும் அடர்த்தியான இருட்டு இருந்தது. நானும் இருட்டிற்குள் நுழைந்தேன். வாசலுக்கு அருகில் புதியதாக தோண்டப்பட்ட கிணறு இருந்தது. அதற்கு அரைச்சுவர் கட்டப்படாமல் இருந்தது. கிணற்றின் கரையில் இருந்த பானையில் நீர் மூடி வைக்கப்பட்டிருந்தது. நான் இருட்டில் சிறுநீர் கழித்து விட்டு கழுவிக்கொண்டு வந்து உம்மாவின் அருகில் உட்கார்ந்து, முறத்திலிருந்து நெய்யப்பத்தை எடுத்து பிய்த்து தின்ன ஆரம்பித்தேன். நான் வாசலை நோக்கி கால்களை நீட்டி வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தேன். நான் கால்களை ஆட்டும்போது பிரித்துக் கொண்டிருக்கும் கயிற்றில் கால்கள் பட்டன. அப்படியே நெய்யப்பத்தைத் தின்று கொண்டிருக்கும்போது, திடீரென்று நான் கதகளியில் முத்திரை காட்டுவதைப் போல இருந்து விட்டேன். ஒரு அசைவும் இல்லை. வலக் கையில் இருந்த நெய்யப்பத்தை வாய்க்கு கொண்டு செல்கிறேன். அப்படியே நின்று விடுகிறது. காரணம், என்னுடைய வலக் காலின் முழங்காலுக்கு அருகில் பாம்பின் வால் அசைகிறது. வளைந்த வால் அல்ல. பருமன் குறைந்து வளையாமல் இருக்கும் கறுப்பு நிற வால். தலையை என்னுடைய பாதத்தில் வைத்துவிட்டு பாம்பு என்னுடைய காலில் அழகாகச் சுற்றியிருந்தது. கறுப்பு நிறப் பாம்புதான். ஆங்காங்கே வெள்ளை நிறத்தில் புள்ளிகள் இருக்கின்றனவோ என்று சந்தேகம். நான் அப்படி உட்கார்ந்திருப்பதை கயிறு பிரித்துக் கொண்டிருந்த இளம்பெண் பார்த்தாள். அவளுக்கு சிரிக்க வேண்டும் போல தோன்றியது. ஆனால், திடீரென்று சிரிப்பு பயங்கரமான கூச்சலைப் போன்ற அழுகையாக மாறியது. உம்மாவும் பார்த்துவிட்டாள். உம்மாவும் இளம்பெண்ணும் சேர்ந்து வாய்விட்டு உரத்த குரலில் கூப்பாடு போடத் தொடங்கினார்கள். வாப்பா எழுந்து வந்தார். எரிந்து கொண்டிருந்த கயிறு, பந்தம், விளக்குகள், பிரம்புகள் ஆகியவற்றுடன் சில நொடிகளில் பக்கத்து வீடுகளில் இருந்து பல வகைப்பட்ட ஜாதிகளையும் மதங்களையும் சேர்ந்த பத்து முப்பது ஆட்கள் வாசலில் கூடிவிட்டார்கள். என்ன செய்ய வேண்டும் என்று யாருக்கும் ஒரு பிடியும் கிடைக்கவில்லை. விளக்கு களின் ஒரு பெரிய அரை வட்டம் வாசலில் இருந்தது. வெண்மை நிறத்தில் கால், "பளபளா’’ என்று மின்னிக் கொண்டிருந்த கறுப்பு நிறப் பாம்பு. மூச்சை அடக்கிக் கொண்டு நிற்பதற்கு மத்தியில் "அசையக்கூடாது அசையக்கூடாது' என்று யாரோ கூறினார்கள். தொடர்ந்து யாரோ கூக்குரல் எழுப்பினார் கள். சத்தத்தைக் கேட்டு என்னுடைய மாமா வந்தார்.

நான் அசையாமல், மூச்சைக்கூட ஒழுங்காக விட முடியாமல் இருந்தேன்.

"என்ன ஜாதி?' -யாரோ கேட்டார்கள். பாம்புகளின் இனத்தை நன்கு தெரிந்தவர்கள் சொன்னார்கள். கரும்பாம்பு என்ற இனத்தைச் சேர்ந்த- பயங்கர விஷத்தைக் கொண்ட பாம்புதான் என்னுடைய காலில் சுற்றியிருக்கிறது.

ஏதோ பச்சை மருந்து அரைத்துக் கலக்கப்பட்ட நீரைத் தெளித்தால் அது இறங்கிப் போய்விடும். வாப்பா சொன்னார்:

“வேண்டாம்.''

நீரைத் தெளித்து அது என்னுடைய காலில் கடித்துவிட்டால்...?

“அது இறங்கி வர்றப்போ நாம கொல்வோம்.'' -சிலர் கொல்வதற்குத் தயாரானார்கள். ஒரு அற்புதத்தைக் கொண்டது என்னுடைய காலில் சுற்றியிருக்கிறது என்று எனக்குத் தோன்றவில்லை. அது முழுமையாக முறுக்காமல் சுற்றியிருந்தது. அது எதற்காக என்னுடைய காலில் சுற்ற வேண்டும்? நான் வாசலில் பாய்ந்து சென்றபோது அது அங்கே இருந்திருக்கிறது. இருட்டில் சென்றபோது விளக்கை எடுத்துக்கொண்டு செல்லவில்லை. அதன்மீது கால்களை வைத்திருந்தால்...? பாம்பு கடித்து மரணமடைந்த பலரைப் பற்றியும் நான் நினைத்துப் பார்த்தேன். ஒரு ஐந்து நிமிடங்கள் கடந்தபிறகு எனக்கே தெரியாமல் அது சுற்றி இருந்ததை விடுவித்துக்கொண்டு ஆட்களுக்கு மத்தியில் அஸ்திரம் புறப்பட்டு செல்வதைப் போல ஒரு பாய்ச்சல்.

நான் மூச்சைவிட்டேன். ஏதோ பச்சை மருந்தை அரைத்து கலக்கிய நீரைக் கொண்டு வந்து கழுத்திற்குக் கீழே என்னைக் கழுவினார் கள்- பாம்பு சுற்றிய காலையும். வந்தவர்கள் எல்லாருக்கும் நெய்யப்பமும் சுடும் தேநீரும் தந்தார்கள்.

இதுதான் பாம்பிற்கும் எனக் குமிடையே இருக்கும் முதல் உறவு!

 

+Novels

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

தந்தை விழுந்தபோது...

March 8, 2012,

மகாலட்சுமி

March 22, 2013,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel