பாம்பு வழிபாடு - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7306
அந்த காலத்தில் பாம்பு பிடிப்பது என்பது முக்கியமான வேலையாக இருந்தது. நீர்ப் பாம்பு, மண்ணுளிப் பாம்பு போன்ற பாம்புகளை விரட்டி வாலைப் பிடித்துத் தூக்குவேன். தலயோலப் பறம்பில் இருந்த வீட்டின் முன் பக்கத்தில் பொதுச்சாலை இருந்தது. அன்று அது வெறும் மணல் போட்ட சாலையாக இருந்தது. மழை பெய்யும்போது, ஆங்காங்கே வாய்க்கால்கள் நிறைந்து சாலையில் நீர் இருக்கும். மீன்களும். நீர் வேகமாக வற்றிவிடும். பெரிய விரால் மீன்கள் சில நேரங்களில் வழி தவறி சாலையில் நெளிந்து வரும். அந்தக் காலத்தில் வாப்பா ஒரு எலெக்ட்ரிக் டார்ச் விளக்கைக் கொண்டு வந்தார். அடர்த்தியான வட்ட வடிவ கண்ணாடியைக் கொண்டது. அதிலிருந்து மூன்று வகையான வெளிச்சம் வரும். பச்சை, சிவப்பு, மஞ்சள். அந்த விளக்கை மற்றவர்களுக்குக் காட்டுவதற்காகவும் ஏதோ பொருள் வாங்குவதற்காகவும் நான் ஒரு மாலை நேரத்தில் சந்தைக்குப் போயிருந்தேன். எல்லா கடைகளும் அங்கேதான் இருந்தன. அதிக தூரமில்லை. சந்தையில் இருந்தபோது ஒரு மழை பெய்தது. மழை நின்றதும் நான் வீட்டிற்கு வந்தபோது, வெள்ளை நிற- மணல் நிறைந்த சாலையின் நடுவில் ஒரு நல்ல பாம்பு வந்து கொண்டிருக்கிறது. நான் வேலியிலிருந்து ஒரு கடலாமணக்கு குச்சியை ஒடித்து எடுத்து பாம்பை நோக்கிச் சென்றேன். பார்த்தபோது ஒரு பெரிய விரால் மீன்!
அவனை அப்படியே பிடித்துக் கொண்டு போய் வீட்டில் உம்மாவிடம் கொடுத்தேன். அதற்குப் பிறகு நான் விரால் மீனைச் சாப்பிடுவதில்லை. அதைப் பார்க்கும் போதெல்லாம் நல்ல பாம்பு நினைவில் வந்துவிடும்.
அன்று ஒரு மதிய நேரத்தில் மழை பெய்து முடிந்தபோது, சாப்பிட்டு முடித்து பள்ளிக்கூடத்திற்குப் போய்க் கொண்டிருந்தேன். வீட்டில் முன் பக்கத்தில் இருந்த பாதையில் நீர் நிறைந்திருந்தது. அங்கு ஒரு இளம் பெண் நீரில் ஒரு கூடையைக் கவிழ்த்து வைத்திருப்பதைப் பார்த்தேன். அவள் என்னிடம் சொன்னாள்:
“இதில் ஒரு நீர்ப் பாம்பு இருக்கு.''
நான் சொன்னேன்:
“நீ கூடையை எடு. நான் அதை வாலைப் பிடித்துத் தூக்குறேன்.''
அவள் கூடையை மெதுவாகத் தூக்கினாள். வால் பகுதி வெளியே வந்தது. நீர்ப் பாம்பு, மண்ணுளிப் பாம்பு ஆகியவற்றின் வால்கள் ஊசியைப் போல இருக்கும் என்று கூறினேன் அல்லவா? சில இனத்தைச் சேர்ந்த பாம்புகளின் வால்களும் அப்படித்தான். ஆனால், நல்ல பாம்பு முதலானவையின் வால் "டங்கு' என்று வந்து நிற்கும்! அதன் வால் ஊசியைப் போல இல்லை. திடீரென்று அதன் பொருள் எனக்கு விளங்கவில்லை. நான் அந்த வாலைப் பிடித்துத் தூக்கி ன். மொத்தத்தில் ஒரு மாதிரியான வெள்ளை நிறத்தில் இருந்தது. அது பாதியிலிருந்து இருந்த பகுதியை வளைத்து மேல் நோக்கி உயர்த்தி படத்தை விரித்துக் கொண்டு நின்றது.
"என் உம்மா, நல்ல பாம்பு!'
நான் அதைத் தரையில் போட்டுவிட்டு ஓடினேன்.