தி ரீடர்
- Details
- Category: சினிமா
- Written by சுரா
- Hits: 4094
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
தி ரீடர்
(ஹாலிவுட் திரைப்படம்)
எனக்கு மிகவும் பிடித்த, கவித்துவ உணர்வு கொண்ட ஒரு அருமையான படம் இது. 2008ஆம் ஆண்டில் திரைக்கு வந்த இப்படம் ஜெர்மன் மொழியில் இதே பெயரில் எழுதப்பட்ட நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது.
கேட் வின்ஸ்லெட்டின் அபாரமான நடிப்புத் திறமையை வெளிப்படுத்திய படம் இது.
1995ஆம் ஆண்டில் படத்தின் கதை தொடங்குகிறது. வழக்கறிஞரான மைக்கேல் முந்தைய இரவு ஃப்ளாட்டில் தன்னுடன் தங்கிய பெண்ணுக்காக காலைச் சிற்றுண்டி தயாரிக்கிறான். அவள் அங்கிருந்து கிளம்ப, தன்னுடைய டீன்-ஏஜ் மகளைப் பார்ப்பதற்காக அவன் கிளம்புகிறான்.