நூற்றியொரு நாக்குகள் - Page 3
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7959
ஒரு நாள் கட்டாயம் வருவதாகச் சொன்னார். இப்போது தான் பஸ்ஸுக்காகக் காத்திருப்பதாகக் கூறினார்.
நான் சொன்னேன்: “ஏகப்பட்ட நேரம் இங்கேயே நின்னுக்கிட்டு இருக்கணும். பஸ் இங்கே எப்பவாவதுதான் வரும்...''
அவர் சொன்னார்:
“எனக்கு ஒண்ணும் அவசரமில்ல...''
பிறகு என்னைப் பார்த்த அவர், எந்தவித காரணமும் இல்லாமல் விழுந்து விழுந்து சிரித்தார்.
நான் முன்னால் நடந்து கொண்டிருந்தேன்.
என் நடையில் எந்தவித கம்பீரமும் இல்லை. ஒரு அப்பிராணி மனிதனைப்போல நடந்தேன். சிறிது தூரம் சென்றதும் என் மனைவி என்னைப் பார்த்து, இனிமையான குரலில் கேட்டாள்:
“அந்த ஆளு ஏன் அப்படி சிரிச்சாரு?''
நான் சொன்னேன்:
“அவர் தாராளமா அப்படி சிரிக்கலாம். காரணம்- அவருக்கு இன்னும் கல்யாணம் ஆகல. இனிமேலும் கல்யாணம் செஞ்சுக்கப் போறதில்ல...''
மகள் கேட்டாள்: “அம்மாவோட நிக்கார துணியை வாங்க லியா?''
நான் சொன்னேன்: "மகளே, அது நம்ம அம்மாவோட துணி இல்ல. அவரோட துணி...''
என்னுடைய அக்னி சாட்சி விஷத்தில் நனைத்த நாக்கில் கொஞ்சம் சர்க்கரையைத் தூவி விட்டவாறு கேட்டாள்:
“நான் கேட்டதுக்கு என்ன பதிலையே காணோம்...''
மகள் கேட்டாள்:
“அவரு நிக்கரிப்பாரா டாட்டா?''
“மகளே, அவர் பிரார்த்திப்பார்...'' நான் சொன்னேன்: “எந்த நாளிலும் முடிவடையாத ஒரு பிரார்த்தனைதான் வாழ்க்கை என்பது...''
என் மனைவி அத்தரில் நாக்கை நனைத்தவாறு கேட்டாள்:
“அவரு அப்படி குலுங்கிக் குலுங்கி சிரிச்சதுக்கான ரகசியம் என்ன?''
“ரகசியமும் கிடையாது... ஒண்ணும் கிடையாது. ஏதாவது மனசுல நினைச்சிருப்பாரு. சிரிச்சிருப்பாரு. வேணும்னா நீயே கேட்டுக்கோ!''
“வேணும்னான்னு இல்ல...'' மனைவி சொன்னாள்: “நிச்சயமா நான் கேட்கத்தான் போறேன்.''
“தாராளமா கேட்டுக்கோ.'' நான் ஒரு மாதிரி ஆங்கிலத்தில் கூறினேன்: “ராமு கார்யாட் (அந்தப் பெயர் என்றும் நிலைத்து நிற்கட்டும்) -அந்தத் தடியன்தான் எல்லாத்துக்கும் முக்கிய காரணம். நம் பரமு இருக்கிறானே! அதாவது- கெ. பரமேஸ்வரன் நாயர்... (இந்தப் பெயரும் என்றும் நிலைபெற்று நிற்கட்டும்). ஆனால், நினைச்சுப் பார்க்கிறப்போ நாயர் சமுதாயத்தை (ஸாரி... ஆண் நாயர்களை மட்டும்) ஒரே மூச்சில் ஒழிச்சுக் கட்டினா என்னன்னு இப்போகூட மனசுல வெறி உண்டாகுது...''
மனைவி சொன்னாள்:
“பரமு ஒரு அப்பிராணி- பாவம்...''
நான் சொன்னேன்:
“அவர் நாயர் சமுதாயத்தைச் சேர்ந்த ஆளு. பாவமே கிடையாது...''
மனைவி கேட்டாள்:
“அப்படியென்ன நாயர்கள் உங்களுக்குப் பெரிசா துரோகம் பண்ணிட்டாங்க?''
நான் அவளுக்கு விஷயத்தைச் சொன்னேன். அந்தச் சம்பவத்தை இப்போது உங்களுக்கு நான் கூறப்போகிறேன்.
பெரும் மதிப்பிற்குரிய தடியன் ராமு கார்யாட் திருமணம் செய்து கொள்ளப் போகிறான். இதில் யாருக்காவது எதிர்ப்பு இருக்குமா என்ன? நூற்றியொரு நாக்குகளை வைத்துக்கொண்டு எங்கேயோ சதி என்ற பெயரில் இருக்கும் ஒரு சௌபாக்கியவதி சந்தன வண்ண முகத்தை வைத்துக்கொண்டு ராமுவிற்காகக் காத்திருக்கிறாள். ராமு என்னிடம் சொன்னான்:
“பஷீர், நீங்க கல்யாணத்துக்கு கட்டாயம் வரணும். ஏதாவது சாக்குப்போக்கு சொல்லக்கூடாது. பஷீர்... நீங்க மட்டும் வரலைன்னா, என் தந்தை மேல சத்தியமா சொல்றேன். இந்தக் கல்யாணம் நடக்காது. இது மட்டும் உண்மை!''
நான் சொன்னேன்: “எல்லாம் நல்ல முறையில நடக்கட்டும். ராமு, மங்களம். ராமுவிற்கும், சௌபாக்கியவதி சதிக்கும், பிள்ளைகளுக்கும் மங்களம் உண்டாகட்டும்!''
ராமு சொன்னான்: “அவ இப்ப ஒரு கன்னி.''
நான் சொன்னேன்: “ஸாரி... கல்யாணம் ஆன பிறகு, பிள்ளைங்க பிறக்கும். அப்ப வாழ்த்துறதுக்கு, மங்களம் சொல்றதுக்கு ஒருவேளை நான் உயிரோட இல்லாம இருந்தா...? அதனால இனிமேல் பிறக்கப் போற பிள்ளைங்களுக்கும் தாய்க்கும் இப்பவே வாழ்த்து சொல் லிர்றேன்.'' (ராமு கார்யாட் மரணமடைந்துவிட்டான். ராமுவின் ஆத்மாவிற்கு கடவுள் நிரந்தர அமைதியைத் தரட்டும்.)
ராமு சொன்னான்: “பஷீர்... நீங்களும் ஒரு கல்யாணம் பண்ணிக்கணும்!''
நான் சொன்னேன்: “நமக்கு பெண்ணெல்லாம் வேண்டாம், ராமு. பெண்ணும் பெட்டைக் கோழியும் இல்லாத இந்த வாழ்க்கை, அழகானதாகவும் மகிழ்ச்சி நிரம்பியதாகவும் இருக்கு. இன்னொரு தடவை உன்னை நான் வாழ்த்துறேன். பெண்ணைத் திருமணம் செஞ்சு ஒரு பெரிய டைரக்டரா நீ வரணும். சரி போ. குட்பை.''
ராமு கார்யாட் புறப்பட்டான். அதற்குப் பிறகு அவனைப் பற்றி எந்தவிதமான தகவல்களையும் காணோம். கல்யாணம் முடிந்து குழந்தை குட்டிகளைப் பெற்று பெரிய ஒரு சினிமா டைரக்டராகி வசதியாக, சந்தோஷமாக வாழ்ந்துகொண்டு இருக்க வேண்டும். நான் உலக விஷயங்களில் மூழ்கிப்போய் அமைதியாக வாழ்ந்துகொண்டு இருக்கிறபோது ஒரு வில்லன் வாழ்க்கையில்...
மனைவி கேட்டாள்: “யார் அது?''
நான் சொன்னேன்: “நாயர்!''
சிறிது நேர அமைதிக்குப் பிறகு நான் என் மனைவியைப் பார்த்து கேட்டேன்: “அடியே... உனக்கு நீச்சல் தெரியுமா?''
அக்னிசாட்சி சொன்னாள்: “எனக்குத் தெரியாது!''
“அப்படின்னா... நீ முதல்ல அதைக் கத்துக்கணும்!'' நான் சொன்னேன்:
“அது ஒரு பெரிய கலை ஆச்சே!''
மனைவி கேட்டாள்: “நீச்சலைத் தெரிஞ்சு என்ன ஆகப் போகுது?''
“நாயர்கள் நீச்சல் தெரியாம தண்ணில முங்கி சாகுறப்போ நீ நீச்சலடிச்சுப் போய் அவங்களைக் காப்பாத்தாம திரும்பி வரணும்...''
மனைவி கேட்டாள்:
“அது பாவம் இல்லியா?''
“இல்லடி...'' நான் சொன்னேன்: “அந்த வில்லன் நாயர் யாருன்னு நினைக்கிறே? நம்ம பரமுதான்.'' தொடர்ந்து அவளிடம் எல்லாவற்றையும் விளக்கிச் சொன்னேன். ஒரு நாள் பரமு என்னைப் பார்த்துக் கேட்டான்:
“குரு... நாம போகலாமா?''
எங்கே என்று கேட்காமலே நான் சொன்னேன்: “நீ போய்க்கோ. நான் வரல...''
பரமு அமைதியான குரலில் சொன்னான்:
“இங்கே இருந்து போன பிறகு அவன் குளிக்கல. பல் தேய்க்கல. ஏன் சவரம்கூட செய்யல...''
“யாரைச் சொல்றே?''
பரமு சொன்னான்:
“ராமு கார்யாட்!''
நான் சொன்னேன்: “குளிக்கலைன்னா ராமுவுக்கு ஒண்ணும் ஆகப் போறதில்ல. சவரம் செய்யலைன்னா அவனுக்கு லாபம்தானே!''
பரமு சொன்னான்: “குரு, நீங்க போகலைன்னா அவனோட கல்யாணம் நடக்காது. அவன் இந்த விஷயத்தை சத்தியம் பண்ணி சொல்லிட்டான். பஷீர் கலயாணத்துக்கு வந்தாத்தான் பல் தேய்ப்பேன்னு ஒரேயடியா சொல்லிட்டான். நீங்க அங்க போனாத் தான் குளிப்பானாம். நீங்க போனாத்தான் சவரமே செய்வானாம். நீங்க போனாத்தான் மணப்பெண் கழுத்துல தாலியே கட்டுவானாம்!''
இப்படி ஒருத்தன் சபதம் செய்தால் ஊர்க்காரர்கள் என்ன நினைப்பார்கள்? நான் சொன்னேன்: