
மறுநாள் காலையில் பஸ் மலையை விட்டு இறங்கும்போது இனம் புரியாத வேதனை குடிகொண்டிருந்த இதயத்தில் அந்தப் பழைய வரி எழுந்து மேலே வந்தது... "அவளுக்கு பயந்து யாரும் நேர்வழியில்..."
ச்சே... திடீரென்று நிறுத்தினேன். மனம் இன்னொரு வரியை நினைத்துப் பார்த்தது "காற்சிலம்பு உரத்துக் குலுங்க ஆடுகிறாயா அம்மா..."
அதை வாய்க்குள் முணுமுணுத்தவாறு மலையை விட்டு இறங்கும்போது சுற்றிலும் பார்த்தேன். அழகான மலைகள், பூமியை நோக்கி இறங்கிக் கொண்டிருக்கும் நீலவானம், இங்குமங்குமாய் நின்றிருக்கும் அழகான பனிப்படலம், இனிய ஒரு மணத்தைப் பரப்பிக் கொண்டிருக்கும் யூக்கலிப்டஸ் மரங்கள், விஷம் குறைவான - அழகான ஊர்ந்து செல்லும் உயிரினங்கள்...
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook