கொத்து முட்டை
- Details
- Category: சமையல்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 2670
கொத்து முட்டை
(Scrambled Egg)
தயாரிக்கும் நேரம் - 15 நிமிடங்கள்
சமைக்கும் நேரம் - 15 நிமிடங்கள்
4 நபர்களுக்கு
தேவையான பொருட்கள் :
• முட்டை - 4
• பெரிய வெங்காயம் - 2
• தக்காளி - 1
• மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
• மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
• கரம்மசாலாத்தூள் - 1 தேக்கரண்டி
• உப்புத்தூள் - தேவையான அளவு
• இதயம் நல்லெண்ணெய் - 50 மில்லி லிட்டர்
அலங்கரிப்பதற்கு
• பெரிய வெங்காயம் - 1
• இதயம் நல்லெண்ணெய் - 50 மில்லி லிட்டர்
செய்முறை :
வெங்காயம், தக்காளி இவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
அலங்கரிப்பதற்குரிய வெங்காயத்தை வட்டமாக நறுக்கிக் கொள்ளவும்.
பாத்திரத்தில் ஒரு மேஜைக்கரண்டி தண்ணீர் ஊற்றி, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், கரம்மசாலாத்தூள், உப்புத்தூள், முட்டைகளைச் சேர்த்து, நன்றாக அடித்துக் கொள்ளவும்.
வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய பொருட்களைப் போட்டு வதக்கவும்.
வதங்கிய பின் முட்டைக் கலவையை ஊற்றி, முட்டை வேகும் வரை கிளறி இறக்கவும்.
மற்றொரு வாணலியில் 50 மில்லி லிட்டர் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வட்டமாக நறுக்கிய வெங்காயத்தைப் பொரித்து எடுத்து வைக்கவும்.
அழகிய கிண்ணத்தில் முட்டையைப் பரவலாகப் போட்டு இதன் மீது பொரித்த வெங்காயத்தைப் போட்டுப் பரிமாறவும்.