போன்லெஸ் மட்டன் மசாலா
- Details
- Category: சமையல்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 2470
போன்லெஸ் மட்டன் மசாலா
(Boneless Mutton Masala)
தயாரிக்கும் நேரம் - 20 நிமிடங்கள்
சமைக்கும் நேரம் - 50 நிமிடங்கள்
4 நபர்களுக்கு
தேவையான பொருட்கள் :
• எலும்பில்லாத ஆட்டுக்கறி - 500 கிராம்
• பெரிய வெங்காயம் - 2
• இஞ்சி - 1 அங்குலம்
• பூண்டு - 6 பல்
• முந்திரிப்பருப்பு - 6
• மிளகு - 1 தேக்கரண்டி
• கறுப்பு ஏலக்காய் - 1
• தனியாத்தூள் - 2 தேக்கரண்டி
• சீரகத்தூள் - 2 தேக்கரண்டி
• மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
• மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
• கிராம்பு - 3
• கறிவேப்பிலை - 1 ஆர்க்கு
• உப்பு - தேவையான அளவு
• இதயம் நல்லெண்ணெய் - 50 மில்லி லிட்டர்
செய்முறை :
கறியை சற்று சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
வெங்காயம், இஞ்சி, பூண்டு இவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
முந்திரிப்பருப்பு, மிளகு, கறுப்பு ஏலக்காய், தனியாத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் இவற்றை அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், கிராம்பு, கறிவேப்பிலை மற்றும் நறுக்கிய பொருட்களைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.
வதங்கிய பின், அரைத்த மசாலாவைச் சேர்த்து சிவக்க வதக்கவும்.
கறி, தயிர், உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும்.
கறி வெந்து, மசாலா கெட்டியானதும் இறக்கி பரிமாறவும்.