ரகசியம் - Page 3
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7043
குஞ்ஞிராமன் டிரைவர் லாரியைத் திருப்பி மலையின் மேல் நோக்கிச் செலுத்தினார். நான்கு மைல்கள் மலையில் ஏறியபோது, ஒரு திருப்பத்தின் மத்தியில் இரண்டு மூன்று லாரிகளும் ஐந்தாறு மனிதர்களும் கூட்டமாக நின்று கொண்டிருப்பதை அவர் பார்த்தார். லாரியை நிறுத்தினார்.
இரண்டு பிணங்களைச் சுற்றி அந்த ஆட்கள் நின்றிருந்தார்கள்.
‘‘என்ன இங்கு?’’ குஞ்ஞிராமன் டிரைவர் இதயத்தின்மீது தன்னையே அறியாமல் கையை வைத்துக் கொண்டு கேட்டார்.
‘‘இரண்டு முஸ்லீம்களின் இறந்த உடல்கள்... நேற்று இரவு ஏதோ லாரியின் மேலிருந்து தவறி விழுந்து இறந்திருக்கிறார்கள்.’’
அங்கு கூடி நின்றவர்களில் ஒருவன் அந்த இறந்த உடல்களைச் சுட்டிக் காட்டிக்கொண்டு பரிதாபத்துடன் சொன்னான்.