சத்திய வாக்குமூலம்
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6670
“நீ சத்திய வாக்குமூலம் அளிக்கணும், அப்படித்தானே?”
“ஆமாம் தோழரே!”
“இன்னைக்கு மதிப்பிற்குரிய இந்திய கம்யூனிஸ்ட் அமைப்பின் சத்திய வாக்குமூல நாள்னு யார் உன்கிட்ட சொன்னது?”
“தோழர் பிரஷ்நேவ் சொன்னாரு.”
“தோழர் பிரஷ்நேவை நீ எங்கே பார்த்தே?”
“நான் தோழரைக் கனவுல பார்த்தேன். இரண்டு செங்கொடிச் சிறகுகளை வீசிகிட்டு, பேட்ரியாட் பத்திரிகையோட ஒரு பிரதியைக் கையிடுக்குல வச்சிக்கிட்டு தோழர் ஒரு தேவனைப் போல பறந்து வந்து என்கிட்ட சொன்னாரு.”
“தோழரோட வேற ஏதாவது அடையாளம்?”
“சதைப் பிடிப்பான கன்னம், வீங்கிப்போன கண், திருட்டுத் தனமான சிரிப்பு - மொத்தத்தில் ஒரு காஞ்ஞிரப்பள்ளி பணக்காரனோட தோற்றம்”.
“தோழர் வேற என்ன சொன்னாரு?”
“செக்கோஸ்லோவாக்யாவிலயும் ஹங்கேரியிலயும் இருக்குற மாதிரி மகத்தான சுதந்திர ஜனநாயக அமைப்புகள் நம்மோட பாரதத்துலயும் உண்டாகணும்னா சோவியத் நாடு, சோவியத் பெண், பேட்ரியாட், ஜனயுகம் ஆகிய பத்திரிகைகளின் விற்பனையை அதிகப்படுத்தணும்னு சொன்னாரு. அதோட ஒரு நல்ல ரகசிய போலீஸ் அமைப்பும் வேணும். ரகசிய போலீஸ் இல்லாத கம்யூனிஸ்ட் கட்சிக்கு என்ன மதிப்பு இருக்குன்னு தோழர் ஆவேசமா கேட்டாரு.”
“சரிதான். இந்தச் சுவருக்கு மத்தியில இருக்குற படம் யாரோடது?”
“தோழர் லெனினோடது.”
“தோழர் லெனினுக்கும் மதிப்பிற்குரிய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையே இருக்கும் முக்கியமான உறவு என்ன?”
“சர்தார் கே.எம். பணிக்கருக்கும் சிறு தாடி இருந்துச்சே!”
“சர்தார் கே.எம். பணிக்கருக்கும் மதிப்பிற்குரிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குமிடையே இருக்குற ரகசிய உறவு என்ன?”
“பணிக்கருக்கும் பணியாட்களுக்குமிடையே இருக்குற உறவு. பிறகு - தோழர் நாயருடன் உள்ள குடும்ப உறவு.”
“நீ தோழர் லெனினையும் தொழிலாளர்களின் சொர்க்கத்தையும் நம்புறியா?”
“நம்புறேன்.”
“சத்தியமா?”
“சத்தியமா.”
“தொழிலாளர்களின் சொர்க்கம் இந்தியாவில் எப்போ வரும்?”
“எ.ஐ.டி.யூ.ஸி. ஐ.என்.டி.யூ.ஸியில இணையிறப்போ சர்தார் கே.எம். மாணிக்கிட்ட கேட்கணும்.”
“தோழர் லெனியோட வலது பக்கம் இருக்குற புகைப்படம் யாரோடது?”
“தோழர் டாங்கேயோடது.”
“தோழர் டாங்கேயோட மகள் பேர் என்ன?”
“ரோஸா.”
“ரோஸா அழகா இருப்பாங்களா?”
“ஆமா...”
“சத்தியமா?”
“சத்தியமா.”
“தோழர் டாங்கே இறந்தால் ரஷ்யாவுக்குப் போவார்னு நீ நம்புறியா?”
“நம்புறேன்.”
“சத்தியமா?”
“சத்தியமா.”
“தோழர் லெனினோட இடது பக்கம் இருக்குற புகைப்படத்துல இருக்குறது யாரு?”
“தோழர் இந்திராகாந்தி.”
“தோழர் இந்திராகாந்தியை வெளிப்படையா தோழர்னு கூப்பிடலாமா?”
“கூப்பிடக்கூடாது.”
“எதுனால?”
“அவரோட இளைய மகன் கோபிச்சுக்குவாரு.”
“இளைய மகனைத் தற்போதைக்குக் கொஞ்சம் தள்ளி இருக்க வச்சா, நீ தோழர் இந்திரகாந்தியை நம்புறியா?”
“நம்புறேன்.”
“சத்தியமா?”
“சத்தியமா.”
“இளைய மகனோட மனைவியை நாம் எப்படி தள்ளி நிறுத்தறது?”
“தடுத்து நிறுத்தலாம்.”
“சத்தியமா?”
“சத்தியமா.”
“தோழர் யஸ்பால் கபூரையும் ஆர்.கெ.தவானையும் பன்ஸிலாலையும் நம்புறியா?”
“நம்புறேன்.”
“தோழர் வித்யாசரண் சுக்லாவை நம்புறியா?”
“நம்புறேன்.”
“தோழர் ஓம் மேத்தாவையும் தோழர் கருணாகரனையும் நம்புறியா?”
“நம்பறேன்.”
“தோழர்ஜி கமலாபதி திரிபாதிஜியை நம்புறியா?”
“நம்புறேன்ஜி.”
“தோழர்ஜியோட மனைவியின் பேர் என்ன?”
“சொல்லக்கூடாதுஜி!”
“எதுனால?”
“அது கட்சி ரகசியம்.”
“சரிதான். மேலே சொன்ன தோழர்களை வெளிப்படையா தோழர்னு சொல்லலாமா?”
“சொல்லக்கூடாது.”
“எதுனால?”
“தோழர்கள் ஜோன், பிரபாகரன், முஸ்தஃபா எல்லாரும் கோப்படுவாங்க.”
“பத்தொன்பது மாதப் புரட்சியில் உனக்கு ஆழமான நம்பிக்கை இருக்கா?”
“இருக்கு.”
“சத்தியமா?”
“சத்தியமா.”
“சரி... தோழர் இந்திராகாந்திக்கு இடது பக்கத்துல இருக்குற ‘ஜனயுகம்’ பத்திரிகையின் தாள் கொண்டு மூடப்பட்ட புகைப்படம் யாரோடது?”
“தோழர் ஆட்சி அதிகார மையத்தோடது.”
“அதை நாம் எதுக்காக மூடி வைக்கணும்?”
“மூடி வைக்க வேண்டியதை மூடி வைக்கணும்னு தோழர் ஏங்கல்ஸ் சொல்லியிருக்காரு.”
“இதை நாம் எவ்வளவு காலத்துக்கு மூடி வைக்கணும்?”
“தோழர் இந்திராகாந்தியோட இரண்டாவது வரவு வரைக்கும்.”
“தோழர் இந்திராகாந்தி இரண்டாவதா வர்றப்போ நாம யாராக இருப்போம்?”
“மகத்தான இந்தியாவின் முற்போக்கு, சோஷலிஸ, ஜனாதிபத்திய சக்திகளின் பந்தத்தை உயர்த்துபவர்கள். உள்ளாட்சி, நிதி, ரகசிய போலீஸ் ஆகிய அமைச்சரகங்கள் நமக்கு கிடைக்கும்.”
“சத்தியமா?”
“சத்தியமா.”
“தோழர் இந்திராகாந்தி இரண்டாவது தடவை எப்படி வருவாரு?”
“வானத்துக்கு மத்தியில் இசைக்கருவி ஒலிக்கும் தேவதைகளும் தேவதூதர்களும் புடை சூழ பெரிய மதிப்புடனும் பிரகாசத்துடனும்...”
“சத்தியமா?”
“சத்தியமா.”
“தோழர் ஆட்சி அதிகார மையத்துக்குக் கீழே அலங்காரம் செய்யப்பட்டு வச்சிருக்குற படம் யாரோடது?”
“தோழர் மேனனோடது.”
“இது கருங்கடல்ல குளிச்சு, வாழ்ந்ததற்கு முன்னாடி உள்ள படமா? இல்லாட்டி பின்னாடியா?”
“பின்னாடி...”
“அதை எப்படி தெரிஞ்சுக்கறது?”
“முகத்துல இருக்குற சந்தோஷத்தைப் பார்த்துத் தெரிஞ்சிக்கலாம்”
“தப்பு. தோழர் மேனன் முகத்துல எப்பவுமே சந்தோஷம் தெரியும்.”
“முகத்துல புதுமையான சோஷலிஸ சிந்தனை வெளிச்சம் இருப்பதைப் பார்த்தா தெரிஞ்சிக்கலாம்.”
“சரிதான். தோழர் மேனனுக்கு ரொம்பவும் சந்தோஷமா இருந்தது எப்போ?”
“மகத்தான பத்தொன்பது மாதப் புரட்சி காலத்துல.”
“மகத்தான பத்தொன்பது மாதப் புரட்சியில் தோழர் மேனனோட பங்கைப் பற்றி சொல்லுங்க...”
“அவரோட பங்களிப்பு மிகப் பெரியது. நாட்டின் மிக உயர்ந்த மரியாதைக்கான விருது கிடைப்பதற்குத் தகுதியானது. மகத்தான இந்திய கம்யூனிஸ்ட் புரட்சியின் பலம் வாய்ந்த உதாரணம் அவர்தான்.”
“தோழருக்கு மரியாதைக்கான விருது ஏன் கிடைக்காமப் போச்சு?”
“கஷ்டகாலம்னு சொல்றதைத் தவிர வேறென்ன சொல்ல முடியும்!”
“தோழர் மேனன், தோழர் கருணாகரன் - இவங்க ரெண்டு பேர்ல நல்ல தோழர் யார்?”
“சொல்லக் கூடாது.”
“எதுனால?”
“அது கட்சியோட ரகசியம்.”
“தோழர் கருணாகரனும் தோழர் மேனனும் எப்போ இரண்டாவதாகவும் வருவாங்க?”
“வானத்துக்கு நடுவுல சங்கு ஊதும் தேவதைகளும், தேவதூதர்களும்...”
“சரி... சரி... தோழர் மேனனின் இடது பக்கம் கண்ணாடி போட்டு வச்சிருக்குற திட்டங்கள் என்ன?”
“இருபதும், அஞ்சும்.”
“இனி அவை எதுக்கு?”
“மகத்தான இந்திய கம்யூனிஸ்ட் புரட்சியின் ரகசியப் போர்ப் பிரிவின் அடிப்படைத் திட்டங்கள். நம்மோட ரகிசயப் போர் வீரர்களின் கோஷ வார்த்தைகள்...”
“நம்மோட ரகசியப் போர் வீரர்கள் முக்கியமா எங்கே இருப்பாங்க?”
“கேரள மந்திரிசபையில்.”
“இது ஏ.கே. ஆண்டனிக்கும் கெ.எம். மாணிக்குக்கும் தெரியாதா?”
“தெரியாம என்ன...?”
“இந்த ரகசியத் திட்டங்களை உனக்கு மனப்பாடமா தெரியுமா?”
“தெரியும்.”
“சத்தியமா?”
“சத்தியமா.”
“இனி முழங்கால் போட்டு நின்னுக்கிட்டு சொல்லணும். நீ தோழர் கோவிந்தன் நாயரை நம்புறியா?”
“நம்புறேன்.”
“சத்தியமா?”
“சத்தியமா.”
“விருந்தாளி தோழர் கோவூர் அவறாச்சனை நம்புறியா?”