சத்திய வாக்குமூலம் - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6672
“நம்புறேன்.”
“சத்தியமா?”
“சத்தியமா.”
“தோழர் கோவூர் அவறாச்சனுக்கும் ஆட்டுத் தாடி இருக்கும்... பூர்த்தி செய்.”
“தோழர் லெனினுக்கும் ஆட்டுத் தாடி இருக்கும்.”
“இனிய, அழகான, வசீகரமான ரஷ்யாவை நம்புறியா?”
“நம்புறேன்.”
“சத்தியமா?”
“சத்தியமா.”
“பாடுறதை நிறுத்திட்டு வயலை அறுவடை செய்யிற பைங்கிளியை நம்புறியா?”
“நம்புறேன்.”
“சத்தியமா?”
“சத்தியமா.”
“ஜன்மி-முதலாளி-புரோகிதர்.... இந்தக் கூட்டணியை நம்புறியா?”
“நம்புறேன்.”
“ஜோன் ஜேக்கப்- மாணி... இந்தக் கூட்டணியை நம்புறியா?”
“நம்புறேன்.”
“தோழர்கள் அஸஃபாலி அக்கா, எடத்தட்ட நாராயணன் இந்தக் கூட்டணியை நம்புறியா?”
“நம்புறேன்.”
“இதெல்லாம் சத்தியம்?”
“சத்தியம்.”
“செக்கோஸ்லோவாக்கியா, ஹங்கேரி, போலேண்ட் ஆகிய இடங்கள்ல இருக்குற மகத்தான சுதந்திர ஜனாதிபத்திய அமைப்புகள் மீது நம்பிக்கை இருக்கா?”
“நம்பிக்கை இருக்கு.”
“சத்தியமா?”
“சத்தியமா.”
“சோவியத் நாடு நேரு விருது மேல நம்பிக்கை இருக்கா?”
“நம்பிக்கை இருக்கு.”
“சத்தியமா?”
“சத்தியமா.”
“இறுதிப் புரட்சி ரகசிய போலீஸோடதுன்றதுல நம்பிக்கை இருக்கா?”
“நம்பிக்கை இருக்கு.”
“சத்தியமா?”
“சத்தியமா.”
“விருந்தாளி தோழர் அவறாச்சன் மேல நம்பிக்கை வச்சிருக்கற நாம கடவுள் மீது நம்பிக்கை வைக்கலாமா?”
“வைக்கக் கூடாது.”
"நீ கடவுளை நம்பலையா?"
“நம்பலை.”
“சத்தியமா?”
“கடவுள் மேல சத்தியமா.”
“ஆமென்.”