
நலம் தரும் நல்லெண்ணெய் - சுரா(Sura)
(ஆயுள் காக்கும் ஆயில் புல்லிங்...)
தினமும் நல்லெண்ணெய்யில் வாய் கொப்பளித்ததன் மூலம் மிகச்சிறந்த பலனை கண்டதாக திரு.நக்கீரன் கோபால் என்னிடம் கூறினார்:
“நிச்சயம் அதில் மிகப்பெரிய சக்தி இருக்கிறது. ‘ஆயில் புல்லிங்’கை நான் தொடர்ந்து செய்துகொண்டு இருக்கிறேன். உடலில் உள்ள பல குறைபாடுகளையும் அது இல்லாமல் செய்கிறது.
தவிர, நல்லெண்ணெய்யில் வாய் கொப்பளிப்பது புத்துணர்ச்சியையும், உற்சாகத்தையும் அளிக்கிறது. நான் நேரடியாக அனுபவித்துத் தெரிந்துகொண்ட உண்மை இது” என்றார் அவர்.
‘இதயம் வெல்த்’ கருத்தரங்கில் பேசியவர்களும் இணையதளம், அயல்நாட்டு பத்திரிகை ஆகியவற்றில் கூறியவர்களும் ஒரே குரலை எதிரொலிக்கிறார்கள்! எல்லோருமே, ‘நல்லெண்ணெய் அனைத்து நோய்களையும் அழிக்கக்கூடிய சக்தி கொண்டது’என்று கூறும்போதுதான், லட்சக்கணக்கான பிரதிகள் விற்பனையாகும் ‘மலையாள மனோரமா’ நாளிதழின் உரிமையாளர் திரு.மாம்மன் மேத்யூ அவர்கள் நல்லெண்ணெய்யை ‘சர்வ ரோக சம்ஹாரி’ என்று குறிப்பிட்டது என் நினைவுக்கு வந்தது.
‘நல்லெண்ணெய்யில் வாய் கொப்பளித்தால் பற்கள் பலப்படும். இதயநோய் வராது. மூட்டு வலி குணமாகிவிடும்’ என்பதை என் மனம் நினைத்துப் பார்த்தது. அதன்மூலம் ‘ஆயில் புல்லிங்’ பண்ணினால், அதிக காலம் உயிருடன் வாழமுடியும் என்ற உண்மையை நம்மால் தெரிந்துகொள்ள முடிகிறது அல்லவா?
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook