ரத்த அழுத்தம் போயே போச்சு!
- Details
- Category: ஆரோக்கியம்
- Published Date
- Written by சுரா
- Hits: 4518
நலம் தரும் நல்லெண்ணெய் - சுரா(Sura)
(ஆயுள் காக்கும் ஆயில் புல்லிங்...)
செங்கல்பட்டில் இருந்து வந்திருந்த சிவராமகிருஷ்ணன் பேசத் தொடங்கினார்:
“என்னுடைய குடும்பம் ரொம்பவும் பெரிசு. அவ்வளவு பெரிய குடும்பத்தின் மொத்த சுமையையும் நானே சுமக்கவேண்டிய நிலை; அலுவலகத்தில் பல வேலைகளைக் குறைந்த நேரத்தில் செய்யவேண்டிய கட்டாயம். அதனால், நாளுக்கு நாள் என் ரத்த அழுத்தம் உயர்ந்துகொண்டே இருந்தது.
எத்தனையோ மருத்துவர்களைப் பார்த்தேன். எவ்வளவோ மருந்துகளை, மாத்திரைகளை எழுதித் தந்தார்கள். ஆனால், எதுவும் மாறவில்லை.
இந்தச் சூழ்நிலையில்தான் வெளியூரிலிருந்து வந்திருந்த என்னுடைய உறவுமுறை அண்ணன், நல்லெண்ணெய்யின் சிறப்புப் பற்றி கூறினார்.
எனக்கு இருந்ததைப் போலவே, அவருக்கும் நீண்டகாலமாக ரத்த அழுத்தம் இருந்தது என்றும், பல மருந்து - மாத்திரைகளால் குணம் ஆகாத ரத்த அழுத்தம், தினமும் நல்லெண்ணெய் கொப்பளித்ததால், காலப்போக்கில் சீரான நிலையை அடைந்துவிட்டதாகவும் கூறினார்.
எனக்கு அது மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுத்தது. அதேநேரத்தில் ஆச்சரியத்தையும் அளித்தது.
மறுநாளே, ‘ஆயில் புல்லிங்’கை தொடங்கினேன். தினமும் காலையில் வெறும் வயிற்றோடு, சிறிது நல்லெண்ணெய்யை வாயில் ஊற்றி கொப்பளிப்பதை வழக்கமாக்கிக் கொண்டேன்.
ஒரு நாள்கூட நிறுத்தாமல் ‘ஆயில் புல்லிங்’ தொடர்ந்து நடந்தது...
என்ன ஆச்சரியம்..! பல மாதங்களாக என்னைச் சிரமப்பட வைத்த ரத்த அழுத்தம், நல்லெண்ணெய் மகிமையால் சீராகிவிட்டது.
எந்தப் பெரிய செலவும் இல்லாமல் ரத்த அழுத்தத்தைச் சீராக்கக் கூடிய மிகப்பெரும் சக்தியாக நல்லெண்ணெய் இருக்கிறது என்பதை இப்போது உணர்ந்திருக்கிறேன்” என்றார்.