முட்டை ஃப்ரைட் ரைஸ்
- Details
- Category: சமையல்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 3041
முட்டை ஃப்ரைட் ரைஸ்
(Egg Fried Rice)
தயாரிக்கும் நேரம் - 20 நிமிடங்கள்
சமைக்கும் நேரம் - 20 நிமிடங்கள்
4 நபர்களுக்கு
தேவையான பொருட்கள் :
• பாஸ்மதி அரிசி - 300 கிராம்
• முட்டை - 5
• வெங்காயத் தாள் (நறுக்கியது)- 3 மேஜைக்கரண்டி
• சோயா சாஸ் - 2 மேஜைக்கரண்டி
• மிளகுத்தூள் - அரை தேக்கரண்டி
• உப்புத்தூள் - தேவையான அளவு
• இதயம் நல்லெண்ணெய் - 50 மில்லி லிட்டர்
செய்முறை :
அரிசியை உதிர் உதிராக வேக வைத்துக் கொள்ளவும்.
முட்டைகளை உடைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி, உப்புத்தூள் கலந்து நன்றாக அடித்துக் கொள்ளவும்.
வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் அடித்து வைத்துள்ள முட்டையை ஊற்றி, முட்டை வேகும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும்.
இரும்பு வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயத் தாளைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
அதனுடன் வேக வைத்த சாதம், முட்டை, சோயா சாஸ், உப்பு சேர்த்து கிளறி நன்றாக வறுத்து, மிளகுத்தூள் தூவி இறக்கி பரிமாறவும்.