
கொத்துக்கறி பரோட்டா
(Keema Stuffed Parotta)
தயாரிக்கும் நேரம் - 30 நிமிடங்கள்
சமைக்கும் நேரம் - 45 நிமிடங்கள்
5 நபர்களுக்கு
தேவையான பொருட்கள் :
• மைதா மாவு - 2 கப்
• பெரிய வெங்காயம் - 1
• பச்சை மிளகாய் - 4
• இஞ்சி - 1 அங்குலம்
• பூண்டு - 3 பல்
• முட்டை - 4
• மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
• மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
• மிளகுத்தூள் - அரை தேக்கரண்டி
• கரம்மசாலாத்தூள் - 1 தேக்கரண்டி
• உப்புத்தூள் - தேவையான அளவு
• இதயம் நல்லெண்ணெய் - 100 மில்லி லிட்டர்
செய்முறை :
மைதா மாவுடன் மூன்று மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய், உப்புத்தூள் கலந்து, பிசைந்து மூடி வைக்கவும்.
வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டை நறுக்கிக் கொள்ளவும்.
கொத்துக்கறியை உப்பு சேர்த்து, வேக வைத்துக் கொள்ளவும்.
முட்டையை உடைத்து, முட்டை அடிக்கும் கருவியால் நன்றாக அடித்துக் கொள்ளவும்.
வாணலியில் மூன்று மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய பொருட்களைப் போட்டு வதக்கவும்.
அதனுடன் கொத்துக்கறியைப் போட்டு சில நிமிடங்கள் வதக்கவும். பின், அடித்து வைத்துள்ள முட்டையை சேர்த்து இத்துடன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மிளகுத்தூள், கரம்மசாலாத்தூள் இவற்றை போட்டுக் கிளறி கெட்டியானதும் இறக்கி வைக்கவும்.
பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு பகுதிகளாகப் நிரித்துக் கொள்ளவும்.
ஒரு பகுதி மாவை எடுத்து, பூரிப் பலகையில் வைத்து வட்டமாகத் தேய்த்து, இதன் நடுவே கொத்துக்கறிக் கலவையின் ஒரு பகுதியை வைத்து மாவை இழுத்து உருண்டையாக மூடி, அதன்பின் கையினால் வட்டமாகத் தட்டிக் கொள்ளவும்.
இது போல் எல்லா மாவையும் செய்து வைத்துக் கொள்ளவும்.
தோசைக்கல்லைக் காய வைத்து, சூடேறியதும் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, ஒரு பரோட்டாவைப் போட்டு சுற்றிலும் இதயம் நல்லெண்ணெய் ஊற்றிப் பொரிக்கவும். ஒரு பக்கம் வெந்ததும் திருப்பிப் போட்டு, பொன் நிறமாக சிவந்ததும் எடுத்துப் பரிமாறவும்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook