Category: சினிமா Written by சுரா
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
ஹவ் ஓல்ட் ஆர் யூ? – How Old Are You?
(மலையாள திரைப்படம்)
நான் சமீபத்தில் பார்த்து வியந்த மலையாள திரைப்படம் 'ஹவ் ஓல்ட் ஆர் யூ?' நடிகர் திலீப்பிடமிருந்து குடும்ப வாழ்க்கையில் பிரிந்த பிறகு, மஞ்சு வாரியர் நடித்த படம். அதனால் இந்த படத்திற்கு ஆரம் பத்திலிருந்தே ஒரு மிக பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அதை நூறு சதவிகிதம் சந்தோஷப்படும் அளவிற்கு நிறைவேற்றி தந்திருக்கிறார் படத்தின் இயக்குநரான ரோஷன் ஆன்ட்ரூஸ்.
Category: சினிமா Written by சுரா
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
Stray Dogs - ஸ்ட்ரே டாக்ஸ்
(ஈரானிய திரைப்படம்)
2004ஆம் ஆண்டில் திரைக்கு வந்த படம்.
சில திரைப்படங்களை பார்த்த சில நிமிடங்களில் மறந்து விடுவோம். சிலவற்றை சில நாட்கள் மறக்காமல் இருப்போம். ஒரு சில படங்கள்தாம் எத்தனை வருடங்கள் ஆனாலும், நம் மனதை விட்டு சிறிதும் மறையாமல், சாகா வரம் பெற்று வாழ்ந்து கொண்டிருக்கும். அப்படிப்பட்ட ஒரு படம் இது.
இப்படத்தின் இயக்குனர் Marziyeh Meshkini. பல அருமையான திரைப்படங்களை இயக்கி, உலக அளவில் புகழ் பெற்றிருக்கும் ஈரானிய திரைப்பட இயக்குனர் Mohsen Makmalbaf இன் மனைவி இவர். 2000ஆம் ஆண்டில் ‘The Day I Became a woman’ என்ற சிறந்த படத்தை இயக்கிய Marziyeh Meshkini இயக்கத்தில் வெளியான இரண்டாவது படம் ‘Stray Dogs’.
Category: சினிமா Written by சுரா
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
The Pope’s Toilet - தி போப்’ஸ் டாய்லெட்
(ஸ்பேனிஷ் திரைப்படம்)
2007ஆம் ஆண்டில் திரைக்கு வந்த படம். ஸ்பேனிஷ் மொழியில் எடுக்கப்பட்ட இந்த உருகுவே நாட்டு திரைப்படத்தை இயக்கியவர்கள் Cesar Charlone, Enrique Fernandez.
1988ஆம் ஆண்டில் போப் ஆண்டவர் இரண்டாம் ஜான் பால் பிரேஸில் நாட்டின் எல்லையில் இருக்கும் உருகுவே நாட்டின் ‘மெலோ’ என்ற ஊருக்கு வருகை தந்தார். அப்போதைய சில சம்பவங்களை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டிருக்கிறது.
Category: சினிமா Written by சுரா
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
Travellers and Magicians - ட்ராவலர்ஸ் அண்ட் மேஜிஸியன்ஸ்
(பூட்டானிய திரைப்படம்)
2003ஆம் ஆண்டில் திரைக்கு வந்த படம். பூட்டானின் கால் பகுதி மக்கள் Dzongkha என்ற மொழியை தாய்மொழியாக கொண்டிருக்கிறார்கள். இப்படம் அம்மொழியிலேயே எடுக்கப்பட்டிருக்கிறது.
இந்தப் படத்தின் கதையை எழுதி இயக்கியவர் Khyentse Norbu. Tibetan Buddhism மதத்தைச் சேர்ந்த lama இவர்.
Category: சினிமா Written by சுரா
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
Par-Dela Les Nuages - பார் டெலா டெஸ் நுவாஜெஸ்
(ஃப்ரெஞ்ச் திரைப்படம்)
உலக புகழ் பெற்ற இயக்குனரான Michelangelo Antonioni இயக்கிய படம். 1995ஆம் ஆண்டில் திரைக்கு வந்த இப்படம் இத்தாலியன், ஃப்ரெஞ்ச், ஆங்கிலம் ஆகிய மொழிகள் கொண்டது. ரொமான்டிக் பாணியில் எடுக்கப்பட்ட இப்படம் நான்கு தனித் தனி கதைகளைக் கொண்டது.