Category: சினிமா Published Date Written by சுரா Hits: 8691
மலர் மலராகத் தாவி தேன் குடித்த அந்த வண்டுக்கு, அந்த இரு மலர்களும் சரியான பாடத்தைக் கற்பிக்கின்றன. இந்தரைப் போன்ற நிலையான மனப்போக்கு இல்லாத மனிதர்களுக்கு இப்படிப்பட்ட ஒரு தண்டனை கட்டாயம் தேவைதான்.
தன் வேலைக்காரியின் மகளை தன்னுடைய மகளாகவே நினைத்து வளர்க்கிறாள் பூஜா. ராஜைத் திருமணம் செய்து கொள்ள அவள் மறுத்து விடுகிறாள். ஒரு தனிப் பெண்ணாக வாழ்க்கையை தன்னம்பிக்கையுடன் நடத்துவதில் தான் மிகவும் விருப்பம் உள்ளவளாக இருப்பதாகவும், ஒரு குழந்தையின் தாயாக இருப்பதற்கு வாய்ப்பு கிடைத்ததற்காக தான் பெருமைப்படுவதாகவும் கூறும் அவள், ராஜைத் திருமணம் செய்வது என்னும் விஷயம் தன்னை மிகவும் பலவீனமானவளாக ஆக்கி விடும் என்றும் கூறுகிறாள். அதை அவன் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறான்.
இந்தர் என்ற சந்தர்ப்பவாதியை வாழ்க்கையிலிருந்து விட்டெறிந்த பூஜா, கவிதா என்ற அந்த இரண்டு புதுமைப் பெண்களும் தங்களின் வாழ்க்கைப் பயணத்தை தன்னம்பிக்கையுடன் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர்.
பூஜாவாக வாழ்ந்திருப்பவர் ஷபனா ஆஸ்மி.
கவிதாவாக வாழ்ந்திருப்பவர் ஸ்மிதா பாட்டீல்.
இருவருமே பல அருமையான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து, நடிப்பில் முத்திரை பதித்தவர்கள். இந்த கதாபாத்திரங்களாகவே அவர்கள் உயிர்ப்புடன் வாழ்ந்திருப்பார்கள் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?
இந்தராக - Kulbhushan Kharbanda (பொருத்தமான தேர்வு!)
வேலைக்காரியாக - Rohini Hattangadi
ராஜாக - Raj Kiran (நம் ராஜ் கிரண் அல்ல)
இப்படத்தின் திரைக்கதையை மகேஷ் பட், சுஜித் சென் இருவரும் சேர்ந்து எழுதினார்கள்.
இசை : Chithra Singh, Jagjit Singh
‘அர்த்’ படத்தில் நடித்ததற்காக, சிறந்த நடிகைக்கான தேசிய விருது ஷபனா ஆஸ்மிக்கு கிடைத்தது.
ஃபிலிம் ஃபேர் பத்திரிகை சிறந்த நடிகையாக ஷபனா ஆஸ்மியையும், சிறந்த திரைக்கதாசிரியராக மகேஷ் பட்டையும், சிறந்த துணை நடிகையாக ரோகிணி ஹட்டாங்காடியையும் ‘அர்த்’ படத்திற்காக தேர்வு செய்து, விருதுகள் அளித்தது.