ஸ்நேக வீடு
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 3858
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
ஸ்நேக வீடு
(மலையாள திரைப்படம்)
மோகன்லால் கதாநாயகனாக நடிக்க, பிரபல மலையாள திரைப்பட இயக்குநர் சத்யன் அந்திக்காடு இயக்கிய அருமையான படம். சத்யன் அந்திக்காடு எனக்கு மிகவும் பிடித்த இயக்குநர்.
கடந்த 30 வருடங்களாக ஏராளமான திரைப்படங்களை அவர் இயக்கியிருக்கிறார். அவற்றில் 90 சதவிகிதம் வெற்றிப் படங்கள். தரமான குடும்பக் கதைகளை இயக்குவதில் தொடர்ந்து முத்திரை பதித்துக் கொண்டிருப்பவர் அவர். ‘ஸ்நேக வீடு’ திரைப்படமும் ஒரு மிகச் சிறந்த குடும்பக் கதையே.
இயற்கை அழகு தவழ்ந்து கொண்டிருக்கும் ஒரு கிராமம். அங்கு அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார் மோகன்லால். அவரின் தாய் ‘செம்மீன்’ ஷீலா. மோகன் லாலுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவருக்கு திருமணமாகி, ஒரு பேரனைக் கொஞ்ச வேண்டும் என்று ஆசைப்படுகிறார் ஷீலா.
ஆனால், அது நடக்காமல் இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் ஒரு நாள் சென்னையிலிருந்து கேரளத்திலிருக்கும் அந்த வீட்டின் முன்னால் ஒரு சிறுவன் வந்து நிற்கிறான். தன்னை மோகன் லாலின் மகன் என்கிறான் அவன்.
மோகன் லாலே அதிர்ந்து போகிறார். அவர் எவ்வளவோ மறுத்தும், ஷீலா நம்புவதாக இல்லை. அந்தப் பையனை பேரன் வந்து விட்டான் என்று நினைத்து, ஷீலா கொஞ்சிக் கொண்டிருக்கிறாள்.
அந்தச் சிறுவன் யார்? மோகன் லாலின் மகன்தானா? (நடிகர் திலகம் நடித்த ‘மோட்டார் சுந்தரம் பிள்ளை’ ஞாபகத்தில் வருகிறதா?)
சமீபத்தில் நான் பார்த்த நல்ல மலையாளப் படங்களில் இது ஒன்று.
சிறப்புச் செய்தி – இந்தப் படத்திற்கு இசையமைத்திருப்பவர் ‘இசைஞானி’ இளையராஜா.