கமலத்திற்கு ஒரு கதை - Page 4
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 4529
கதை எழுதி... எழுதி நான் ஐந்தாவது ஃபாரத்தில் தோல்வியடைந்தேன். பாடங்களைப் படித்து கமலம் தேர்ச்சியடைந்தாள். அவள்.... மேல் வகுப்பிலும் நான் கீழ் வகுப்பிலும் படிக்கிறோம். மாற்றுச் சான்றிதழ் வாங்கினேன். இலக்கியவாதியான கைனக்கரி குமாரபிள்ளையின் கையில் சென்று விழுந்தேன்.
நூற்றுக் கணக்கான கதைகளையும் 'ப்ரதிபல'னையும், 'பதித பங்கஜ'த்தையும் எழுதியதற்குப் பிறகும், அந்த முதல் கதை என்னிடம் இருந்தது. பாராட்டுடன். நான் காத்தயைத் திருமணம் செய்து கொண்ட காலத்திலும் அந்த கதையை எங்கோ பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். அது இருந்தது. கொஞ்ச காலங்களாக காணவில்லை......
எங்கு போனதோ, தெரியவில்லை. அந்த தோழியையும் அதற்குப் பிறகு பார்க்கவில்லை. அவள் இப்போது பலருக்கும் பாட்டியாக வாழ்ந்து கொண்டிருக்கலாம். இல்லாவிட்டால் மரணத்தைத் தழுவியிருக்கலாம். உயிருடன் இருந்தால், என்னை நினைப்பாளோ என்னவோ!
முதல் கதை கையில் கிடைத்திருந்தால்.... என்று எனக்கு தோன்றுவதுண்டு. எதற்காகவும் இல்லை.... சற்று வாசித்துப் பார்க்க.