கன்யாகுமரி - Page 3
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7605
"விவேகானந்தர் சுவாமி"- செரியான் சொன்னான்.
"இந்த இடத்தோட பேரு?"
"கன்யாகுமரி"-செரியான் சொன்னான்.
"ஆதியில என்ன இருந்தது?"
"சூனியம்..."-செரியான் சொன்னான்.
"தெய்வம் அப்போ என்ன செஞ்சது?"
"பூமியையும் சர்வ உலகத்தையும் படைச்சது!"
"மொத்தம் எத்தனை தெய்வங்கள்?"
"மூணு பேர்!"
"அவங்க யார் யார்?"
"பாவா, புத்திரன், ருஹாதக்குதிஸ்ஸா."
வத்சலா, செரியானின் இரண்டு கைகளையும் பிடித்து தன் மார்பகங்களில் வைத்தவாறு கேட்டாள்:
"இது எத்தனை?"
"ரெண்டு!"
வத்சலா, செரியானின் வலது கையைத் தன்னுடைய சூனியத்தில் வைத்தவாறு கேட்டாள்:
"இது எத்தனை?"
"ஒண்ணு!"
"ரெண்டும் ஒண்ணும்?"
"மூணு!"
"பாப்பச்சா, இப்போ பயம் இருக்கா?"
"இல்ல..."
வத்சலா, செரியானைச் சுமந்தவாறு திரும்பவும் நீந்தினாள். கேரளா விருந்தினர் மாளிகையை அவர்கள் மீண்டும் அடைந்த போதும், மின்சாரம் வந்திருக்கவில்லை.
மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் மேனேஜர் குறட்டைவிட்டு லாபியில் தூங்கிக் கொண்டிருந்தார். அவரைக் கடந்து போன போது செரியான் சொன்னான்:
"கேரளா மாதிரியே இருக்கு!"
வத்சலா அதிர்ந்தவாறு கேட்டாள்: "என்ன?"
"பவர்கட்"-செரியான் சொன்னான்.
வத்சலாவும் செரியானும் காலை சவாரி போனார்கள். சிறிதுநேரம் சென்றதும், செரியான் சொன்னான்:
"இருந்தாலும்..."
"என்ன பாப்பச்சா?"- வத்சலா மீண்டும் அதிர்ச்சியடைந்து கேட்டாள்.
"இருந்தாலும் கன்யாகுமரி கேரளத்தில் இல்லைன்னு சொன்னா, யார் நம்புவாங்க?"- செரியான் சொன்னான்.
வத்சலா சுவாமி விவேகானந்தரை அன்பு மேலோங்க பார்த்தாள்.