
அடுத்தது இறுதிக் கடிதம். மேட மாதம் 7-ஆம் தேதி எழுதப்பட்டது.
‘உயிர் நாயகரே! நான் நடுங்கிக் கொண்டிருக்கும் கைகளுடன் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். நீங்கள் இதற்கு பதில் எழுத வேண்டாம். பதில் கடிதம் வரும்போது எனக்குத் திருமணம் முடிந்திருக்கும் இப்படிக்கு உங்களுடைய....’
கணவன் இந்தக் கடிதங்கள் எல்லாவற்றையும் தன் மனைவியிடம் காட்டினான். அவள் எதுவும் சொல்லவில்லை. கணவனுக்குக் காதலனை நன்றாகத் தெரியும். எனினும், அவனிடம் என்ன கேட்க முடியும்? தான் திருமணம் செய்திருப்பவளும், தன்னுடன் வாழ்க்கை முழுவதும் வசிக்க வேண்டியவளும், தன்னுடைய குழந்தைகளுக்குத் தாயாக இருப்பவளுமான தன் மனைவியை ஒரு வேற்று மனிதன் முத்தமிடவும் கட்டிப் பிடிக்கவும் செய்திருக்கிறான். அதை மறக்க முடியுமா?
கணவன் நினைப்பான்.
மனைவியின் உதடுகளையும் கண்களையும் மார்பகங்களையும் பார்ப்பான். அவற்றிலிருந்து எதையும் தெரிந்து கொள்வதற்கில்லை. தெரிந்து கொள்ளவும் முடியாது. அங்கு நிறைய ரகசியங்கள் மறைந்து கிடைக்கின்றன. ஆனால், கணவன வீட்டை விட்டு வெளியே செல்வதில்லை. இரவு நேரத்தில் காய்ந்த இலை அசைந்தால்கூட, கணவன் அதிர்ச்சியடைந்து மனைவியைப் பார்த்துக் கேட்பான்:
“அது யாருடி?”
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook